நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

nifவரும் வாரத்தில் நான்கு டிரேடிங் தினங்கள் மட்டுமே உள்ளன. ஜனவரி மாதத்திய எஃப் & ஓ எக்ஸ் பைரி நடைபெற உள்ள வாரம் இது. எக்ஸ்பைரிக்கு உண்டான மூவ்களையே நிஃப்டியில் பெரும்பாலும் எதிர்பார்க்கலாம். இனி வாங்க வேண்டிய பங்கு களைப் பார்ப்போம்.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

Mahindra & Mahindra Limited (NSE Symbol: M&M)

1300 என்ற லெவலில் நல்ல சப்போர்ட்டைக் கொண்ட இந்தப் பங்கு இந்த லெவலைத் தாண்டி இறங்காமல் இருந்து வால்யூமுடன் மீண்டும் ஏற ஆரம்பித்தால், 1363 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால், 1302 மற்றும் 1286 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியிலான சப்போர்ட் இருக்கிறது. எனவே, ரிஸ்க் எடுக்கக்கூடிய ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் டிரேட் செய்ய பரிசீலிக்கலாம்.

ICICI Prudential Life Insurance Company Limited (NSE Symbol: ICICIPRULI)

460 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து ஏறிய இந்தப் பங்கு 488 என்ற லெவலைத் தாண்ட முடியா மல் திணறுகிறது. 488 என்ற லெவலை வால்யூமுடன் கடந்தால், 499 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. 472 மற்றும் 461 என்ற லெவலில் மட்டுமே வாராந்தர ரீதியான டெக்னிக் கல் சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு இருப்பதால், ரிஸ்க் எடுக்கக்கூடிய ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் டிரேட் செய்ய பரிசீலிக்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்...
விற்கலாம்!

Jubilant Foodworks Limited (NSE Symbol: JUBLFOOD)

490 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு தற்போது 510 என்ற லெவலில் டிரேடாகிறது. 518 என்ற லெவலை வால்யூமுடன் தாண்டி (சராசரியாக 5 நாள்கள் வால்யூம் மற்றும் டெலிவரி என்ற இரண்டும் அதிகமான அளவில் நடந்து) ஏற்றத்தை சந்திக்கிறபட்சத்தில் 533 வரை சென்று திரும்பலாம். இறங்க ஆரம்பித்தால் மிகவும் கீழே உள்ள லெவல்களான 497 மற்றும் 483 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியிலான டெக்னிக்கல் சப்போர்ட்கள் இருப்ப தால், எனவே, ரிஸ்க் எடுக்கக்கூடிய ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் டிரேட் செய்ய பரிசீலிக்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்...
விற்கலாம்!

IndusInd Bank Limited (NSE Symbol: INDUSINDBK)

1165 என்ற லெவலில் பல முறை சப்போர்ட் எடுத்துள்ளது இந்தப் பங்கு. இதைத் தாண்டி இனி இறங்காமல் இருந்து 1211 என்ற லெவலைத்தாண்டி சராசரியாக ஐந்து நாள்களில் நடக்கும் வால்யூம் மற்றும் டெலிவரி வால்யூமைவிட அதிகமான வால்யூமுடன் வர்த்தகமாகி ஏற்றத்தை சந்தித்தால் 1278 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால் 1172 மற்றும் 1144 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியான சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, ரிஸ்க் எடுக்கக்கூடிய ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் டிரேட் செய்ய பரிசீலிக்கலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலி சிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக்கான பகுதி இது. இந்தப் பங்குகளில் டிரேட் செய்யும்முன் செபி பதிவுபெற்ற முதலீட்டு ஆலோச கரிடம் கலந்தாலோசித்தபின் டிரேட் செய்ய வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்...
விற்கலாம்!