பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

திங்களன்று 17102-ல் ஆரம்பித்த நிஃப்டி, 17428 மற்றும் 16855 என்ற எல்லைகளைத் தொட்டுவிட்டு, வியாழனன்று 17331-ல் குளோஸானது.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

வாராந்தர அளவீட்டில் 16982 மற்றும் 16632 என்ற அளவில் சப்போர்ட்டையும் 17555 மற்றும் 17779 என்ற லெவல்களில் ரெசிஸ்டன் ஸையும் கொண்டு வரும் வாரத்தில் நிஃப்டி செயல்பட வாய்ப்புகள் இருக்கிறது.

வரும் வாரத்தில் இண்டஸ்ட்ரீயல் புரொடக்‌ஷன், மேனுஃபாக்சரிங் புரொடக்‌ ஷன், இன்ஃப்ளேஷன் ரேட் உள்ளிட்ட பல டேட்டாக்கள் வெளி வர இருக்கின்றன.

உலக சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங் களால் வாலட்டைலிட்டி மறுபடியும் வந்து விடும் வாய்ப்பு இன்னமும் இருப்பதால், இந்த வாரத்திலும் அதிக எச்சரிக்கையுடனேயே டிரேடர்கள் சந்தையில் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும். இதை மனதில் நிறுத்தி ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸைத் தொடர்ந்து வைத்துக்கொண்டே ஹைரிஸ்க் டிரேடர்கள் டிரேட் செய்ய வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

LIC Housing Finance Limited (NSE Symbol: LICHSGFIN)

06.10.2022 விலை: ரூ.426.50

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (12,26) 1.21 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் 3.14 என்ற அளவிலும் இருக்கிறது. 394 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு, தற்போது 426 என்ற லெவலில் இருக்கிறது. வால்யூமுடன்கூடிய ஏற்றத்தை சந்திக்கும் பட்சத்தில் அருகிலுள்ள ரெசிஸ்டன்ஸ் 435 என்ற லெவல்வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்புள்ளது.

408 மற்றும் 390 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியான சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால் ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ற அளவில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.

VIP Industries Limited (NSE Symbol: VIPIND)

06.10.2022 விலை: ரூ.699.00

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (12,26) 19.87 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் 65.12 என்ற அளவிலும் இருக்கிறது. சந்தையில் வால்யூமுடன் கூடிய ஏற்றம் வரும்பட்சத்தில் மட்டுமே 713 என்ற லெவல்வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் வந்தால் 691 மற்றும் 670 என்ற லெவல் களில் மட்டுமே சப்போர்ட் கிடைக்க வாய்ப் பிருப்பதால் மிக அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம்.

ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதிக எச்சரிக்கை யுடன் மட்டுமே வர்த்தகம் செய்வதற்கு இந்தப் பங்கை ஹைரிஸ்க் டிரேடர்கள் டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Hindalco Industries Limited (NSE Symbol: HINDALCO)

06.10.2022 விலை: ரூ.412.65

வாங்கலாம்

ரிலேடிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் (14, குளோஸிங்) 53.35 என்ற அளவிலும் ரேட் ஆஃப் சேஞ்ச் (12, குளோஸிங்) 0.12 என்ற அளவிலும் இருக்கிறது. 360 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு முந்தைய ரெசிஸ்டன்ஸான 425 என்ற லெவலைத் தாண்டி வால்யூமு டன் ஏறும்பட்சத்தில் 437 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

402 என்ற லெவலில் சிறிய தொரு சப்போர்ட்டும் அதையும் தாண்டி இறங்கினால், 390-ல் நல்லதொரு வாராந்தர ரீதியான சப்போர்ட்டும் கிடைக்கவே வாய்ப்பிருக்கிறது என்கிற படியால் ஹைரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் மட்டும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் டிரேடிங் செய்ய இந்தப் பங்கை பரிசீலிக்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Gujarat Fluorochemicals LIMITED (NSE Symbol: FLUOROCHEM)

06.10.2022 விலை: ரூ.4,066.70

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி (12,26) 143.66 என்ற அளவிலும், ரேட் ஆஃப் சேஞ்ச் (12, குளோஸிங்) ஆனது 10.83 என்ற அளவிலும் இருக்கிறது. சமீபத்தில் 3537 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து ஏறிக் கொண்டிருக்கும் இந்தப் பங்கு 4195 என்ற எல்லைவரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

ஒட்டு மொத்த சந்தையில் இறக்கம் வந்தாலோ, 4037 என்ற லெவலைத் தாண்டி வால்யூ முடன் இறங்க ஆரம்பித்தாலோ 3901 என்ற லெவலில் சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் டிரேட் செய் வதற்காக மட்டுமே ஹைரிஸ்க் டிரேடர்கள் இந்தப் பங்கைக் கருத்தில் கொள்ளலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக்கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்ட ஒரு விஷயமாகும்.

வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்குமுன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோ சித்த பின்னரே வர்த்தகம் செய்ய வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.