Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

பங்குகள்... வாங்கலாம்...
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்...

B U Y & S E L L

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

B U Y & S E L L

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்...
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்...

கடந்த வாரத்தில் சந்தை பயமுறுத்தும் வகையிலான நகர்வுகளைக் கொண்ட பேட்டர்னை உருவாக்கி யுள்ளது. இதில் கடந்த ஏப்ரல் மாத இறக்கத்துக்குப் பிறகு, அதிக அளவில் தொடர் இறக்க நகர்வுகள் காணப்பட்டன. ஆனால், அதிலிருந்து ஓரளவுக்குப் பாதுகாத்துக்கொண்ட சந்தை விரைவாகவே மீண்டு புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்தது. அந்த மீட்சி பெரிய அளவில் நகர்வுக்கு உதவியாக இல்லை. மாறாக, நிஃப்டி மீண்டும் இறக்க நிலைக்குத் திரும்பியது. மேலும், இங்கும் அங்குமாக நகர்ந்து, தொடர்ந்து குழப்பமான போக்கை சார்ட்டில் பார்க்க முடிந்தது. பெரும்பாலும் சிறிய வரம்பிலான ஏற்ற இறக்கங் களைக் கொண்ட போக்கு ஐந்து வாரங்களுக்கு இருக்கும் என்பது போலவே காணப்பட்டது.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

இதுபோன்ற நகர்வுகளால் வர்த்தகர்கள் எரிச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. ஏனெனில், லாங் பொசிஷன்களை எடுத்து அதில் தொடரலாம் என்றிருந்த வர்த்தகர் களுக்கு விலை நகர்வுகள் இறக்கத்துக்கு உள்ளானது ஏமாற்றம் அளித்தது. இதனால் லாங் பொசிஷன்களை விற்றுவிட்டு, ஷார்ட் எடுத்த சந்தை மீண்டும் ஏற்றம் கண்டு புதிய உச்சங்களை எட்டி, ஷார்ட் முடிவு களையும் பலனில்லாமல் செய்து விட்டது. இதனால் தின வர்த்தகர்கள் பெரும் வேதனைக்கு உள்ளானார்கள். இவர்கள் மட்டுமல்ல, 1-3 தின வர்த்த கர்களும் சந்தையை எதிர்கொள்வதில் கஷ்டத்தை அனுபவித்தார்கள்.

அதேசமயம், சந்தையின் இத்தகைய போக்குக்கான தீர்வாக நம் கையில் இருப்பது, கடந்த காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகள் வெளியாகும் காலம் அடுத்த வாரம் ஆரம்பிப்பதுதான். இவற்றில் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் தற்போதைய வேதனைகளில் இருந்து மீண்டுவரும் ஆசுவாசத்தைப் பெறலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

கடந்த சில வாரங்களாகவே சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய செய்திகள் பெரிதாக எதுவும் இல்லை. எனவே, சர்வதேச சந்தை களின் போக்கு எதிரொலியாகவே இந்திய சந்தையின் நகர்வும் காணப் பட்டது. சர்வதேச சந்தைகளிலும் மந்தநிலையே காணப்பட்டது. டாலர் விவரிக்க முடியாத அளவுக்கு ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்தது. இதனால் முதலீடுகள் மீதான வளர்ச்சி வீழ்ச்சி கண்டது. பங்குகள் பெரும்பாலும் காளையின் போக்கில் இருந்தன. கமாடிட்டிகளும் விலை உயர்ந்தன.

ஆனால், இவை எதுவும் நம்முடைய சந்தைக்கு உதவவில்லை. காரணம், எஃப்.ஐ.ஐ-க்கள் தொடர்ந்து பங்குகளை விற்றுவந்தனர். உள்நாட்டில் சிறு முதலீட்டாளர்கள் இறக்கங்களின்போது முதலீடுகளை மேற்கொண்டிருந்தாலும், நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ளும் அளவுக்கு உற்சாகமாக இல்லை.

வரும் வாரத்தில் இறக்கங்களின் போது, முதலீடுகளை மேற்கொள்ள லாம். குறுகியகால வர்த்தகர்கள் 15450-க்குக்கீழ் உறுதியான ஸ்டாப் லாஸ் வைத்துக்கொள்ளவும். ஏற்றத்தின் போக்கில் 15850 என்ற நிலையைக் கடந்து நகர்ந்தால் புதிய உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

ஜஸ்ட் டயல் (JUSTDIAL)

தற்போதைய விலை ரூ.1,077.05

வாங்கலாம்

இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்ன் களைப் பார்க்கும்போது, கன்சாலி டேஷனுக்குப் பிறகு, வேகமான ஏற்றத்தை வழங்கி, அதிலிருந்து மீண்டும் மற்றுமோர் ஏற்றத்தைத் தருவதாக உள்ளன. இந்தப் போக்கு கடந்த சில காலங்களாகத் தொடர்ந்து காணப்படுகிறது. தற்போது இந்தப் பங்கு சிறிய கன்சாலிடேஷன் நிலை யிலிருந்து ஏற்றம் அடையத் தயாராக இருக்கிறது. எனவே, நல்ல ஏற்றத்தை எதிர்பார்க்கலாம். குறுகிய காலத்தில் ரூ.1,140-1,200 வரை உயர வாய்ப் புள்ளது. ரூ.1,050 ஸ்டாப்லாஸுடன் தற்போதைய விலையில் வாங்கலாம்.

வர்தமான் டெக்ஸ்டைல் (VTL)

தற்போதைய விலை ரூ.1,441.00

வாங்கலாம்

டெக்ஸ்டைல் துறைக்கு சாதகமான செய்திகள் வந்தவண்ணம் இருப்பதால், அவற்றில் சிறப்பான செயல்பாட்டுடன் இருக்கும் நிறுவனமான வர்த்தமான் டெக்ஸ்டைல் பங்கு கவனம் பெற்றுள்ளது. இந்தப் பங்கில் அருமையான ஏற்றத்தின் போக்கை காணமுடிகிறது. இந்த ஏற்றத்தின் போக்கு தொடர்ந்து காணப் படுவதையும், வரும் வாரத்தில் ஒரு மீட்சி இருப்பதையும் பார்க்க முடிகிறது. வரும் நாட்களில் இந்தப் பங்கு ரூ.1,600 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.1350 ஸ்டாப் லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

ஏகிஸ் லாஜிஸ்டிக்ஸ் (AEGISCHEM)

தற்போதைய விலை ரூ.368.95

வாங்கலாம்

இந்தப் பங்கிலும் நல்ல ஏற்றத்தின் போக்கு காணப் படுவதை வாராந்தர சார்ட்டில் பார்க்க முடிகிறது. ஏகிஸ் லாஜிஸ்டிக்ஸ் தற்போது மேலும் ஏற்றத்தை நோக்கி நகர்ந்து அதன் இலக்கு நிலை 1.618 என்ற விரிவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்க லாம். இந்த அறிகுறிகள் புதிய உச்சங்களை நோக்கி இட்டுச் செல்ல வாய்ப்புள்ளது. வரும் வாரங்களில் ரூ.450-500 என்ற இலக்கை எட்டும் என எதிர்பார்க்கலாம். ரூ.330 ஸ்டாப் லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism