Published:Updated:

கோவிட் ஏற்படுத்திய டிஜிட்டல் புயல்... கவனிக்க வேண்டிய பங்குகள்..!

டிஜிட்டல் பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
டிஜிட்டல் பங்குகள்

டிஜிட்டல் பங்குகள்..!

கோவிட் ஏற்படுத்திய டிஜிட்டல் புயல்... கவனிக்க வேண்டிய பங்குகள்..!

டிஜிட்டல் பங்குகள்..!

Published:Updated:
டிஜிட்டல் பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
டிஜிட்டல் பங்குகள்

சிவராமகிருஷ்ணன், சார்ட்டட் அக்கவுன்டன்ட், நிறுவனர், www.sinceresyndication.com

இன்று பண்ருட்டியில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருள் பரோடாவில் விற்கப்படுகிறது. கொல்கத்தாவில் இருக்கும் ஒரு நபர் கோயம்புத்தூருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பாடம் கற்பிக்கிறார். இப்படி எல்லாம் நடக்கும் என்று கடந்த காலத்தில் நாம் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால், இன்று நம் கனவை நனவாக்கி, அதைச் சாத்தியப்படுத்திள்ளது ‘டிஜிட்டல் உலகம்.’

சிவராமகிருஷ்ணன் 
சார்ட்டட் அக்கவுன்டன்ட், நிறுவனர், 
www.sinceresyndication.com
சிவராமகிருஷ்ணன் சார்ட்டட் அக்கவுன்டன்ட், நிறுவனர், www.sinceresyndication.com

தற்போதைய சூழலில் டிஜிட்டல் உலகின் பங்களிப்பு இல்லாமல் நம் அன்றாட வியாபாரத்தை நடத்துவது சாத்தியமே இல்லை. உலக அளவில் உற்பத்தித் துறையில் வேண்டுமானால் சீனா பெரிய நாடாக இருக்கலாம். ஆனால், உலகின் மொத்த மென்பொருள் (சாஃப்ட்வேர்) தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறமை இந்தியாவிடம் இருக்கிறது. இந்த மாற்றம் எப்படி நடந்தது?

கோவிட்  ஏற்படுத்திய டிஜிட்டல் புயல்... கவனிக்க வேண்டிய பங்குகள்..!

1. கிளவுட் (Cloud) தொழில்நுட்பத்தின் எல்லையில்லா வளர்ச்சி...

உலகில் உள்ள 95 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட கம்பெனிகள் தங்களது டேட்டாவை சர்வர்களில் வைத்துவந்துள்ளன. இன்று உலகமே கிளவுட் டெக்னாலஜிக்கும் மாறிவருகிறது. காரணம், இந்தத் தொழில்நுட்பத்தின்மூலம் மிகக் குறைந்த செலவில் நிறுவனத்தின் அனைத்து டேட்டாக்களையும் பாதுகாக்க முடிவதுதான். காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கும் கிளவுட் டெக்னாலஜியால ஐ.டி நிறுவனங்கள் அனைத்துக்கும் கொண்டாட்டமே.

2. டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன்

வேகமாக விற்கக்கூடிய நுகர்வோர் பொருள்கள் மற்றும் சேவைகள் (B to B & B to C) கடைகள் மூலமாக விற்கப்படும் காலங்கள் போய் இன்று, அவற்றை டிஜிட்டல் தளங்களின் மூலமாக விற்க வேண்டிய நிலை உள்ளது. ஏனெனில், பலரும் கடைக்குச் சென்று இந்தப் பொருள்களை வாங்குவதைவிட இணையதளங்கள் மூலமே வாங்கிவிடுகின்றனர். இந்த டிஜிட்டல் மாற்றம் உலகம் முழுவதும் ஊடுருவி இருப்பது டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ஒரு பெரும் வரப்பிரசாதமே!

3. சைபர் செக்யூரிட்டி (Cyber security)

கோவிட் நோய்த் தொற்றுக்குப்பின் இணைய தளத்தின் மூலம் வீட்டிலிருந்து வேலை பார்ப்பது இயல்பான விஷயமாக மாறிவிட்ட நிலையில், இணையதளத்தில் நம் டேட்டாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய ஹேக்கிங் சர்வ சாதாரணமாக நடக்கத் தொடங்கி யிருக்கிறது. ‘சைபர் செக்யூரிட்டி’ என அழைக்கப்படும் இணையதளப் பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு லாபம் ஈட்டும் நிலை நிலவுகிறது.

4. ஐ.ஓ.டி, ஏ.ஐ மற்றும் எம்.எல்...

ஒரு மனிதன் பல மணி நேரங்கள் செலவிட்டு செய்யக்கூடிய காரியங்கள் சில மணித் துளிகளிலேயே கச்சிதமாகச் செய்யக் கூடிய செயல்திறன் படைத்தது இன்டர்நெட் ஆஃ திங்ஸ் - IOT) மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்கிற நுட்பமான சாஃப்ட்வேர் சொல்யூஷன்கள் ஆகும். ஏ.ஐ மற்றும் எம்.ஐ என்று சொல்லப்படும் இயந்திர வழி கற்றல் (Machine Learning) போன்றவற்றின் மூலம் பலரும் சேர்ந்து கஷ்டப்பட்டு செய்ய வேண்டிய வேலைகளை எளிதாகவும் விரைவாகவும் செய்து முடிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. தொழில்நுட்பங்களை உலகுக்கு அளிக்கும் மிகப் பெரிய ‘டீப் டெக்’ கம்பெனிகளுக்கு இனி பிரமாதமான வருங்காலம் காத்திருக்கிறது.

கோவிட்  ஏற்படுத்திய டிஜிட்டல் புயல்... கவனிக்க வேண்டிய பங்குகள்..!

ஐ.டி கம்பெனிகளின் வளர்ச்சி...

கடந்த ஐந்து வருடங்களில் ஐ.டி இண்டெக்ஸ் (IT Index) ஆண்டுக்கு சராசரியாக 25% லாபத்தை ஈட்டியுள்ளது. நிஃப்டி ஈட்டிய 14% லாபத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், இது கணிசமான லாப விகிதமாகும். பொருளாதார வளர்ச்சியையும், நிஃப்டியையும்விட, ஐ.டி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் வரும் ஐந்து ஆண்டுக் காலத்தில் அதிகமாகவே இருக்கும். இத்தகைய வரலாறு காணாத மாற்றங்களால் பயனடைந்து, மிகச் சிறப்பாக வளர்ந்துவரும் ஐ.டி கம்பெனிகளில் நியாயமான மதிப்பீட்டைக் கொண்டுள்ள சில பங்கு நிறுவனங்கள் பற்றிப் பார்ப்போம்.

1. மாஸ்டெக் (Mastek)

1982-ல் நிறுவப்பட்ட மாஸ்டெக் நிறுவனம், கிளவுட் சர்வீசஸ், டிஜிட்டல் பிளாட்போர்ம், அப்ளிகேஷன் டெவெலப்மென்ட் ஆகிய துறை களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வருமானத்தில் 75% கிளவுட் மற்றும் டிஜிட்டல் துறையிலிருந்து வருகிறது.

பிப்ரவரி 2020-ம் ஆண்டில் மாஸ்டெக் லிமிடெட் எவோசிஸ் (EVOSYS) என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை வாங்கியது. இது 15 வருட அனுபவத்தைக் கொண்டுள்ளது, மற்றும் 30+ நாடுகளிலும்,1200+ ஆரக்கிள் கிளவுட் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது. எவோசிஸை கையகப்படுத்திய பின், 2021-ம் நிதியாண்டில் மாஸ்டெக்கின் வருவாய் 70% மற்றும் லாபம் 90% முறையே அதிகரித்துள்ளது.

தற்போது, இந்த நிறுவனம் 2021-22 லாபத்தின் 19 மடங்கு பெருகி இருக்கிறது. இது மிட்கேப் ஐடி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது குறைவுதான் என்பது முதலீட்டாளர்களுக்கு நீண்டகால முதலீட்டுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

2. பிர்லாசாஃப்ட் (Birlasoft)

சி.கே பிர்லா குழுமத்தைச் சேர்ந்த பிர்லாசாஃப்ட் எனும் தொழில்நுட்ப நிறுவனம், தொழில்நுட்ப ஆலோசனை (IT consultancy), மென்பொருள் மேம்பாடு (software development) & கணினி நிரலாக்கம் (computer programming) ஆகிய துறைகளில் செயல்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 2020-ல், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் உலகளாவிய கிளவுட் கூட்டணியை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் பிறகு, நிறுவனத்தின் டிஜிட்டல் வணிகத்தின் வருவாய் 26% முதல் 35% வரை உயர்த்துள்ளளது. இதனால், நிறுவனத்தின் லாபம் 2020 செப்டம்பரில் ரூ.60 கோடியிலிருந்து மார்ச் 2021-க்குள் ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது, இந்த நிறுவனம் அதன் 2021-22-ன் லாபத்தில் 24 மடங்கு பெருமானத்தில் உள்ளது. எதிர்காலத்தில் 15% வளரும் நிலையில், இந்த விலை குறைவே.

3. ஹெச்.சி.எல் டெக் (HCL TECH)

ஹெச்.சி.எல் டெக் இந்தியாவில் நான்காவது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். அதனுடைய தொழில்நுட்பச் சேவைகள் - டிரான்ஃபர்மேஷனல் அவுட்சோர்சிங், சாஃப்ட்வேர் டெவெலப்மென்ட், பி.பி.ஓ சேவை ஆகும். இந்த நிறுவனத்தின் கடந்த மூன்று ஆண்டு சராசரி விற்பனை வளர்ச்சி 13% ஆகவும், லாபம் 12% ஆகவும் இருக்கிறது. 2021-22 முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் முறையை 15% மற்றும் 12% அதிகரித்துள்ளது. தற்போது ஹெச்.சி.எல் டெக் அதன் 2021-22 லாபத்தின் 22 மடங்கு இருக்கும் நிலையில், 28 - 32 மடங்கு வர்த்தகம் செய்யும் லார்ஜ்கேப் ஐ.டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.

4. விப்ரோ (Wipro)

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அதன் நிர்வாகத்தைச் சார்ந்தே அமையும். இந்தியாவில், விப்ரோ மூன்றாவது பெரிய ஐ.டி நிறுவனம். இதன் தலைவராக ரிஷாத் பிரேம்ஜி ஆண்டு 2019 முதல் பொறுப்பேற்றார். அவர் 2020-ம் ஆண்டில் தியரி தேலப்பேர்ட்டே என்பவரைத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தார். இவ்விருவரும் முற்போக்கு சிந்தனைகளாலும் மேலாண்மை உத்திகளாலும் நிறுவனத்தின் லாபம் மற்றும் வளர்ச்சி முன்பைவிட பெருமளவு பெருக்க முயற்சி எடுக்கிறார்கள்.

ஆறு நிறுவனங்களை கையகப் படுத்தப்போவதாக விப்ரோ அறிவித்துள்ளது. ஏப்ரல் 2021-ல், லண்டனைச் சார்ந்த, தி கேப்பிடல் மார்க்கெட்ஸ் கம்பெனி (கேப்கோ) குழுமத்தில் 100% பங்குகளை விப்ரோ கையகப்படுத்தியது. இந்த நிறுவனத்தின் வருமானத்தில் 45 சதவிகிதத்துக்கு மேல் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிளவுட் சர்வீஸ் மூலம் பெறப்படுகிறது.

இதனால் விப்ரோவின் எபிட்டா மார்ஜின் 2019-ல் 17% முதல் இப்போது 19% - 21 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் இந்நிறுவனம் 2022-ன் லாபத்தின்படி 22X பெருமானத்தில் திகழ்கிறது. வரும் மூன்று வருடங்களில் எதிர்பார்க்கப் பட்ட வளர்ச்சிக்கு, இந்த விலை குறைவுதான்!