பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

திங்களன்று 18211-ல் ஆரம்பித்த நிஃப்டி, 17969 மற்றும் 18296 என்ற எல்லை களைத் தொட்டுவிட்டு வியாழனன்று 18028-ல் குளோஸானது.

வாராந்தர அளவீட்டில் 17900 மற்றும் 17771 என்ற லெவலில் சப்போர்ட்டையும் 18227 மற்றும் 18425 என்ற லெவல்களில் ரெசிஸ்டன் ஸையும் கொண்டு, வரும் வாரத்தில் நிஃப்டி செயல்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இன்ஃப்ளேஷன், பேலன்ஸ் ஆஃப் டிரேட் உள்ளிட்ட சில டேட்டாக்கள் இந்த வாரம் வெளிவர இருக்கின்றன.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

Hero MotoCorp Limited (NSE Symbol: HEROMOTOCO)

10.11.2022 விலை: ரூ.2,715.00

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 14.18 என்ற அளவிலும், ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,CL) 60.62 என்ற அளவிலும் இருக்கிறது. 2575 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கானது, ஏற்கெனவே சந்தித்த ரெசிஸ்டன்ஸான 2690-யைத் தாண்டி தற்போது 2715 என்ற லெவலில் இருக் கிறது.

2785 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன்கூடிய ஏற்றம் வரும்பட்சத்தில் 2860 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்பு இருக்கிறது. 2628 மற்றும் 2543 என்ற லெவலிலேயே நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால், மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே டிரேட் செய்ய டிரேடர்கள் டிராக் செய்யலாம்.

வாலட்டைலிட்டி அதிக மாக இருந்தால், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் டிரேட் செய்ய மட்டுமே ஹைரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் இந்தப் பங்கைப் பரிசீலனை செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Affle (India) Limited (NSE Symbol: AFFLE)

10.11.2022 விலை: ரூ.1,180.00

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 3.00 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14) 46.18 என்ற அளவிலும் இருக்கிறது. 1147 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு 1200 என்ற லெவலத் தாண்டி வால்யூமுடன்கூடிய ஏற்றத் தைச் சந்திக்கும்பட்சத்தில் மட்டும் 1253 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால் 1115 மற்றும் 1092 என்ற லெவல்களில் மட்டுமே சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு இருப்பதால், மிக அதிக அளவு ரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் அதிக எச்சரிக்கையுடன் மட்டுமே வர்த்தகம் செய்ய இந்தப் பங்கை ஹைரிஸ்க் டிரேடர்கள் டிராக் செய்யலாம்.

Suven Pharmaceuticals Limited (NSE Symbol: SUVENPHAR)

10.11.2022 விலை: ரூ.434.80

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 5.59 என்ற அளவிலும் செய்கின் மணி ப்ளோ (21) 0.14 என்ற அளவிலும் இருக்கிறது. 412 என்ற லெவலில் இருந்த ரெசிஸ்டன் ஸைத் தாண்ட சிரமப்பட்டுக்கொண்டிருந்த இந்தப் பங்கு ஏற ஆரம்பித்து, தற்சாமயம் 434-ல் டிரேடாகிக் கொண்டிருக்கிறது.

450 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் ஏறும்பட்சத்தில் 466 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. 412 மற்றும் 386 என்ற லெவல் களிலேயே வாராந்தர ரீதியான சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால், ஹைரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் மட்டும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ற அளவில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களை வைத்துக் கொண்டு டிரேட் செய்யும் பொருட்டு இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

City Union Bank Limited (NSE Symbol: CUB)

10.11.2022 விலை: ரூ.193.20

வாங்கலாம்

ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, CL) 60.17 என்ற அளவிலும் எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 0.32 என்ற அளவிலும் இருக்கிறது. 185 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு 200 என்ற ரெசிஸ்டன் ஸைத் தாண்ட முடியாமல் 193.20 என்ற லெவலில் தற்போது இருக்கிறது.

வால்யூமுடன்கூடிய ஏற்றம் தொடர்ந்து 196 என்ற லெவலைத் தாண்டினால், 205 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. 187 மற்றும் 182 என்ற லெவல்களிலேயே சப்போர்ட் இருப்பதால், மிக அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் மட்டும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் வர்த்தகம் செய்வதற்காக இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர் களுக்கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்ட ஒரு விஷயமாகும். வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்கு முன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்த பின்னரே வர்த்தகம் செய்ய வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட் டான ஸ்டாப் லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.இன்ஃப்ளேஷன், பேலன்ஸ் ஆஃப் டிரேட் உள்ளிட்ட சில டேட்டாக்கள்இந்த வாரம் வெளிவர இருக்கின்றன!