தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

திங்களன்று 17144-ல் ஆரம்பித்த நிஃப்டி, 17098 மற்றும் 17607 என்ற எல்லைகளைத் தொட்டுவிட்டு வியாழனன்று 17563-ல் குளோஸானது. வாராந்தர அளவீட்டில், 17239 மற்றும் 16194 என்ற அளவில் சப்போர்ட்டையும், 17748 மற்றும் 17932 என்ற லெவல்களில் ரெசிஸ் டென்ஸையும் கொண்டு வரும் வாரத்தில் நிஃப்டி செயல்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

தீபாவளி அன்று நடக்கும் முகூர்த் டிரேடிங் தவிர்த்து, மூன்றே டிரேடிங் தினங்களைக் கொண்டிருக்கும் வாரம் என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ள வேண்டும். தவிர, அக்டோபருக்கான எஃப்&ஓ கான்ட்ராக்ட்டுகளின் எக்ஸ்பைரி வரும் வார்த்தில் நடைபெற உள்ளது. மேலும், வரும் வாரத்தில் குறிப்பிடத் தக்க அளவிலான முக்கிய டேட்டா வெளியீடு கள் எதுவும் இல்லாத வாரம் இது.

Can Fin Homes Limited (CANFINHOME)

20.10.2022 விலை: ரூ.520.45

வாங்கலாம்

வியாழனன்று இறுதியில் எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 6.98 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் (14) 47.75 என்ற அளவிலும் இருக்கிறது. வால்யூமுடன் கூடிய ஏற்றம் வருகிறபட்சத்தில் 536 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் வந்தால், 501 மற்றும் 481 என்ற லெவல்களில் மட்டுமே சிறியதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால், மிக அதிக அளவு ரிஸ்க் எடுக்கும் திறனைக் கொண்டிருக்கும் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Shipping Corporation Of India Limited (SCI)

20.10.2022 விலை: ரூ.118.25

வாங்கலாம்

வியாழன்று இறுதியில் எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 0.23 என்ற அளவிலும், ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் (14) ஆனது 52.93 என்ற அளவிலும் இருக்கிறது. சமீபத்தில் 112 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து ஏறிக்கொண்டிருக்கும் இந்தப் பங்கு, 123 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்த சந்தையில் வேகமான இறக்கம் வந்தாலோ அல்லது 116 என்ற லெவலைத் தாண்டி இந்தப் பங்கு மட்டும் வால்யூமுடன் இறங்க ஆரம்பித்தாலோ 111 என்ற லெவலில் மட்டுமே சப்போர்ட் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் டிரேட் செய்வதற்காக மட்டுமே ஹைரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கைப் பரிசீலனை செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Sonata Software Limited (SONATSOFTW)

20.10.2022 விலை: ரூ.509.80

வாங்கலாம்

வியாழன்று இறுதியில் செய்கின் மணி ஃப்ளோ (21) -0.17 என்ற அளவிலும், ரேட் ஆஃப் சேஞ்ச் (12) 0.83 என்ற அளவிலும் இருக்கிறது. 490 என்ற லெவலில் சப்போர்ட் ஏற்கெனவே எடுத்து உள்ள இந்தப் பங்கு, தற்போது 509 என்ற லெவலில் இருக்கிறது.

வால்யூமுடன்கூடிய ஏற்றத்தை இந்தப் பங்கு சந்திக் கும் பட்சத்தில், அருகிலுள்ள ரெசிஸ்டன்ஸான 522 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. 495 மற்றும் 481 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியான சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால், ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் அவரவரர் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ற அளவில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸைக் கொண்டு டிரேட் செய்யும் பொருட்டு இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.

டிரேடிங் தினம் ஒன்றில் சாராசரியாக சந்தையில் வர்த்தக மாகும் எண்ணிக்கை குறைவான அளவில் இருக்கும் பங்கு இது என்பதை டிரேடர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Polycab India Limited (Polycab)

20.10.2022 விலை: ரூ.2,648.00

வாங்கலாம்

வியாழனன்று இறுதியில் ரேட் ஆஃப் சேஞ்ச் (12) 4.18 என்ற அளவிலும், எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 4.99 என்ற அளவிலும் இருக்கிறது. 2560 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு முந்தைய ரெசிஸ்டன்ஸான 2740 என்ற லெவலைத் தாண்ட முடியாமல் தற்போது இறங்க ஆரம்பித்து உள்ளது.

மீண்டும் சப்போர்ட் எடுத்து சராசரியாக நடக்கும் வால்யூமை விட அதிக வால்யூடன் விலை ஏற்றம் நடந்தால் மட்டுமே இந்தப் பங்கு 2741 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. எனவே, வால்யூமின் மீது கவனம் வைத்தே டிரேடர்கள் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும். 2513 என்ற லெவலில் சிறியதொரு சப்போர்ட் டும், அதையும் தாண்டி இறங்கினால் 2376-ல் நல்லதொரு வாராந்தர ரீதியான சப்போர்ட்டும் கிடைக்க மட்டுமே வாய்ப்பிருக்கிறது. எனவே, ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் டிரேடிங் செய்யப் பரிசீலிக்கலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலி சிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக் கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்ட ஒரு விஷயமாகும். வாசகர்கள் வர்த்தகம் செய்யும்முன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்தபின் வர்த்தகம் செய்ய வேண்டும்.