Published:Updated:

இன்ஃபுளூயன்சர் மார்க்கெட்டிங்... விளம்பரத்தில் புதுமை படைக்கும் ஸ்டார்ட்அப்!

ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப்

இன்ஃபுளூயன்சர் மார்க்கெட்டிங்... விளம்பரத்தில் புதுமை படைக்கும் ஸ்டார்ட்அப்!

ஸ்டார்ட்அப்

Published:Updated:
ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட்அப்

சில ஆண்டுகளுக்கு முன்புவரை விளம் பரங்கள் இல்லாமல் எந்தப் பொருளையும் விற்பனை செய்ய முடியாது. ஆனால், தற்போது சமூக வலைதளங்கள் மூலம் வாடிக்கையாளர் களைச் சென்றடைவது புதிய நடைமுறையாக இருக்கிறது.

இப்படி விளம்பரம் செய்யும்போது சமூகவலை தளங்களில் பிரபலமாக இருப் பவர்கள் மூலம் பொருள்/சேவையை அறிமுகம் செய்யும்போது அதிக மக்களை எளிதில் சென்ற டைய முடிகிறது என்பதைப் புரிந்துகொண்டு, சமூக வலை தளங்களில் பிரபலமாக இருப்பவர்களையும் பிரபல பிராண்டுகளையும் இணைக் கும் பணியை வெற்றிகரமாக செய்து வருகிறது சென்னை யைச் சேர்ந்த ‘பிக் மை ஆட்’ என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனம். இதன் சி.இ.ஓ பிரபுதாஸை சந்தித்துப் பேசி னோம். அவரது நிறுவனத்தின் பிசினஸ் பயணத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அவர்.

 பிரபுதாஸ்
பிரபுதாஸ்

‘‘சிவகுமார், அருண் மற்றும் அருள்ஜோதி என நாங்கள் நால்வரும் ஒன்றாகப் படித்தோம். படித்து முடித்த பிறகு, தொழில் தொடங்க வேண்டும் என்பது எங்கள் திட்டம். வளர்ச்சிக்கு வாய்ப்பு இருக்கும் துறையில் தொழில் தொடங்கத் திட்டமிட்டோம். யூடியூப் பெரிய அளவுக்கு வளர்ந்ததைப் பார்த்தோ, ஒரு யூடியூப் சேனலை ஆரம்பிக்கலாம் எனத் திட்டமிட்டோம். ஆனால், ஏற்கெனவே பல ஆயிரம் சேனல்கள் இருக்கும்போது, நாமும் ஏன் யூடியூப் தொடங்க வேண்டும், அதில் என்ன வித்தியாசம் காட்ட முடியும். என யோசித்தோம்.

அப்போதுதான் இன் ஃபுளூயன்சர்களின் தாக்கம் எங்களுக்குப் புரிந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இன்ஃபுளூயன்சர் களின் பங்கு பெரியது.அதனால் அவர்களை ஏன் நாம் ஒருங்கிணைக்கக் கூடாது எனத் திட்டமிட்டோம். இந்த ஐடியா வந்தபின் நாங்கள் செய்து வந்த வேலையை விட்டுவிட்டு, புராடக்ட் உருவாக்கத்தில் கவனம் செலுத்தினோம்.

சமூக வலைதள விளம்பரங் களில் இரு சிக்கல். முதலாவது, விளம்பரம் தரும் நிறுவனம் நிஜத்தில் இருக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிறுவனம் ஆப்பிள் போனைக் குறைந்த விலைக்குத் தருவதாக பிரபலமான யூடியூப் சேனலில் விளம்பரம் வெளியானது. பலரும் பணம் கட்டினார்கள். ஆனால், அப்படி ஒரு கம்பெனியே இல்லை என்பது பிற்பாடு தெரிந்ததால், அந்த நிறுவனத்துக்குக் கெட்ட பெயர் வந்தது. இரண்டாவது, பிராண்டுகள் தங்கள் தயாரிப்புகள் பற்றி நல்ல விதமாகப் பேசும்படி இன்ஃபுளூயன்சர் களிடம் கேட்பார்கள். ஆனால், இந்த வேலை சரியா நடக்காது. இந்த இரு தரப்பையும் ஒருங்கிணைத்து, இரு தரப்பினருமே பயனடையச் செய்வதுதான் எங்கள் வேலை.

இன்ஃபுளூயன்சர் மார்க்கெட்டிங்... 
விளம்பரத்தில் புதுமை  படைக்கும் ஸ்டார்ட்அப்!

இன்ஃபுளூயன்சர்களை பிராண்டுகளோ, பிராண்டுகளை இன்ஃபுளூயன்சர்களோ நேரடியாக அணுக முடியாதா என நீங்கள் கேட்கலாம். முடியும் தான். ஆனால், எங்களிடம் 1,000-க்கும் மேற்பட்ட இன்ஃபுளூயன்சர்கள் உள்ளனர். அனைவரும் பிராண்டுகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவர்கள் எங்கள் மூலமாகப் பலரையும் அணுக முடியும். அதே மாதிரி தான் பிராண்டுகளும். அவர்கள் ஒரு பிரபலத்தை அணுக முயற்சி செய்யலாம்; அடுத்தடுத்து பிரபலங் களைத் தேடுவது தனிவேலையாக இருக்கும். ஆனால், எங்களிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேனல்கள் உள்ளன. பிரபலமானவர்கள் மட்டுமல்லாமல், 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் வைத்திருக்கும் பிரபலங்கள் மிக அதிகம் என்பதால், எங்கள் ரீச்சும் அதிகம்.

தற்போது தமிழ்நாடு தவிர, இதர மாநிலங்களிலும் கவனம் செலுத்த, விரிவாக்கம் செய்ய நிதி தேவை என்பதற்காக நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டோம். ஆரம்பத்தில் நண்பர்களிடம் இருந்து 25,000 டாலர் நிதி திரட்டினோம். தொடர்ந்து ‘கிஷ்ஃப்ளோ’ சுரேஷ் சம்பந்தம், எம்2பி நிறுவனர் பிரபு, இப்போபே மோகன் உள்ளிட்ட சிலர் அடுத்தகட்ட நிதியைத் தந்திருக்கிறார்கள். தற்போது யூடியூப் மற்றும் இன் ஸ்டாகிராமில் அதிக கவனம் செலுத்துகிறோம். என்றாலும், இன்னும் பெரிய அளவில் வளர்வதற்கான திட்டங்கள் உள்ளன’’ என உற்சாகமாகப் பேசி முடித்தார் பிரபுதாஸ்.

இன்னும் சில ஆண்டுகளில் இன்ஃபுளூயன்சர் சந்தை நம் நாட்டில் பெரியதாக உயர்ந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை!