Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

வரும் வாரத்தில் நிஃப்டி யின் மூவ்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அறிவிப்புகள் குறித்த எதிர்ப்பார்ப்பின் அடிப்படையிலேயே இருக்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் மாத எஃப் & ஓ எக்ஸ்பைரியும் வரும் வாரத்தில் நடக்க விருப்பதால், அனைத்து டிரேடர்களுமே மிகவும் எச்சரிக்கையுடனும் மிக மிக குறைந்த எண்ணிக்கையிலும் டிரேடிங் செய்வது குறித்து பரிசீலிக்கலாம்.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

Suprajit Engineering Limited (NSE Symbol: SUPRAJIT)

22.09.2022 விலை: ரூ.340.80

வாங்கலாம்

329 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு, தற்போது 340 என்ற லெவலில் இருக்கிறது. வாலட்டைலிட்டி குறைந்து மீண்டும் சந்தை ஏற்றத்தைக் காண்கிறபட்சத்தில் மட்டும் 348 மற்றும் 360 என்ற லெவல்கள் வரை சென்று திரும்புவதற்கான டெக்னிக் கல் சூழல் நிலவுகிறது. சப்போர்ட் லெவல் என்பது 328 மற்றும் 310 என்ற அளவில் மட்டுமே இருப்பதால், வாலட்டைலிட்டி அதிகரித் தால் வர்த்தகம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

Minda Corporation Limited (NSE Symbol: MINDACORP)

22.09.2022 விலை: ரூ.219.75

வாங்கலாம்

எம்ஏசிடி (12,26) -0.08 என்ற அளவிலும் ரிலேட்டிவ் மொமென்டம் இண்டெக்ஸ் 49.15 என்ற அளவிலும் இருக்கிறது. சந்தையில் வால்யூமுடன்கூடிய ஏற்றம் வருகிறபட்சத்தில் 233 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால் 211 மற்றும் 207 என்ற லெவல்களில் மட்டுமே சப்போர்ட் கிடைக்க வாய்ப் பிருப்பதால், மிக அதிக அளவில் ரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கை வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Tata Consumer Products Limited (Nse Symbol: Tataconsum)

22.09.2022 விலை: ரூ.803.20

வாங்கலாம்

760 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து கிட்டத்தட்ட 830 என்ற லெவலைத் தொட்டுவிட்டு தற்சமயம் 803 என்ற லெவலில் முடிவடைந்துள்ளது. வால்யூமுடன்கூடிய ஏற்றத்தை இந்தப் பங்கு சந்திக்கும்பட்சத்தில் மற்றும் 827 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. சந்தையில் அதிக வாலட்டைலிட்டி இருந்தால், ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டுமே வியாபாரம் செய்வதற்கு இந்தப் பங்கைப் பரிசீலிக்கலாம். 792 என்ற லெவலைட் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸாக வைத்துக் கொண்டே ஹைரிஸ்க் டிரேடர்கள் இந்தப் பங்கை கவனிக்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Mazagon Dock Shipbuilders Limited (NSE Symbol: MAZDOCK)

22.09.2022 விலை: ரூ.460.15

வாங்கலாம்

ரேட் ஆஃப் சேஞ்ச் 15.49 என்ற அளவிலும் செய்கின் எம்.ஏ.சி.டி (12,26) 33.79 என்ற அளவிலும் இருக்கிறது. வால்யூடன்கூடிய ஏற்றம் வந்தால், 472 என்ற எல்லை வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. வால்யூம் அதிகரிக்க வேண்டியது அவசியம் என்பதால், ஹைரிஸ்க் டிரேடர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். 453 என்ற லெவலில் சிறியதொரு சப்போர்ட்டும் அதையும் தாண்டி இறங்கினால் 446-ல் ஒரு சப்போர்ட்டும் கிடைக்கவே வாய்ப் பிருப்பதால், ஹைரிஸ்க் எடுப்பவர்கள் மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே டிரேடிங் செய்ய இந்தப் பங்கைப் பரீசிலிக்கலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக் கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக்கான பகுதி இது. வாசகர்கள் வர்த்தகம் செய்யும்முன் செபி பதிவு பெற்ற ஒரு இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்த பின் வர்த்தகம் செய்ய வேண்டும்.