Published:Updated:

கோவிட் காலத்திலும் சாதனை படைத்த புதிய ஃபண்ட் வெளியீடு ஒன்று! - ஷேர்லக் அப்டேட்ஸ்

ஷேர்லக்
ஷேர்லக்

அண்மையில் வெளியிடப்பட்ட புதிய ஃபண்ட் வெளியீடுகளில் (என்.எஃப்.ஓ) ஒன்றான நிப்பான் இந்தியா மல்டி அஸெட் ஃபண்ட் முதலீட்டாளர்களிடமிருந்து 720 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி கணக்குகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர என்ன காரணம்?

``கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நிலவரப்படி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 3.30 கோடி எஸ்.ஐ.பி கணக்குகளை நிர்வகித்து வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 11.16 லட்சம் எஸ்.ஐ.பி கணக்குகள் புதிதாகத் தொடங்கப் பட்டுள்ளன. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட இதர முதலீடுகள் மீதான வருமானம் குறைந்திருப்பதால் பலரும் மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் வரத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் இந்த அதிகரிப்பு நடந்திருக்கிறது என்கிறார்கள்.

ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் எஸ்.ஐ.பி முறையில் செய்யப்பட்ட முதலீடு 7,792 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஜூலை மாதத்தில் 7,831 கோடி ரூபாயாக இருந்தது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் எஸ்.ஐ.பி முறையில் செய்யப்பட்டிருக்கும் தொகை ஆகஸ்ட் மாதத்தில் 3.36 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது ரூ.17 லட்சம் அதிகமாகும்.''

ஷேர்லக்
ஷேர்லக்

ஈக்விட்டி ஃபண்டுகளிலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் கணிசமாக முதலீடு வெளியேறியிருக்கிறதே?

``ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் ரூ.14,550 கோடி வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம், பல ஈக்விட்டி ஃபண்டுகள் கணிசமான வருமானம் கொடுத்திருப்பது மற்றும் கோவிட் பணத்தேவையாக இருக்கிறது.''

கோவிட் காலத்திலும் புதிய ஃபண்ட் வெளியீடு ஒன்று சாதனை படைத்திருக்கிறதே?

``அண்மையில் வெளியிடப்பட்ட புதிய ஃபண்ட் வெளியீடுகளில் (என்.எஃப்.ஓ) ஒன்றான நிப்பான் இந்தியா மல்டி அஸெட் ஃபண்ட் முதலீட்டாளர்களிடமிருந்து 720 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது.

இந்த முதலீட்டுத் திட்டத்தை, நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஆகிய இரண்டு வழிகளிலும் அறிமுகம் செய்தது. 370 நகரங்களிலிருந்து, மொத்தம் 80,000 பேர் முதலீடு செய்திருக்கிறார்கள். இதில் 25,000 பேர் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த ஃபண்டில் உள்நாட்டு நிறுவனப் பங்குகள், வெளிநாட்டு நிறுவனப் பங்குகள், கமாடிட்டிகள் மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் கலந்து முதலீடு செய்யப்படுவதும், அதிக பேர் முதலீடு செய்திருப்பதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

மேலும், இந்த கோவிட் பாதிப்பு காலத்திலும் புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றில் முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில், அதிக தொகையை முதலீடு செய்திருப்பது, இந்தியப் பொருளாதார வளர்ச்சி மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.''

> ரூட் மொபைல் பங்கு வெளியீட்டுக்கு அமோக ஆதரவு போலிருக்கிறதே?

> எஸ்கார்ட்ஸ் நிறுவனப் பங்கு விலை திடீரென உயர என்ன காரணம்?

> இந்திய ஐ.டி நிறுவனப் பங்குகள் தள்ளுபடி விலையில் விற்பனை ஆவதாகச் சொல்லப்படுகிறதே?

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் கூடிய ஷேர்லக் பகிரும் தகவல்களை நாணயம் விகடன் இதழில் முழுமையாக படிக்க கிளிக் செய்க - https://bit.ly/3iGwwEJ

ஷேர்லக்: தள்ளுபடி விலையில் ஐ.டி பங்குகள்..! - கொரோனாவுக்குப் பிறகு புதிய வாய்ப்பு! https://bit.ly/3iGwwEJ

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு