நடப்பு
Published:Updated:

நாஸ்டாக் சந்தையில் ஸ்பாக் லிஸ்ட்டிங்... எச்சரிக்கை அவசியம்! சிறு முதலீட்டாளர்களின் கவனத்துக்கு...

ஸ்பாக் லிஸ்ட்டிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்பாக் லிஸ்ட்டிங்

S P A C L I S T I N G

அமெரிக்க பங்குச் சந்தையில் மிகப் பிரபலமாக உள்ள ‘ஸ்பாக்’ (SPAC - Special-purpose acquisition company) லிஸ்ட்டிங் முறை, தற்போது இந்தியா விலும் கவனம் பெறத் தொடங்கி யுள்ளது. ரினிவ் பவர் (Renew Power) என்ற இந்திய நிறுவனம் சமீபத்தில் ‘ஸ்பாக்’ லிஸ்ட்டிங் வாயிலாக அமெரிக்க பங்குச் சந்தையில் நிதி திரட்டியுள்ளது. சோதனை முறையில், ஏற்கெனவே சில இந்திய நிறுவனங்கள் ஸ்பாக் முறையின் கீழ் நிதி திரட்டி யிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக அதிவேகம் பிடித்திருக்கும் புதிய ‘ஸ்பாக்’ அலையில் மேலும் பல இந்திய நிறுவனங்கள் இணைந்து கொண்டு பங்குச் சந்தையில் நிதி திரட்ட முடிவு செய்துள்ளன.

அகமதாபாத்தில் உள்ள இந்திய கிஃப்ட் சிட்டி ஒழுங்குமுறை ஆணையம் (IFSCRA), ‘ஸ்பாக் லிஸ்ட்டிங்’ முறைப்படி பங்கு நிதியைத் திரட்டுவதற்கான புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. ‘ஸ்பாக் லிஸ்ட்டிங்’ முறை என்றால் என்ன, இதில் சிறு முதலீட்டாளர்கள் ஈடுபடலாமா என்பது குறித்துப் பார்ப்போம்.

ஸ்பாக் லிஸ்ட்டிங்
ஸ்பாக் லிஸ்ட்டிங்

ஸ்பாக் என்றால் என்ன..?

பங்குச் சந்தையில் பட்டியல் இடப்படாத ஒரு புதிய நிறுவனத்தைக் கையகப்படுத்தும் ஒரே நோக்கத்துக்காக பிரத்யேகமாக உருவாக்கப் படும் நிறுவனம்தான் ஸ்பாக். ‘வெற்றுக் காசோலை நிறுவனம் (Blanck Cheque Company)’ என்றும் பலராலும் அழைக்கப்படும் இந்த ‘ஸ்பாக்’ நிறுவனம், புதிய தொழில் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் நேரடியாகப் பட்டியலிடுவதற்கு அத்தியாவசியமான கடும் விதிமுறை களில் இருந்து தப்பிக்க உதவுகிறது.

‘ஸ்பாக்’ நிறுவனத்தின் பங்கு வெளியீட்டில் (Initial Public Offer) முதலீடு செய்யும் சாதாரண முதலீட் டாளர்களுக்கு, அவர்களால் முதலீடு செய்யப்படுகிற நிதியானது எவ்வாறு பயன்படுத்தப்படப்போகிறது என்ற விவரம் எதுவும் முன்கூட்டியே தெரிவிக்கப்படுவதில்லை. ‘ஸ்பாக்’ நிறுவனம் எந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தப்போகிறது என்ற முன்னறிவிப்பும் வழங்கப்படாது.

சாதாரண நிறுவனப் பங்கு வெளியீடுகளிலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட ‘ஸ்பாக்’ வடிவமைப்பு, பன்னாட்டு சந்தைகளில் பல வருடங் களுக்கு முன்பே அறிமுகமாகி இருந்தாலும், சமீபத்திய கொரோனா கால நடைமுறைச் சிக்கல்கள், ‘ஸ்பாக்’ முறையிலான லிஸ்ட்டிங்கை மிகவும் பிரபலமாக்கியுள்ளது. அமெரிக்கா வில் கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே பல லட்சம் கோடி (சுமார் 80 பில்லியன் டாலர்) ரூபாய் அளவுக்கு ‘ஸ்பாக்’ முறைப்படி, பங்குச் சந்தையில் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைமுறை சிக்கல்கள்..!

ஆனால், ‘ஸ்பாக்’ நிறுவனங்கள் வெற்றுக் காகித நிறுவனங்கள் மட்டுமே. ‘ஸ்பாக்’ நிறுவனம் குறித்த கடந்தகால வரலாறோ, செயல்பாட்டு விவரங்களோ சாதாரண முதலீடாளர் களுக்கு வழங்கப்படுவதில்லை. நிறுவனக் கையகப்படுத்துதலை (Company Acquisition) தவிர, எந்தவொரு தொழில்துறை அனுபவமும் ‘ஸ்பாக்’ நிறுவன மேலாளர்களுக்கு இருப்ப தில்லை. மேலும், சாதாரண பங்கு வெளியீட்டில் உள்ள விதிமுறைகள் யாவும் இவற்றுக்குப் பொருந்து வதில்லை. ‘ஸ்பாக்’ நிறுவனங்களின் முக்கிய முதலீட்டாளர்களின் (Anchor Investors) முந்தைய செயல்பாடுகளின் அடிப்படையிலேயே பங்கு வெளியீட்டின் வெற்றி அமைகிறது.

‘கடந்தகால செயல்பாடுகள் வருங்கால செயல்திறனுக்கு உத்தர வாதம் இல்லை’ என்ற பிரபல பங்குச் சந்தை எச்சரிக்கை அறிவிப்புக்கு முற்றிலும் மாறுபட்ட ஸ்பாக் நிறுவன வடிவமைப்பு மற்றும் முதலீட்டாளர் களிடம் உள்ள அதீத வரவேற்பு, புதிய பங்குச் சந்தை முறைகேடுகளுக்கு வித்திடும் அபாயம் உள்ளது. எனவே, பங்குச் சந்தை மற்றும் நிறுவனங்களின் செயல்பாடு குறித்து போதுமான விழிப்புணர்வு சாதாரண மக்களிடம் சென்று சேராத தற்போதைய சூழ்நிலையில், இந்தியா போன்றதொரு வளரும் நாட்டுக்கு ஸ்பாக் லிஸ்ட்டிங் முறை எந்தளவுக்குப் பொருந்தும் என்பது கேள்விக்குறியே.

எனவே, இந்திய ஒழுங்குமுறை அமைப்புகள், ஸ்பாக் விவகாரத்தில் மிக அதிகமான கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. புதிய பங்கு வெளியீடுகளுக்கு இந்திய சூழ்நிலைக் கேற்ப கடுமையான விதிமுறைகளை வகுத்த பிறகே, ஸ்பாக் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது சாலச் சிறந்தது!