Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

திங்களன்று 17890-ல் ஆரம்பித்த நிஃப்டி, 17771 மற்றும் 18096 என்ற எல்லைகளைத் தொட்டுவிட்டு என்ற அளவில் வியாழன் அன்று 17877-ல் குளோஸானது. வாராந்தர அளவீட்டில் 17635 மற்றும் 17513 என்ற அளவில் சப்போர்ட்டையும் 17955 மற்றும் 18140 என்ற லெவல்களில் ரெசிஸ்டன்ஸையும் கொண்டு நிஃப்டி செயல்பட வாய்ப்புகள் அதிகம்.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

வரும் வாரத்தில் வாலட்டைலிட்டி அதிக மாக இருக்க வாய்ப்பிருப்பதால், ஹைரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் மட்டுமே வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். அவர்களுமே மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே வர்த்தகம் செய்யவேண்டும்.

KEC INTERNATIONAL LIMITED (NSE Symbol: KEC)

15.09.2022 விலை: ரூ.450.95

வாங்கலாம்

405 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு தற்போது 450 என்ற லெவலில் இருக்கிறது. எம்.ஏ.சி.டி (12, 26) 1.28 என்ற அளவிலும், எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 4.24 என்ற அளவிலும், ரிலேட்டிவ் ஸ்டெரெங்த் இன்டெக்ஸ் (14) 60.54 என்ற அளவிலும் இருக்கிறது. சந்தையில் வாலட்டைலிட்டி குறைந்து மீண்டும் சந்தை ஏற்றம் காணுகிற பட்சத்தில் மட்டும் 471 மற்றும் 475 என்ற லெவல்கள் வரை சென்று திரும்புவதற்கான டெக்னிக்கல் சூழல் நிலவுகிறது. சப்போர்ட் லெவல் என்பது 432 மற்றும் 414 என்ற அளவில் இருப்பதால், நிஃப்டி வேகமான இறக்கத்தைச் சந்தித்தால், இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. ஹை ரிஸ்க் எடுக்கக்கூடிய திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் லாங் சைட் வியாபாரம் செய் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே இந்தப் பங்கைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

CONTAINER CORPORATION OF INDIA LIMITED (NSE Symbol: CONCOR)

15.09.2022 அன்றைய விலை: ரூ.762

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (12,26) 18.53 என்ற அளவிலும் செய்கின் மணி ப்ளோ 0.06 என்ற அளவிலும் இருக்கிறது. சந்தையில் வால்யூமுடன்கூடிய ஏற்றம் வருகிறபட்சத்தில் 782 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால் 739 மற்றும் 728 என்ற லெவல்களில் மட்டுமே சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால், மிக அதிகளவில் ரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கை வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

CIPLA LIMITED (NSE Symbol: CIPLA)

15.09.2022 விலை: ரூ.1,033.60

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (12,26) 14.06 என்ற அளவிலும், ரேட் ஆஃப் சேஞ்ச் (12) 3.84 என்ற அளவிலும் இருக் கிறது. 1014 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து கிட்டத்தட்ட 1068 என்ற லெவலைத் தொட்டுவிட்டு தற்சமயம் 1033 என்ற லெவலில் முடிவடைந்துள்ளது.

வால்யூமுடன் கூடிய ஏற்றத்தை இந்தப் பங்கு சந்திக்கும்பட்சத்தில், 1072 மற்றும் 1096 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. சராசரியாக நடக்கும் வால்யூமை விட அதிக வால்யூமுடன் இரண்டு நாள்களுக்கு மேல் ஏறினால் மட்டுமே இது சாத் தியம் என்பதால், டிரேடர்கள் வால்யூமின் மீது தொடர்ந்து கவனம் வைத்து செயல்பட வேண்டியிருக்கும்.

சந்தையில் அதிக வாலட்டை லிட்டி இருந்தால், ஹைரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் மட்டுமே வியாபாரம் செய்ய இந்தப் பங்கைப் பரிசீலிக்கலாம். 1017 என்ற லெவலை ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸாக வைத்துக் கொண்டே ஹைரிஸ்க் டிரே டர்கள் இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

PSP PROJECTS LIMITED (NSE Symbol: PSPPROJECT)

15.09.2022 விலை: ரூ.643

வாங்கலாம்

ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14) 62.94 என்ற அளவிலும், செய்கின் மணி ப்ளோ (21) -0.04 என்ற அளவிலும் இருக்கிறது. 585 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு தற்சமயம் 643 என்ற லெவலில் இருக்கிறது. இறக்கம் வந்து 630 என்ற லெவலில் வால்யூமுடன் கூடிய சப்போர்ட்டை எடுத்தால், மட்டும் 666 என்ற எல்லை வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

வால்யூம் அதிகரிக்க வேண் டியது அவசியம் என்பதால், ஹைரிஸ்க் டிரேடர்கள் இந்த வால்யூம் அளவீட்டின் மீது கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். 621 என்ற லெவலில் சிறியதொரு சப்போர்ட்டும் 603-ல் ஒரு சப்போர்ட்டும் இருப்பதால், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே டிரேடிங் செய்ய ஹைரிஸ்க் எடுக்கிற திறன் கொண்ட டிரேடர் கள் மட்டும் பரிசீலிக்கலாம். அன்றாடம் சராசரி வால்யூம் குறைவாக நடக்கும் பங்கு இது என்பதையும் டிரேடர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக்கான பகுதி இது. வாசகர்கள் வர்த்தகம் செய்யும் முன் செபி பதிவுபெற்ற முதலீடு ஆலோசகருடன் கலந்தா லோசித்த பின்னரே வர்த்தகம் செய்ய வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.