Published:Updated:

பங்குச் சந்தை ஆன்லைன் டிரேடிங்..! - கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

ஆன்லைன் பிரவுஸர் மூலமாக வர்த்தகம் செய்தால், வைரஸ் தாக்குதல் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி
ங்குச் சந்தை ஆன்லைன் டிரேடிங் என்பது கொரோனாவின் தாக்கத்தால் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது.

முன்னர் இளைய தலைமுறையினர் மட்டுமே மேற்கொண்ட ஆன்லைன் டிரேடிங்கில் இன்று பங்குப் பரிவர்த்தனையில் ஈடுபடும் எல்லோருமே மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன்களின் ஆகியவற்றின் மூலமாக ஆன்லைனில் பலரும் பங்குகளை வாங்குகிறார்கள், விற்கிறார்கள். இது எளிய வழிமுறையாக இருக்கும் அதே வேளையில், பணத்தை எளிதில் இழக்கவும் இதில் வாய்ப்பிருக்கிறது.

ஆன்லைன் டிரேடிங்
ஆன்லைன் டிரேடிங்

ஆன்லைன் டிரேடிங்கைப் பொறுத்தவரை, அதற்கு அடித்தளமாக இருக்கும் கணினி, லேப்டாப், மொபைல்போன் போன்றவற்றின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. உங்களுடைய கணினியில் ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் இருக்க வேண்டியது அவசியம். அதோடு அதைத் தொடர்ச்சியாக அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் புதிதாக வரும் வைரஸ்களை எதிர்கொண்டு அழிக்கும்படி வலுவானதாக அது இருக்கும்.

ஆன்லைன் டிரேடிங்கில் பணப் பரிவர்த்தனை நடப்பதால் அதை இன்னொருவர் பயன்படுத்தாதபடி பார்த்துக்கொள்வது நல்லது. மொபைல் ஆப் மூலமாக டிரேடிங் செய்கிறீர்களென்றால், மொபைல்போன்களையும் இன்னொருவர் பயன்படுத்தாதபடி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். உறவினர்கள், நண்பர்களின் கணினியையோ, மொபைல்போன்களையோ ஆன்லைன் டிரேடிங்குக்குப் பயன்படுத்துவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

அடுத்ததாக, அதில் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு பாதுகாப்பைத் தரும். பாஸ்வேர்டு என்பதே பாதுகாப்புக்கானதுதான் என்றாலும், அதைப் பாதுகாப்பானதாக உருவாக்குவது அவசியம். உங்கள் பாஸ்வேர்டு பிறர் கணிக்க முடியாதபடி கடினமானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அதைத் திருடுவது ஹேக்கர்களுக்கு எளிதாகிவிடும். பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். பாஸ்வேர்டை பிரவுஸர் நினைவில் வைத்துக்கொள்வதற்கு அனுமதிக்கக் கூடாது.

பொதுவாக, இணையத்தில் பிரவுஸிங் செய்பவர்கள் ஒரே நேரத்தில் பல இணைய தளங்களைத் திறந்துவைத்து பணியாற்றுவார்கள். ஆனால், ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபடும் போது அந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். அப்படிச் செய்தால் இணையத்தின் வேகம் குறையும்; தேவையற்ற தடங்கல்கள் உருவாக்கக்கூடும். மேலும், ஹேக்கர்கள் நுழைவதற்கான வாய்ப்பாகவும் அமையக்கூடும்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

உங்கள் டிரேடிங் தொடர்பான நோட்டிஃபிகேஷன்கள் அதிகமாகக் கிடைக்கும்படி செய்யுங்கள். ஆக்டிவிட்டி நோட்டிஃபிகேஷன்ஸ் (Activity Notifications) என்பதைச் செயல்படுத்தி, நோட்டிஃபிகேஷன் மெயில்கள் தொடர்ச்சியாக வரும்படி வைத்துக்கொள்ளவும். அப்போதுதான் அனைத்து விவரங்களையும் தொடர்ச்சியாகக் கண்காணித்து, தவறான பணப் பரிமாற்றமோ, பங்குப் பரிமாற்றமோ நடந்தால் உடனடியாகக் கண்டறிய முடியும்.

கணினி அல்லது லேப்டாப் மூலமாக ஷேர் டிரேடிங் செய்பவர்கள், கணினியில் டவுன்லோடு செய்யும் சாஃப்ட்வேர்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, ஃப்ரீவேர் சாஃப்ட்வேர்களை டவுன்லோடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த ஃப்ரீவேர் சாஃப்ட்வேர்கள் நம்பகத்தன்மையற்றவை. அவற்றின் வேலை, நம் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதுதான். அவை நம் வணிகத்துக்கும், பணப் பரிமாற்றத்துக்குமான பாதுகாப்பை நீக்கக்கூடியவை. ஆன்லைன் மூலமாக டிரேடிங்கில் ஈடுபடும்போது கையாள வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

தரகு நிறுவனங்களிலிருந்து பேசுவதுபோலப் பேசி ஆன்லைன் டிரேடிங் விவரங்கள் குறித்தோ, வங்கிக் கணக்குகள் குறித்தோ எவரேனும் விசாரித்தால், தகவல்களைப் பகிர்ந்துகொள்ளாதீர்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“பங்குச் சந்தை வர்த்தகத்தை மொபைல் ஆப் மூலமாகவும் செய்யலாம்; இணையதளம் மூலமாகவும் செய்யலாம். இணையதளம் மூலமாக ஆன்லைன் வர்த்தகம் செய்வதுதான் பிரச்னைகளை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, குறிப்பிட்ட தரகு நிறுவனங்களின் ஆப்பை டவுன்லோடு செய்து பயன் படுத்தினால் பாதுகாப்பானதாக இருக்கும். ஆப் மூலமாக நடைபெறும் பணப் பரிமாற்றத்துக்கு பாதுகாப்பு வலுவானதாக இருக்கும்.

ஆன்லைன் பிரவுஸர் மூலமாக வர்த்தகம் செய்தால், வைரஸ் தாக்குதல் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. பிரவுஸரில் மால்வேர் பிரச்னை எழும். ஆனால் ஆப்பில் மால்வேர் பயம் கிடையாது.

தரகு நிறுவனங் களின் ஆப்பைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அதிலிருக்கும் பாதுகாப்பு முறைகள் குறித்துக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அதில் பணப் பரிமாற்றம் செய்யும்போது அதிலிருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் கேட்டறிய வேண்டும். அடுத்ததாக, அவர்கள் எவ்வளவு வங்கிகளுடன் இணைப்பில் இருக்கிறார்கள் என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். வங்கிகளின் எண்ணிக்கைக் குறைவாக இருந்தால், பணப் பரிமாற்றப் பயன்பாடுகள் சிரமமானதாக இருக்கும். அடுத்த மிக மிக முக்கியமான விஷயம், ஏர்போர்ட், மால்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் வழங்கப்படும் இலவச வைஃபை மூலமாகப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது. இதன் மூலம் இன்னொருவர் உங்களுடைய கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவதற்கு வாய்ப்பு அமையக்கூடும்” என்றார்.

பங்குச் சந்தை ஆன்லைன் டிரேடிங்..! - கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

பெரும்பாலான தரகு நிறுவனங்கள், `2FA’ எனப்படும் கூடுதல் பாதுகாப்பு வழிமுறைகளைச் செயல்படுத்துகின்றன. இந்த முறையில் கூடுதலாக ‘ஓ.டி.பி பாஸ்வேர்டு’ ஒன்றும் மெயில் அல்லது செல்போன் வழியாக அனுப்பப்படும். இது கூடுதல் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. இணையத்தின் மூலமாக ஆன்லைன் டிரேடிங் செய்பவர்கள், டிரேடிங்கை முடித்துவிட்டு வெளி யேறும்போது முறை யாக ‘லாக் அவுட்’ செய்ய வேண்டியது அவசியம்.

அண்மைக் காலமாக, வங்கி களிலிருந்து பேசுவது போலப் பேசி, வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்கும் மோசடி நடக்கிறது. அதேபோல, தரகு நிறுவனங் களிலிருந்து பேசுவதுபோலப் பேசி உங்கள் ஆன்லைன் டிரேடிங் விவரங்கள் குறித்தோ, வங்கிக் கணக்குகள் குறித்தோ செல்பேசி மூலமாக எவரேனும் விசாரித்தால், எந்தத் தகவலையும் பகிர்ந்துகொள்ளக்கூடாது.

ஆன்லைன் மூலம் ஷேர் டிரேடிங் செய்வது எவ்வளவு எளிதோ, அதேபோல கவனக்குறைவாக இருந்தால் தவறு நடப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதை மனதில்கொண்டு செயல்படுவது நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு