Published:Updated:

`பைபேக்' ஆஃபர்... ₹16,000 கோடி மதிப்புள்ள பங்குகளைத் திரும்பப் பெறும் டி.சி.எஸ்!

டி.சி.எஸ் 
ஷேர் பைபேக்
டி.சி.எஸ் ஷேர் பைபேக்

பைபேக் அறிவிப்புக்குப் பிறகு, டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

இந்தியாவின் 2-வது பெரிய தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ், இன்று (டிசம்பர் 18, 2020) 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கான `பைபேக்' (buyback) ஆஃபரைத் தொடங்கியிருக்கிறது. இந்த பைபேக் திட்டமானது, வருகிற ஜனவரி 1, 2021-ம் தேதி வரை இருக்கும்.

டி.சி.எஸ் பங்கு விலை
டி.சி.எஸ் பங்கு விலை

வணிக வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் இறங்கப்போவதாக ஏற்கெனவே அறிவித்த டி.சி.எஸ் நிறுவனம், அதைத் தொடர்ந்து இந்த பைபேக் திட்டத்தை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வணிக வளர்ச்சியின் முதல் கட்டமாக இந்நிறுவனம் கிளவுட் ஸ்டோரேஜ் தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் அமைக்க உள்ளது. இது டிசிஎஸ் நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகப் பிரிவுக்குப் பயனுள்ளதாகவும், பல மடங்கு வளர்ச்சி செய்யவும் ஏதுவாக அமையும் என்றும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.சி.எஸ் ஷேர் பைபேக்... தரலாமா, கூடாதா? - முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்த பை பேக் அறிவிப்புக்குப் பிறகு, டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. இன்று காலை 11.40 மணி அளவில் என்.எஸ்.இ சந்தையில் 2,890.90 ரூபாயில் வர்த்தகமானது. ஆனால், திரும்பப் பெறப் போகிற பங்கு ஒன்றுக்கு, 3,000 ரூபாய் வழங்க நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பை பேக் ஆஃபர் மூலம், மொத்தம் 5.33 கோடி பங்குகள் திரும்பப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TCS நிறுவனப் பங்குகள்
TCS நிறுவனப் பங்குகள்

டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்குகளை அதிக அளவில் வைத்திருக்கும் நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனம் டாடா சன்ஸ். இந்த நிறுவனத்திடம் மட்டுமே டி.சி.எஸ் நிறுவனத்தின் மொத்தப் பங்குகளில் 72% பங்குகள் இருக்கின்றன. திரும்பப் பெறும் திட்டத்தில், டாடா சன்ஸ் நிறுவனம் ப்தான் வைத்திருக்கும் பங்குகளைக் கொடுக்க முன்வந்தால், 16,000 கோடி ரூபாயில் 11,500 கோடி ரூபாயை டாடா சன்ஸ் நிறுவனம் பெறும். அதுமட்டுமல்லாமல், டி.சி.எஸ் நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 12 ரூபாய் டிவிடெண்ட் வழங்குவதாகச் சொல்லியிருப்பதால், அதன் வாயிலாகவும் 324 கோடி ரூபாயை டாடா சன்ஸ் நிறுவனத்துக்குக் கிடைக்கும்.

இந்த பைபேக் வாய்ப்பைப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் இந்தப் பங்கைத் திரும்பத் தரலாமா என்பது பற்றி நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது!

அடுத்த கட்டுரைக்கு