Published:Updated:

ஷேர்லக்: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்பும் பங்குகள்!

ஷேர்லக்

பிரீமியம் ஸ்டோரி

லுவலகத்துக்கு அருகில் உள்ள காபி ஷாப்புக்கு ஷேர்லக்கை வரச் சொல்லியிருந்தோம். சரியாக நான்கு மணிக்கு வந்துசேர்ந்தார். சூடாக ஏலக்காய் டீயைப் பருகிக்கொண்டே நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஹெச்.டி.எஃப்.சி பங்கின் சந்தை மதிப்பு எகிறி இருக்கிறதே, என்ன காரணம்?

“வீட்டுக் கடன் வழங்குவதில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஹெச்.டி.எஃப்.சி-யின் பங்கு விலை அதிகரித்ததால், அதன் பங்குச் சந்தை மதிப்பு கடந்த வியாழன் அன்று ரூ.4 லட்சம் கோடியைத் தாண்டியது. வியாழன் அன்று இந்தப் பங்கின் விலை 2.52% உயர்ந்து, ரூ.2,344-க்கு வர்த்தகமானதால், அதன் சந்தை மதிப்பு ரூ.4,04,385 கோடியாக அதிகரித்தது. சந்தை மதிப்பின் அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளது ஹெச்.டி.எஃப்.சி. முதலிடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு ரூ.7,99,865 கோடி.’’

ஷேர்லக்: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்பும் பங்குகள்!

நிஃப்டி ஆட்டோ இண்டெக்ஸ் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்திருப்பது எதைக் காட்டுகிறது?

“இப்போதுள்ள பொருளாதார நிலையில் யாரும் கார் வாங்க விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. நிஃப்டி ஆட்டோ இண்டெக்ஸில் இடம்பெற்றிருக்கும் எய்ஷர் பங்கின் விலை கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. அதுபோல, எம் அண்டு எம் நிறுவனத்தின் பங்கு விலையும் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. ஆட்டோ துறையைச் சேர்ந்த பிற பங்குகளின் விலையும் கடுமையாக இறங்கியிருக்கிறது. இந்த நிலையில், ஜெஃப்ரிஸ் தரக் குறியீட்டு நிறுவனம் ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் இலக்கு விலையைக் குறைத்துள்ளது. எய்ஷர் மோட்டார்ஸ் பங்கு இலக்கு விலை ரூ.23,400-லிருந்து ரூ.19,300-ஆகக் குறைத்துள்ளது. ஹீரோ மோட்டோ கார்ப் பங்கின் இலக்கு விலை ரூ.2,550-லிருந்து ரூ.2,610-ஆக அதிகரித்திருக்கிறது. ஆனால், இந்தப் பங்குகளில் உள்ள முதலீட்டினைத் தொடர்ந்து வைத்திருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறது.

மாருதி சுஸூகி நிறுவனத்தின் பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்யலாம் என்று சொன்ன அந்த நிறுவனம், அதன் இலக்கு விலையை 8,000 ரூபாயிலிருந்து 7,100 ரூபாயாகக் குறைத்துள்ளது. டி.வி.எஸ் மோட்டார் பங்கின் இலக்கு விலை ரூ.540-லிருந்து ரூ.460-ஆகக் குறைத்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செயல்திறன் குறைந்திருப்பதால், அதன் பங்கு இலக்கு விலை ரூ.2,620-லிருந்து ரூ.2,430-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனப் பங்கின் இலக்கு விலையும் ரூ.780-லிருந்து ரூ.720-ஆகக் குறைக்கப் பட்டுள்ளது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆர்.பி.எல் வங்கியின் காலாண்டு முடிவு எப்படி வந்திருக்கிறது?

‘‘இந்த வங்கியின் லாபமானது கடந்த ஆண்டைவிட 40% உயர்ந்து, ரூ.267 கோடியாக இருக்கிறது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 48% உயர்ந்து, ரூ.817 கோடியாக இருக்கிறது. ஆனால், இந்த வங்கியின் மொத்த வாராக் கடன் குறையவில்லை என்றாலும், நிகர வாராக் கடன் 0.69 சதவிகிதத்திலிருந்து 0.65 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு முன்பைவிட 7% அதிகமாக இருக்கிறது.’’

ஆசியன் டெவலப்மென்ட் பேங்க், இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சியைக் குறைந்து மதிப்பிட என்ன காரணம்?

“இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி நடப்பு 2019-20 ஆண்டில் 7.2 சதவிகிதமாக வளர்ச்சி காணும் என ஆசியன் டெவலப்மென்ட் பேங்க் (ஏ.டி.பி) முன்னர் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இப்போது இந்த வளர்ச்சி 7 சதவிகிதமாகக் குறையக்கூடும் எனக் கணித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமான வளர்ச்சி குறைவு இதற்குக் காரணமாக இருக்கும் என அது குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம் ஃபிட்ச் ரேட்டிங், இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 2019-20-ம் ஆண்டில் 6.8 சதவிகிதமாக இருக்கும் என்று சொன்னதை 6.6 சதவிகிதமாகக் குறைத்துள்ளது.”

மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் சிறு முதலீட்டாளர்கள் உஷாராக இருக்க வேண்டும் போலிருக்கிறதே?

“உண்மைதான். பல மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் கடந்த ஓராண்டு காலத்தில் அதிக இறக்கம் கண்டிருக்கின்றன. உதாரணமாக, இன்ஃப்ரா சாஃப்ட் டெக்னாலஜீஸ் (-70%), மன்பசந்த் பெவரேஜஸ் (-75%), பி.சி ஜுவல்லரி (-55%), யூ.எஃப்.ஓ மூவிஸ் இந்தியா (-48%) உள்ளிட்ட பங்குகள் அதிக இறக்கம் கண்டிருக்கின்றன. இந்தப் பங்குகளைப் பரிந்துரை செய்வதை பங்குத் தரகு நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. இதுபோன்ற நிறுவனப் பங்கு முதலீட்டில் சிறு முதலீட்டாளர்கள் மிகவும் உஷாராக இருப்பது அவசியம் என்கிறார்கள் பகுப்பாய்வாளர்கள்.”

பங்குச் சந்தையில் பொதுமக்களின் பங்களிப்பு அதிகரிப்பால், டி.சி.எஸ், விப்ரோ நிறுவனங்கள் ரூ.75,000 கோடிக்குப் பங்குகளை விற்கவேண்டி வருமாமே?

“பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள அனைத்து நிறுவனங் களிலும் பொதுமக்களுக்குக் கண்டிப்பாக 25% மூலதனம் இருக்க வேண்டும் என்பது செபி அமைப்பின் விதி. பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த விதியை அமல்படுத்த 2020-ம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கப் பட்டிருக்கிறது. இந்த நிலையில், அண்மையில் வெளியான மத்திய பட்ஜெட்டில் இந்த அளவினை 35 சதவிகிதமாக அதிகப்படுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

செபி இதை ஏற்றுக்கொண்டு, புதிய வரம்பை அமல்படுத்தும்பட்சத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்யவேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் டி.சி.எஸ் மற்றும் விப்ரோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டும் ரூ.75,000 கோடி அளவுக்கான பங்குகளை விற்பனை செய்யும் வாய்ப்பிருக்கிறது.

சந்தை இன்னும் இறக்கம் காணும் என மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எதிர்பார்ப்பதுபோல தெரிகிறதே?

“யெஸ். சந்தை இன்னும் இறங்கினால் முதலீடு செய்வதற்காக ரொக்கப் பணத்தை மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்ட் மேனேஜர்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. லார்ஜ்கேப் ஃபண்டுகளில் ரொக்கக் கையிருப்பு விகிதம் 3.6% அளவுக்கு குறைக்கப் பட்டுவரும் நிலையில், மிட் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் 5% அளவுக்கு அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மிட்கேப் ஃபண்டு களில் ரொக்கக் கையிருப்பு 5 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. ஸ்மால்கேப் ஃபண்டுகளில் இது சராசரியாக 9.9 சதவிகிதமாக உள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றின் மிட்கேப் ஃபண்டுகளில் ரொக்கக் கையிருப்பு விகிதம் முறையே 16.4% மற்றும் 13.9 சதவிகிதமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மிட்கேப் ஃபண்டுகளுக்குப் புதிதாக ரூ.2,600 கோடி முதலீடு வந்துள்ளது.”

ஷேர்லக்: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்பும் பங்குகள்!

கோல்டு இ.டி.எஃப் சொத்து மதிப்பு குறைவதற்குக் காரணம் என்ன?

“தற்போதைய நிலையில், தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கிறது. 10 கிராம் தங்கத்தின் விலை சீக்கிரமாகவே 35,000 ரூபாயைத் தொடும் நிலைக்கு வர்த்தகம் சூடுபிடித்திருக்கிறது. இதனால் தங்கத்துக்கு மாற்றாக கோல்டு இ.டி.எஃப்-களில் முதலீடு செய்தவர்கள், லாப நோக்கில் ஃபண்டுகளை விற்று பணமாக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே 10 கிராம் தங்கத்தின் விலை 32,500 ரூபாயாக இருக்கிறது. இந்த நிலையில், தங்கத்தின் மீதான கலால் வரி 10 சதவிகிதத்திலிருந்து 12.5 சதவிகிதமாக அதிகரிக்கப்படுகிறது. கோல்டு இ.டி.எஃப் முதலீடுகளை முதலீட்டாளர்கள் வெளியில் எடுக்க ஆரம்பித்திருப்பதால், இந்தப் பிரிவில் நிர்வகிக்கும் சொத்து மதிப்பும் குறைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் 204.4 கோடி ரூபாயாக இருந்த இதன் சொத்து மதிப்பு, ஜூன் மாதத்தில் 188.42 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.”

சன் ஃபார்மா பங்கின் இலக்கு விலையை பங்குத் தரகு நிறுவனம் மார்கன் ஸ்டேன்லி உயர்த்தியுள்ளதே?

“சன் பார்மச்சூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பீட்டை மார்கன் ஸ்டேன்லி உயர்த்தியுள்ளது. சன் ஃபார்மாவின் இலக்கு விலையை 20% அதிகரித்து, 475 ரூபாயிலிருந்து 505 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதையடுத்து, இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒரேநாளில் 3.6% அதிகரித்து, 422.40 ரூபாயை எட்டியது. சன் ஃபார்மாவின் சீரான வளர்ச்சி, விலை விகிதங்களை மாற்றியமைத்தது உள்ளிட்ட காரணங்களால் ரேட்டிங்கை உயர்த்தி யுள்ளதாகக் கூறியுள்ளது.”

பங்குச் சந்தையில் புதிய முதலீட்டாளர்களின் வரவு அதிகரித்துள்ளதாமே?

“பங்குச் சந்தையில் சமீபகால ஏற்ற இறக்கத்தால் புதிய முதலீட்டாளர்களின் வரவு பாதிக்கப்பட வில்லை. 2019 ஜூன் 30-உடன் நிறைவடைந்த ஓராண்டு காலத்தில் 41 லட்சம் புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் டீமேட் கணக்கைத் தொடங்கியவர்களின் எண்ணிக்கை 3.65 கோடியாக உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டுக்குப்பின் ஓராண்டுக் கணக்கில் இதுவே அதிக அளவிலான டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்ட ஆண்டாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் முறையே 35 லட்சம், 25 லட்சம் டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.”

கடந்த ஜூனில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பல பங்குகளில் முதலீட்டை அதிகரித்துள்ளார்களே?

“வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஓ.என்.ஜி.சி, எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், கோல் இந்தியா, கர்நாடகா பேங்க் ஆகிய நிறுவனப் பங்குகளை அண்மையில் வாங்கி யிருக்கிறார்கள். கடந்த ஜூன் காலாண்டு முடிவில், எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு முதலீடு 19.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த மார்ச் காலாண்டு முடிவில் 14.1 சதவிகிதமாக இருந்தது. 2017-18-ம் நிதி ஆண்டின் மார்ச் காலாண்டு முடிவில் 4.3 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இதேபோல, கோல் இந்தியா பங்கு மூலதனத்தை 7.1 சதவிகிதத்திலிருந்து 9 சதவிகித மாக அதிகரித்திருக்கிறது. 2018 மார்ச் காலாண்டு முடிவில் 5.4 சதவிகிதமாக மட்டுமே இருந்திருக் கிறது. இதேபோல, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த ஜூன் காலாண்டு முடிவில், முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ள அளவு 13.9 சதவிகிதமாகவும், ஓ.என்.ஜி.சி பங்குகளில் முதலீடு செய்துள்ள அளவு 7.6 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.”

ஷேர்லக்: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்பும் பங்குகள்!

பங்குச் சந்தைகள் இன்று (வெள்ளிக்கிழமை) மிகவும் இறங்கி, வர்த்தகமாகி முடிந்திருக்கிறதே!

‘‘இன்று ஆசியச் சந்தைகள் ஓரளவுக்கு ஏற்றம் காணவே செய்தன. இருந்தாலும், இந்தியப் பங்குச் சந்தைகள் இறங்கக் காரணம், கர்நாடகாவில் நிலவும் குழப்பமான அரசியல் என்று சிலர் சொல்கிறார்கள். இனிவரும் நாள்களில் சந்தை கொஞ்சம் அப்படியும் இப்படியுமாகத்தான் இருக்கும். மோசமான பங்கு எது, நல்ல பங்கு எது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு இந்தக் காலகட்டம் மிகவும் உதவும். எனவே, விழிப்புடன் இருப்பது அவசியம்’’ என்றவர், வெளியில் மழை வருவதற் கான அறிகுறிகள் எதுவும் தென்படுகிறதா என்று பார்த்துவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.

கடைசிச் செய்தி: ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 6.8% உயர்ந்து, ரூ.10,104 கோடியாக உள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு