நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

திங்களன்று 17156-ல் ஆரம்பித்த நிஃப்டி, 17196 மற்றும் 16788 என்ற எல்லைகளைத் தொட்டுவிட்டு வியாழனன்று 16818-ல் குளோஸானது.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

வாராந்தர அளவீட்டில் 16672 மற்றும் 16527 என்ற அளவில் சப்போர்ட் டையும் 17080 மற்றும் 17342 என்ற லெவல்களில் ரெசிஸ்டென்ஸையும் கொண்டு நிஃப்டி செயல் படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

வரும் வாரத்தில் எஸ்&பி குளோபல் மேனுஃபேக்சரிங் பி.எம்.ஐ (செப்டம்பர்) மற்றும் பிரிலிமினரி பேலன்ஸ் ஆஃப் டிரேட் (செப்டம்பர்) உள்ளிட்ட பல டேட்டாக்கள் வெளிவர இருக்கின்றன.

வாலட்டைலிட்டி தொடர் வதற்கு வாய்ப்பிருப்பதால், அதிக எச்சரிக்கையுடனேயே சந்தையில் வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

INDUSIND BANK LIMITED (NSE Symbol: INDUSINDBK)

வாங்கலாம்

29.09.2022 விலை: ரூ.1,151.20

எம்.ஏ.சி.டி (12,26) 28.26 என்ற அளவிலும் கமாடிட்டி சேனல் இண்டெக்ஸ் -83.97 என்ற அளவிலும் இருக்கிறது. சந்தையில் வால்யூமுடன் கூடிய ஏற்றம் வருகிற பட்சத்தில், 1,217 என்ற லெவல்வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் வந்தால், 1105 மற்றும் 1087 என்ற லெவல் களில் மட்டுமே சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால், அதிக அளவில் ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம்.

TORRENT PHARMACEUTICALS LIMITED (NSE Symbol: TORNTPHARM)

வாங்கலாம்

29.09.2022 விலை: ரூ.1,547.90

எம்.ஏ.சி.டி (12,26) -2.48 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் 45.49 என்ற அளவிலும் இருக்கிறது. 1477 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து கிட்டத்தட்ட 1537 என்ற லெவலைத் தொட்டு விட்டு இறங்கிய இந்தப் பங்கு தற்சமயம் 1547 என்ற லெவலில் முடிவடைந்துள்ளது.

வால்யூமுடன்கூடிய ஏற்றத்தை இந்தப் பங்கு சந்திக்கும்பட்சத்தில் மற்றும் 1622 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. சந்தையில் அதிக வாலட்டைலிட்டி இருந்தால், ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டுமே வியாபாரம் செய்ய இந்தப் பங்கைப் பரிசீலிக்கலாம்.

1478 என்ற லெவலை ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸாக வைத்துக்கொண்டே ஹைரிஸ்க் டிரேடர்கள் இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.

ACC LIMITED (NSE Symbol: ACC)

வாங்கலாம்

29.09.2022 விலை: ரூ.2,381.00

எம்.ஏ.சி.டி 32.20 என்ற அளவிலும் ரிலேடிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் 43.84 என்ற அளவிலும், இருக்கிறது. 2280 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு ஏற்கெனவே ஒரு முறை 2747 என்ற லெவல் வரை சென்று திரும்பி மறுபடியும் 2380 என்ற லெவலுக்கு வந்துள்ளது.

வால்யூடன்கூடிய ஏற்றம் வந்தால், 2551 என்ற எல்லை வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

சராசரி வால்யூம் அளவீட்டின் மீது கவனம் செலுத்தி அது அதிகரித்தால் மட்டுமே இந்தப் பங்கில் வியாபாரம் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

2225 என்ற லெவலில் சிறியதொரு சப்போர்ட்டும் அதையும் தாண்டி இறங்கினால், 2163-ல் நல்லதொரு சப்போர்ட்டும் கிடைக்கவே வாய்ப்பிருக்கிறது என்கிறபடியால் ஹைரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்கள் மட்டும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் டிரேடிங் செய்வதற்காக இந்தப் பங்கைப் பரிசீலிக்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

RALLIS INDIA LIMITED (NSE Symbol: RALLIS)

29.09.2022 விலை: ரூ.211.30

224-ல் இருந்த சப்போர்ட் ஒன்றை உடைத்து வேகமாக இறங்கியுள்ளது இந்தப் பங்கு. எம்.ஏ.சி.டி (12,26) -1.84 என்ற அளவிலும், ரேட் ஆஃப் சேஞ்ச் (12, குளோஸிங்) ஆனது -7.00 என்ற அளவிலும் இருக் கிறது.

203 மற்றும் 200 என்ற லெவல்களில் மீண்டும் சப்போர்ட் எடுத்து வால்யூமுடன்கூடிய ஏற்றத்தை சந்தித்தால், 222 மற்றும் 225 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் தொடர்ந்தால் உடனடியாக சப்போர்ட் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் டிரேட் செய்வதற்காக மட்டுமே ஹைரிஸ்க் டிரேடர்கள் இந்தப் பங்கை கருத்தில் கொள்ளலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர் களுக்கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்ட ஒரு விஷயமாகும். வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்கு முன்னால் செபி பதிவு பெற்ற ஒரு இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்த பின்னரே வர்த்தகம் செய்ய வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட் டான ஸ்டாப் லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.