Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குச் சந்தை...
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை...

B U Y & S E L L

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

B U Y & S E L L

Published:Updated:
பங்குச் சந்தை...
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை...

சமீப காலமாக சந்தை விடுமுறை நாள்களில் எஸ்.ஜி.எக்ஸில் (SGX) நகர்வு தீவிரமாக இருக்கிறது. இதை முந்தைய வாரம் சந்தை 275 புள்ளிகளுக்கு உயர்ந்த நிலையில் பார்க்க முடிந்தது. மீண்டும் கடந்த வாரம் இதே புள்ளிகள் அளவு இறக்கம் கண்டபோதும் இது நடந்தது. இரண்டு சூழல்களும் சந்தையில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே, புதிய இறக்கநிலையை எட்டியபிறகு நிஃப்டியில் இறக்கத்துக்கான போக்கு முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை, சந்தையின் செயல்பாடு சர்வதேச சந்தைகளின் தாக்கத்தில் இருக்கலாம். ஆனால், தற்போது நான்காம் காலாண்டு முடிவுகள் வந்துகொண்டிருப்பதால், பாசிட்டிவான போக்கு உருவாக வாய்ப்புள்ளது. தவிர, ஏற்ற இறக்கமும் குறையும்.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

கடந்த சில நாள்களாகக் காணப்படும் தொடர் இறக்கத்துக்கு முக்கியமான காரணம் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்துவரும் அச்சுறுத்தல்தான். ஊரடங்குக் கட்டுப்பாடுகள் அதிகரிப்பதற்கான சூழல் பயத்தை உண்டாக்கியிருக்கிறது. இது சந்தையின் மீதான சென்டிமென்டை பாதித்துள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயக்கம் காட்டுகிறார்கள்.

மேலும், இன்றைய சூழல் கடந்த ஆண்டு நிலைமையைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்கிறது. கடந்த வருடம் கொரோனா பரவல் அதிகரித்து, ஊரடங்கு தொடங்கிய கட்டத்தில் சந்தை பெரும் சரிவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்தை எதிர்பாராத ஏற்றத்தைக் கண்டது. தற்போது எல்லோரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். சூழல் கட்டுக்குள் இருக்கும் நிலையில் சந்தை இறக்கம் காண்கிறது. தற்போது தடுப்பூசி விநியோகத்துக்கும் கொரோனா பரவலுக்கும் இடையில்தான் பந்தயம் நடக்கிறது. இதனால் சந்தையின் செயல்பாடுகளும் விசித்திரமாக இருக்கின்றன.

துறை சார்ந்த சுழற்சி காளையின் போக்கில் இருப்பதுபோல சற்று விறுவிறுப்பாக இருக்கிறது. காரணம், சந்தை செயல்பாடு காலாண்டு முடிவுகள் சார்ந்து இருக்கிறது. குறிப்பாக, மிட்கேப், ஸ்மால்கேப் பிரிவுகளில் ஈடுபாடு அதிகம் காணப்படுகிறது.

பங்குச் சந்தை...
பங்குச் சந்தை...

கடந்த வாரம் நிஃப்டியின் பிரேக் அவுட் நிலையானது 15000 புள்ளிகளுக்கு அருகில் இருந்தது. ஆனால், சில இடைவெளிகளுக்குப் பிறகு இது 14600 புள்ளிகள் என்ற நிலைக்கு இறங்கியுள்ளது. பேங்க் நிஃப்டியின் செயல்பாடும் தொடர்ந்து மோசமாக இருந்ததால், எஃப்.ஐ.ஐ முதலீட்டாளர்கள் நிதித்துறை பங்குகளை விற்கும் நிலைக்கு ஆளானார்கள். கடந்த வாரம் நிஃப்டி 14200 என்ற நிலை அச்சுறுத்தல் கட்டத்தில் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந் தோம். அது முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனாலும் முயற்சி தோல்விடையந்தது. இந்த நிலையை உடைத்து இறங்கியிருந்தால் 13650 வரை எந்தவித அர்த்தமான சப்போர்ட் நிலையும் இல்லை. தற்போது சந்தையின் போக்கில் ஒரு மாற்றம் உண்டா வதற்கான புள்ளியில் இருக் கிறோம். எனவே, கவனமாகக் கையாள வேண்டும்.

சார்ட்
சார்ட்

குஃபிக் பயோசயின்ஸ் (GUFICBIO)

தற்போதைய விலை ரூ.128.35

வாங்கலாம்

பல ஆண்டுகளாக கன்சாலி டேஷன் போக்கில் இருந்த இந்தப் பங்கின் விலை 2015-ல் பிரேக் அவுட் ஆகி, ரூ.170 வரை உயர்ந்தது. ஆனால், 2020 தொடக்கத்தில் இறக்கம் கண்டு ரூ.35 வரை இறங்கியது. அதன் பிறகு மெள்ள மீண்டுவந்து கொண்டிருக்கிறது.

தற்போது பங்கின் வர்த்தகத் தில் வால்யூம் அதிகரித்துள்ளது. இதனால் பங்கின் விலையிலும் ஏற்றமடையும் சாத்தியங்கள் உருவாகியிருக்கின்றன.

எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.112 ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும். குறுகியகாலத்தில் இந்தப் பங்கின் விலை ரூ.175 வரை உயர வாய்ப்புள்ளது.

ஓரியன்ட் ரெஃப்ராக்டரீஸ் (ORIENTREF)

தற்போதைய விலை ரூ.306.10

வாங்கலாம்

பிரேக் அவுட் ஆகி புதிய வரலாற்று உச்சத்தை எட்டும் பங்குகள் மீது முதலீட்டாளர்கள் கவனம் அதிகரிப்பது வழக்கம். தற்போது இந்தப் பங்கிலும் அதுதான் நடந்துள்ளது.

கடந்த மார்ச்சில் பங்கில் ஏற்பட்ட இறக்கம் முடிவுக்கு வந்து காளையின் போக்கு உருவாகியுள்ளது. தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.400 வரை உயரலாம். ஸ்டாப்லாஸ் ரூ.290-க்கு கீழ் வைத்துக் கொள்ளவும்.


வொக்ஹார்ட் (WOCKPHARMA)

தற்போதைய விலை ரூ.518.20

வாங்கலாம்

குறிப்பிட்ட கால சுழற்சியில் வொக்ஹார்ட் சந்தையின் கவனத்துக்கு வருவதுடன், நல்ல செயல்பாட்டையும் காட்டத் தொடங்கியுள்ளது. இந்தப் பங்கின் வர்த்தகத்தில் நல்ல வால்யூம் முன்னேற்றமும், சிறப்பான மொமென்டமும் காணப்படுவதை சார்ட்டில் பார்க்க முடிகிறது.

இந்தப் போக்கு மேலும் தொடரும். எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கில் லாங் பொசிஷன்களை எடுக்கலாம். ரூ.625 வரை உயர வாய்ப்புள்ளது.

தமிழில்: திவ்யா

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism