Published:Updated:

Star Health IPO: ₹7,249 கோடி திரட்டவுள்ள சென்னை இன்ஷுரன்ஸ் நிறுவனம்; வரவேற்பை பெறுமா?

முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 16 ஈக்விட்டி பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் ஏலம் எடுக்கலாம். புதிய பங்கு வெளியீடு மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து, நிறுவனம் அதன் மூலதனத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜூன் ஜூன்வாலா, சேஃப்கிராப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா எல்.எல்.பி மற்றும் வெஸ்ட்பிரிட்ஜ் ஏ.ஐ.எஃப்.ஐ-க்கு சொந்தமான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ரூ. 7,249 கோடி நிதி திரட்டும் நோக்கில் வருகிற நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை ஐ.பி.ஓ வெளியிடுகிறது. பங்கு ஒன்றின் விலை ரூ.870-900.

ஐ.பி.ஓ
ஐ.பி.ஓ
Paytm: முதல் நாளிலேயே 27% சரிந்த பங்கு மதிப்பு; முதலீடு செய்ய ஏற்ற நேரமா இது?

இந்த நிறுவனம் செபிக்கு தாக்கல் செய்த டி.ஆர்.ஹெச்.பி ஆவணங்களின்படி, இந்த ஐ.பி.ஓ-வில் ரூ. 2,000 கோடி மதிப்புள்ள ஈக்விட்டி பங்குகள் புதிய பங்கு வெளியீடுகளாகவும் மற்றும் நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்கள் ரூ. 5,249 கோடி மதிப்பிலான பங்குகளை ஓ.எஃப்.எஸ் முறையில் விற்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைட் இன்ஷூரன்ஸ் ஐ.பி.ஓ-வில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ரூ.100 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த வெளியீட்டில் 75% பங்குகள் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 15% நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும், மீதமுள்ள 10% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 16 ஈக்விட்டி பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் ஏலம் எடுக்கலாம். புதிய பங்கு வெளியீடு மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து, நிறுவனம் அதன் மூலதனத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

நிறுவனத்தின் புரமோட்டர்களில் ஒன்றான சேஃப்கிராப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா எல்.எல்.பி அதிகபட்சமாக 3.06 கோடி பங்குகளை விற்பனை செய்கிறது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
Nykaa: IPO மூலம் ஒரே நாளில் பில்லியனரான இந்தியப் பெண்; யார் இந்த ஃபல்குனி நாயர்?

கோனார்க் டிரஸ்ட், எம்.எம்.பி.எல் டிரஸ்ட், ஏ.பி.ஐ.எஸ் குரோத் 6, எம்.ஐ.ஒ IV ஸ்டார், எம்.ஐ.ஓ ஸ்டார், யுனிவர்சிட்டி ஆஃப் நோட்ரே டாமே டி.யு எல்.ஏ.சி, ஆர்.ஓ.சி கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும், வெங்கடசாமி ஜெகநாதன், சாய் சதீஷ் மற்றும் பெர்ஜிஸ் மினு தேசாய் ஆகியோரும் ஓ.எஃப்.எஸ் முறையில் பங்குகளை விற்பனை செய்கிறார்கள்.

ராகேஜ் ஜூன் ஜூன்வாலா இந்நிறுவனத்தில் தனக்கு சொந்தமாக வைத்திருக்கும் 14.7% பங்குகளை விற்பனை செய்யவில்லை.

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களிடம் இருந்து நல்லதொரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு