நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்... வாங்கலாம்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்

B U Y & S E L L

கடந்த வாரம், “சந்தையின் போக்கு மாற்றத்துக்கான புள்ளியில் இருப்பதாகத் தெரிவதால், கவனமாக சந்தையின் செயல்பாடுகளை வைத்துக் கொள்ளவும்” எனப் பரிந்துரைத்திருந்தோம்.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

அதாவது, நிஃப்டி 14200 என்ற நிலையை உடைத்து இறக்கம் காண்பதற்கான அச்சுறுத்தல் கட்டத்தில் இருந்தது. ஆனாலும் விலை நகர்வுகள் சற்று இறக்கத்தைச் சந்தித்தாலும் சந்தை தன்னை நிலைநிறுத்திக்கொண்டு இறக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்கான இடத்தை எட்டியது.

இறக்கத்திலிருந்து மீண்டுவரும் முயற்சி உருவாக்கிய வரம்புதான் அதில் காணப்பட்ட சிறப்பு எனலாம். கடந்த வாரக் கட்டுரையில் ‘நிஃப்டியின் பிரேக் அவுட் நிலையானது 15000 புள்ளிகளுக்கு மிக அருகில் இருக்கிறது. ஆனால், சில இடைவெளி நகர்வுகளுக்குப் பிறகு தற்போது அந்த நிலை 14600 புள்ளிகளுக்கு வந்திருக்கிறது’ என்று கூறியிருந்தோம்.

நிஃப்டி 14600 என்ற நிலையின் ஆரம்பகட்ட பிரேக் அவுட் முயற்சி களைச் சமாளித்துக்கொண்டதுடன், உற்சாகமாக நகர்ந்து நான்கு வர்த்தக தினங்களில் 15000 நிலையை நோக்கி முன்னேறியது. மேலும், குறிப்பிட்ட இறக்கத்தில் சந்தை நிலை பெறுவதற்கு முன் தன்னுடைய நகர்வில் சற்று நிலைநிறுத்திக் கொள்ளவும் செய்தது. இந்த எதிர்பாராத வலுவான நகர்வு ஏப்ரல் எக்ஸ்பைரியை உச்சத்துக்குக் கொண்டுவந்து நிறுத்தியது.

சந்தையில் காணப்பட்ட மீட்சி யானது எந்த அறிகுறியும் இல்லாமல் நிகழ்ந்ததால், ரெசிஸ்டன்ஸ் நிலையானது மேல்நோக்கி நகர்ந்தது. ஒருவேளை, இந்தப் போக்குக்கு அதிகமான ஷார்ட் எடுக்கப்பட்டதும் காரணமாக இருந்திருக்கலாம்.

தற்போது இரண்டு வாரத்துக்கு முன்பிருந்த நிலைக்கே மீண்டும் திரும்பியிருக்கிறோம். அதாவது, பிரேக் அவுட் நிலையானது மீண்டும் பழைய 15000 புள்ளிகள் என்ற நிலைக்கே திரும்பியுள்ளதாகத் தெரிகிறது.

பங்குகள்... வாங்கலாம்
பங்குகள்... வாங்கலாம்

மூன்றாம் காலாண்டு முடிவுகள் நன்றாகவே வந்துகொண்டிருக் கின்றன. இனி வருகிற முடிவுகளும் சிறப்பாக வரும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. சந்தை எதிர்பார்ப்புகளை மீறி சிறப்பான வளர்ச்சியுடன் வரும் நிதிநிலை முடிவுகளைக் கொண்ட நிறுவனத்தின் பங்குகளில் அதிக ஈடுபாடு காணப்படுகிறது.

அதேபோல, எதிர்பார்ப்புகளில் இருந்து ஏமாற்றமளிக்கும் பங்குகள் பெரிய அளவில் தண்டிக்கப்படுவதும் இல்லை. இது, சந்தையின் காளையின் போக்குக்கு சற்று எதிரானதாகக் கருதப்படுகிறது. சந்தை, கடந்த பல வாரங்களாகத் தொடர்ந்து ஒருங் கிணைப்பு செயல்பாட்டிலேயே இருந்து வருகிறது. கடந்த வாரத்தின் நான்கு வர்த்தக தினங்களில் காணப் பட்ட தீவிரமான நகர்வுகளுக்குப் பிறகு சந்தை மாத எக்ஸ்பைரிக்குள் செல்வதால், வார இறுதியைச் சிறப்பாக முடிக்கவே வாய்ப்புள்ளது. மேலும், 15000 நிலையைத் தாண்டி நகர்ந்தால் மட்டுமே சந்தையின் செயல்பாடு சூடுபிடிக்கும். மாறாக, மந்தமான சூழலே தொடரும் எனில், மீண்டும் 14600 என்ற நிலையை நோக்கி இறங்க வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

எஸ்.ஹெச் கெல்கர் (SHK)

தற்போதைய விலை ரூ.140.70

வாங்கலாம்

இந்த நிறுவனம் அதன் துறையில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாகும். ஆனால், சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும், இந்தப் பங்கு கடந்த சில வருடங்களாகவே அழுத்தத்தில்தான் இருந்துவந்தது. தற்போது அந்தப் போக்கு முடிவுக்கு வந்து, தலைகீழ் தலை மற்றும் தோள்பட்டை பேட்டர்னை உருவாக்கி இருக்கிறது. எனவே, பிரேக் அவுட் ஆகி, ஏற்றத்தை நோக்கி நகரத் தயாராக இருக்கிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.185 வரை உயரலாம். ஸ்டாப்லாஸ் ரூ.120-ல் வைத்துக் கொள்ளவும்.

ஏ.பி.பி இந்தியா (ABB)

தற்போதைய விலை ரூ.1,381.30

வாங்கலாம்

முன்னணி புளூசிப் பங்குகளில் ஒன்றான ஏ.பி.பி-யின் விலை நகர்வு 2020 நவம்பரில் கன்சாலிடேஷன் நிலையிலிருந்து பிரேக் அவுட் ஆகி கடந்த சில மாதங்களாகவே நிலையான ஏற்றத்தின் போக்கில் இருந்து வருகிறது. இதன் காலாண்டு முடிவுகளும் சிறப்பாக வந்திருப்பதால், தொடர்ந்து ஏற்றத்தின் போக்கு நீடிக்கிறது. பங்கில் புதிய செயல் பாடுகளையும் உருவாக்கி யிருக்கிறது. தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,290. இந்தப் பங்கு குறுகிய காலத்தில் ரூ.1,500 வரை உயர வாய்ப்புள்ளது.

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் (HERITGFOOD)

தற்போதைய விலை ரூ. 364.35

வாங்கலாம்

இந்தப் பங்கில் கடந்த ஒரு வருடமாக இருந்து வந்த கன்சாலி டேஷன் தற்போது முடிவுக்கு வந்து ஏற்றத்தின் போக்கில் நகர உள்ளது. இதில் காணப்படும் மொமென்டமும் அதன் தொடர் ஏற்றத்தின் போக்கை உறுதி செய்வதாக இருக்கிறது. இது பிரேக் அவுட் ஆகி நகரும்பட்சத்தில் லாங் பொசிஷன்களை எடுக்க லாம். ஸ்டாப்லாஸ் ரூ.335. தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.410 வரை உயர வாய்ப்புள்ளது.

தமிழில்: திவ்யா

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.