நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

திங்களன்று 17952-ல் ஆரம்பித்த நிஃப்டி, 17761 மற்றும் 18141 என்ற எல்லை களைத் தொட்டுவிட்டு, வியாழனன்று 17858-ல் குளோஸானது. வாராந்தர அளவீட்டில் 17699 மற்றும் 17541 என்ற லெவலில் சப்போர்ட்டையும் 18079 மற்றும் 18300 என்ற லெவல் களில் வாராந்தர ரீதியிலான ரெசிஸ்டன்ஸையும்கொண்டு, வரும் வாரத்தில் நிஃப்டி செயல்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சந்தையின் போக்கை எப்போது வேண்டுமானாலும் ஒரேயடியாக மாற்றிவிடுவதற்கான வாய்ப்பு இன்னும் தொடர்ந்துகொண்டே யிருப்பதால் அவற்றின் மீது கவனம் வைத்துக்கொண்டும் ரொம்பவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடனும் மட்டுமே டிரேடர்கள் டிரேட் செய்ய வேண்டியிருக்கும்..

Jindal Stainless Limited (NSE Symbol: JSL)

12.01.2023 விலை: ரூ.234.75

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) -1.62 என்ற அளவிலும், கமாடிட்டி சேனல் இண் டெக்ஸ் (14) 1.28 என்ற அளவிலும் இருக்கிறது. 230 என்ற லெவலுக்குக்கீழே போகாமல் வால்யூமுடன் கூடிய ஏற்றத்தைச் சந்தித்தால் (ஐந்து நாள்கள் வால்யூமைவிட அதிகமாக இருக்கும்பட்சத் தில் மற்றும் அந்த மாதிரியான வால்யூமுடன்கூடிய ஏற்றத் தில் 237 என்ற லெவலைத் தாண்டும்பட்சத்தில்) 243 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

223 மற்றும் 217 என்ற லெவலில் மட்டுமே வாராந்தர ரீதியான டெக்னிக்கல் சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு இருப்பதால், இந்த அளவுக் கான ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கும் நோக்கத்துடன் டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

UNO Minda Limited (NSE Symbol: UNOMINDA)

12.01.2023 விலை: ரூ.530

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 0.80 என்ற அளவிலும் ரேட் ஆஃப் சேஞ்ச் (12, CL) 0.80 என்ற அளவிலும் இருக்கிறது. 518 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து உயர்ந்து வரும் இந்தப் பங்கு 550 என்ற ரெசிஸ்டன்ஸைத் தாண்ட முடியாமல் இறங்கி தற்போது 530 என்ற லெவலில் டிரேடாகி வருகிறது.

வால்யூமுடன்கூடிய ஏற்றம் மீண்டும் ஆரம்பித்தால், 538 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால் 524 மற்றும் 519 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியிலான சப்போர்ட் இருக்கிறது என்பதால், இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கக்கூடிய திறன் கொண்ட ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் வியாபாரம் செய்வது குறித்து பரிசீலிப் பதற்காக டிராக் செய்யலாம்.

Sona BLW Precision Forgings Limited (NSE Symbol: SONACOMS)

12.01.2023 விலை: ரூ.428.45

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 2.40 என்ற அளவிலும் செய்கின் மணி ஃப்ளோ (21) -0.25 என்ற அளவிலும் இருக்கிறது. 398 மற்றும் 409 என்ற லெவலில் சப்போர்ட் கிடைத்த இந்தப் பங்கு, தற்போது திசை தெரியா நிலையில் 428 என்ற லெவலில் டிரேடாகிறது.

435 என்ற லெவலை வால்யூமுடன் தாண்டி (சராசரி 5 நாள்கள் வால்யூம் மற்றும் டெலிவரி என்ற இரண்டும் அதிகமான அளவில் நடந்து) உயர்கிற பட்சத்தில் 453 வரை சென்று திரும்பலாம். இறங்க ஆரம்பித்தால், மிகவும் கீழே உள்ள லெவல்களான 411 மற்றும் 392 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியிலான டெக்னிக்கல் சப்போர்ட்டுகள் இருப்ப தால், மிக மிக அதிக ரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் டிரேடிங் செய்ய பரிசீலிக்க டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Gujarat Gas Limited (NSE Symbol: GUJGASLTD)

12.01.2023 விலை: ரூ..466.80

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) -1.60 என்ற அளவிலும், ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் (14, CL) 37 என்ற அளவிலும் இருக்கிறது. 464 என்ற லெவலில் இரண்டு முறை சப்போர்ட் எடுத்து ஏற முயற்சி செய்த இந்தப் பங்கு, ஏற்கெனவே 492 என்ற லெவலைத் தாண்ட முடியாமல் 466-ல் டிரேடாகி வருகிறது.

சராசரியாக ஐந்து நாள்களில் நடக்கும் வால்யூம் மற்றும் டெலிவரி வால்யூமைவிட அதிகமான வால்யூமுடன் வர்த்தகமாகி 474 என்ற லெவலைத் தாண்டி ஏறுகிறபட்சத்தில் 484 என்ற லெவல் வரை சென்று திரும்பும் வாய்ப்பு இருக்கிறது. இறக்கம் வந்தால் 447 மற்றும் 437 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியான சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்த அளவுக்கு அதிக ரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் டிரேடிங் செய்ய டிராக் செய்யலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக் கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பணரீதியான ரிஸ்க் கொண்ட ஒரு விஷயமாகும். வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்குமுன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்தபின் வர்த்தகம் செய்ய வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட் டான ஸ்டாப்லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.