Published:Updated:

சென்செக்ஸ் 50000... வரலாற்று உச்சம் தொட்டு சாதனை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

சென்செக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சென்செக்ஸ்

S E N S E X

பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் முதல்முறையாக 50000 புள்ளிகளை 2021 ஜனவரி 21–ம் தேதி கடந்துள்ளது. இந்திய நாட்டிலுள்ள தொழில்துறை வளர்ச்சியை கணிக்க சென்செக்ஸ் உதவுகிறது. கொரோனா காலகட்டத்தில் பல தொழில்துறை நிறுவனங்கள் சிக்கலைச் சந்தித்து வருகின்றன. எப்படி சென்செக்ஸ் மட்டும் உயர்ந்துகொண்டே இருக்கிறது, என்ன நடக்கிறது இந்தியப் பங்கு சந்தையில் என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம்.

ஷியாம் ராம்பாபு
ஷியாம் ராம்பாபு

ஒருவரின் உடல்நலனை அறிந்துகொள்வதற்கு மருத்துவர்கள் பொதுவாக ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை போன்ற பொதுவான பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். மனித உடலில் ரத்தம் அனைத்து இடங்களிலும் ஓடுகிறது. உடல் உறுப்புக்களில் பாதிப்புகள் ஏற்பட்டால் ரத்த மாதிரிகளில் பாதிப்பு தெரியும். அந்தப் பரிசோதனை மூலம் ஒருவரின் உடல்நலன் எப்படி இருக்கிறது என்பதைத் தோராயமாகத் தெரிந்துகொள்ள முடியும். ரத்தப் பரிசோதனை மூலம் புற்றுநோய் போன்ற பிற நோய்களைக்கூட கண்டுபிடிக்க முடியும்.

அதுபோல, இந்தியத் தொழில்துறையில் உள்ள 30 மிகப் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியைக் கொண்டு ஒட்டு மொத்த தொழில்துறையின் வளர்ச்சியைக் கணக்கீடு செய்ய உதவுவதுதான் சென்செக்ஸ் குறியீடு.

சென்செக்ஸ் குறியீட்டில், மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில் பல்வேறு தொழில் துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் இடம்பெற்றிருக்கும். வங்கி, தொழில்நுட்பம், ஆயில், மெட்டல், ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள பெரிய நிறுவனங்கள் சென்செக்ஸில் இடம்பெற்றிருக்கும்.

ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் அனைத்து வகையான வியாதி களையும் கண்டுபிடிக்க முடியாது. அதுபோல, சென்செக்ஸில் உள்ள நிறுவனங்களை வைத்து ஒட்டுமொத்த தொழில்துறை வளர்ச்சியும் கண்டுபிடிக்க முடியாது.

ஆனால், சென்செக்ஸ் குறியீட்டின் வளர்ச்சி ஒட்டுமொத்த தொழில்துறை சார்ந்த வளர்ச்சியோடு தொடர்பு டையதாக இருக்கும். அதனால்தான் சென்செக்ஸ் குறியீடு அனைத்து பொருளாதார நிபுணர்களால் உற்றுப் பார்க்கப்படுகிறது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள நிறுவனங்கள் அவ்வப் போது மாறிக்கொண்டே இருக்கும். சென்செக்ஸ் குறியீட்டில் இடம் பெற்றுள்ள ஒரு நிறுவனம் சரியாக இயங்க வில்லை என்றால், அதன் மொத்த சொத்து மதிப்பு குறையும்போது அந்த நிறுவனத்தை சென்செக்ஸ் குறியீட்டில் இருந்து எடுத்து விடுவார்கள். மற்றொரு வளர்ச்சி அடைந்த நிறுவனப் பங்கு புதிதாக சென்செக்ஸ் குறியீட்டில் சேர்க்கப்படும். அதனால் நல்ல செயல்பாட்டில் உள்ள பங்குகள் மட்டுமே சென்செக்ஸில் இடம்பெற்றிருக்கும்.

சென்செக்ஸ் குறியீட்டில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 30 நிறுவனங் கள் இருக்கும். மற்றொரு குறியீடான நிஃப்டியில் தேசிய பங்குச் சந்தையில் இடம் பெற்ற 50 நிறுவனங்கள் இருக்கும். இந்த இரண்டு குறியீடுகளும் ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் கணிப்பதற்கு பெரும்பாலும் உதவுகிறது.

சென்செக்ஸ்
சென்செக்ஸ்

சென்செக்ஸ் குறியீட்டின் வரலாறு...

சென்செக்ஸ் குறியீடு மும்பை பங்குச் சந்தையில் ஜனவரி 1,1986-ம் ஆண்டு கொண்டுவரப் பட்டது. ஏப்ரல் 1, 1979-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு குறியீட்டில் இடம்பெற்ற நிறுவனங்களின் குறியீட்டு அளவு 100 என்ற அளவில் எடுத்துக்கொள்ளப் பட்டது. அந்த நிறுவனங்கள் ஜனவரி 1, 1986 பெற்ற வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு குறியீடு கணக்கிடப்பட்டது. பட்டியலிடப்பட்ட முதல் தினத்தில் சென்செக்ஸ் குறியீடு 549.43 என்ற புள்ளியில் முடிந்தது.

முதலில் சென்செக்ஸ் குறியீட்டுக்கு எந்தப் பெயரையும் வைக்கவில்லை. முதன்முதலாக 1989 -ம் ஆண்டுதான் சென்செக்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்டது. அந்தப் பெயரை பங்குச் சந்தை வல்லுநர் தீபக் மஹானி சூட்டினார். சென்சிட்டிவ் மற்றும் இண்டெக்ஸ் என்ற இரண்டு ஆங்கில வார்த்தைகளின் கலவையே சென்செக்ஸ்.

பங்குச் சந்தை என்பது உலகில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு ஏற்ப அதிக வேறுபாடு காட்டப் படுவதால், சென்செக்ஸ் என்ற பெயர் சூட்டப்பட்டது.

சென்செக்ஸ் குறியீடு முதல்முறையாக 1990-ம் ஆண்டு 1000 என்ற புள்ளி கணக்கைத் தாண்டியது. 10000 புள்ளிகளை 2006-ம் ஆண்டும், 20000 புள்ளிகளை 2007-ம் ஆண்டும், 30000 புள்ளிகளை 2017-ம் ஆண்டும், 40000 புள்ளிகளை 2019-ம் ஆண்டும் எட்டியது. இப்போது 2021, ஜனவரி 21-ம் தேதி 50000 புள்ளிகளை கடந்து சரித்திர சாதனையை சென்செக்ஸ நிகழ்த்தியுள்ளது.

ஒருவர் 1986-ம் ஆண்டு 10,000 ரூபாயை சென்செக்ஸ் குறியீட்டில் இடம் பெற்றிருக்கும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருந்தால் அதன் இன்றைய மதிப்பு ரூ.91 லட்சம் என்ற அளவுக்கு இருக்கும். சென்செக்ஸ் குறியீடு இந்த 34 ஆண்டுகளில் 91 மடங்கு உயர்ந்துள்ளது. இது தங்கம், வங்கி டெபாசிட் போன்ற பல முதலீட்டுத் திட்டங்களைவிட அதிக லாபம் கொடுத்துள்ளதை இதன் மூலம் அறிய முடியும்.

சென்செக்ஸ் குறியீடு வளர்ச்சியை மட்டுமன்றி, கடுமையான வீழ்ச்சிகளையும் கண்டிருக்கிறது. ஆனால், நீண்டகால நோக்கில் நமது பங்குச் சந்தை வளர்ச்சி பாதையில் செல்கிறது என்பது சென்செக்ஸ் குறியீடுகளில் இருந்து நாம் அறிய முடியும். அதனால் நீண்டகால நோக்கில் இந்தியப் பங்குச் சந்தையில் பரவலாக முதலீடு செய்து நல்ல லாபத்தை அடைய முடியும் என்பதை இதன் மூலம் அறியலாம். இப்போது பி.எஸ்.இ பங்குச் சந்தையில் 7,500-க்கும் மேற்பட்ட தொழில் துறை நிறுவனங்கள் இடம்பெற்றிருக் கின்றன. உலக அளவில் உள்ள பெரிய பங்குச் சந்தையாக மும்பை பங்குச் சந்தை உயர்ந்திருக்கிறது.

சென்செக்ஸ் குறியீட்டின் வளர்ச்சி நமது நாட்டின் வளர்ச்சியைப் பறை சாற்றுவதாக உள்ளது. இந்த வரலாற்று மைல்கல்லான 50000 என்ற புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் குறியீடு செல்வது முதலீட்டாளர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

பிட்ஸ்

வீட்டு உபயோகப் பொருள்களின் பயன்பாடு சமீப காலமாக அதிகரித் திருப்பதைத் தொடர்ந்து கிராம்ப்டன் க்ரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலெக்ட்ரிக்கல் நிறுவனப் பங்கு விலை கடந்த வியாழன் அன்று 7.22% உயர்ந்தது!

பிட்ஸ்

டந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நம் நாட்டில் மொத்தமுள்ள தொலைபேசி களின் இணைப்பு 1,168 மில்லியனாக அதிகரித்து இருக்கிறது. செல்போன்கள் எண்ணிக்கை 1,148 மில்லியன் ஆகும்!