Published:Updated:

சந்தை சரிவில் வாங்க வேண்டிய விலை குறைந்த வேல்யூ பங்குகள்!

வேல்யூ பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
வேல்யூ பங்குகள்

கவர் ஸ்டோரி

சந்தை சரிவில் வாங்க வேண்டிய விலை குறைந்த வேல்யூ பங்குகள்!

கவர் ஸ்டோரி

Published:Updated:
வேல்யூ பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
வேல்யூ பங்குகள்

பங்குச் சந்தையில் தற்போது காணப்படும் போக்கு முதலீட்டாளர்களிடையே கவலையை உண்டாக்கியிருக்கிறது. அதாவது, சந்தையின் பிரதானக் குறியீடுகள் கடும் இறக்கத்தைச் சந்தித்துள்ளன. இந்த இறக்கத்தால் பல பங்குகளின் விலை கடுமை யாகக் குறைந்துள்ளன. இவ்வாறு பங்குகளின் விலை குறைந்தது முதலீட்டாளர்களிடம் பல குழப்பங்களையும் கேள்விகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சந்தை சரிவில் எந்தப் பங்குகளை வாங்கிச் சேர்க்கலாம், எந்தப் பங்குகளை எல்லாம் வாங்காமல் தவிர்க்கலாம் என்கிற கேள்வி முதலீட்டளர்களின் மனதில் திரும்பத் திரும்ப வருகிறது. இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறிய முதலில் முயற்சி செய்வோம்.

இறக்கத்தை விரும்பாத முதலீட்டாளர்கள்...

பொதுவாக, எந்த முதலீட்டாளரும் சரிவை விரும்புவதில்லை. பங்கு விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஆனாலும், சில நேரங்களில் குறுகிய காலத்தில், குறிப்பிட்ட அளவில் பங்கு விலை இறங்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த இறக்கமானது ஒரு வாரமோ, அதற்கு மேலாகவோ நீடித்துக் காணப்பட்டால் அதை சந்தை சரிவு என்கிறோம்.

இறக்கத்தின் போக்கானது காலத்தின் அடிப்படையில் நாள்களிலோ, வாரங்களிலோ, மாதங்களிலோ ஏன் வருடக் கணக்கில்கூட தொடரலாம். இந்த உண்மையை நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டால், சந்தை இறக்கத்தைப் பதற்றப்படாமல் நீங்கள் பார்க்கத் தொடங்கிவிடுவீர்கள்.

ஆனால், நல்ல விஷயம் என்னவெனில், சந்தையில் தற்போது நீங்கள் பார்க்கும் இறக்கம் நீண்டு தொடரக்கூடியதல்ல. எனவே, சந்தை இறக்கம் பற்றி நீங்கள் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை.

விலைக்கும் மதிப்புக்கும் உள்ள வித்தியாசம்...

சந்தை இறக்கங்களின்போது முதலீட்டாளர் களின் மனநிலை பதற்றத்துக்கு உள்ளாகாமல் நிதானமாக இருக்க வேண்டுமெனில், முதலில் பங்கின் விலை மற்றும் மதிப்பு இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தையும், அவை இரண்டுக்கும் இடையிலான தொடர்பையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

விலை என்பது ஒன்றைப் பெறுவதற்கு நாம் செலுத்துகிற கட்டணம். அதாவது, ஒரு நிறுவனத்தின் பங்கை சந்தையில் வாங்கும்போது நாம் தருகிற கட்டணம் என்பது விலை ஆகும். மதிப்பு என்பது நாம் தரும் விலைக்கு அந்தப் பங்கு தகுதியானதுதானா என்று மதிப்பீடு செய்வதாகும்.

உதாரணமாக, இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,300 ஆகும். ஆனால், அதன் சரியான மதிப்பீடானது அதற்கும் மேலானதாக இருக்கும். விலை நீண்ட காலமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில், தங்கத்தின் மதிப்பும் உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

இப்போது ஒரு கேள்வி... தங்கத்தின் விலை குறைகிறதா? கொஞ்சம் ஏறுவதும் பின்பு இறங்குவதுமாகத்தானே தங்கத்தின் விலை எப்போதும் இருக்கிறது. ஆனால், தங்கத்தின் விலை குறைவதைப் பார்த்து மக்கள் என்றைக்காவது பதற்றப்படுகிறார்களா? இல்லை. என்ன காரணம் எனில், தங்கம் மிகுந்த மதிப்பு வாய்ந்தது என்று மக்களுக்குத் தெரிவதால்தான். அதனால் விலை குறையும் போதெல்லாம் இன்னும் கொஞ்சம் தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்ளவே மக்கள் விரும்புகிறார்கள்.

இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டால், பங்குச் சந்தையிலும் இதை நாம் முயற்சி செய்து பார்க்கலாம். அதாவது, தங்கத்தைப் போலவே, அனைத்துப் பங்குகளுக்கும் ஒரு விலை உண்டு. அந்த விலைகள் அவற்றின் சரியான மதிப்பைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

பங்கை மதிப்பிடும் அளவீடுகள்...

ஆனால், தங்கத்தைப்போல், மனநிலை அடிப்படையில் அல்லாமல் பங்குகளின் மதிப்பானது சில கணித அளவீடுகள் மூலம் மதிப்பிடப்படுகிறது. அவை புத்தக மதிப்பு, இ.பி.எஸ், பி.இ விகிதம் உள்ளிட்டவை ஆகும்.

இவை எல்லாம் ஒரு பங்கின் உள்ளார்ந்த மதிப்பைக் கணக்கிட உதவும். அப்படிக் கணக்கிடப்பட்ட உள்ளார்ந்த மதிப்பைவிட சந்தையின் விலை குறைவாக இருந்தால், அந்தப் பங்கை வாங்கலாம். அதாவது, அந்தப் பங்கானது குறைந்த மதிப்பீட்டில் கிடைக்கிறது. அதேபோல, விலை அதிகமாக இருந்தால், அந்தப் பங்கு அதிக மதிப்பீட்டில் விற்பனை ஆகிறது என்று அர்த்தம். அப்போது விலை குறைவதற்காகக் காத்திருக்க வேண்டும்.

காளைச் சந்தையில் ஒரு பங்கின் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டால் அவற்றின் விலை அதன் மதிப்பைவிட அதிகமாக மதிப்பிடப்பட வாய்ப்புள்ளது. அந்தச் சமயத்தில், நாம் பொறுமை காக்கவோ, அந்தப் பங்கை வாங்கவோ செய்வோம். ஒரு பங்கு நிறுவனத்தின் எதிர்காலம் மற்றும் பொருளா தாரம் ஆகியவையும் இவற்றின் மீது தாக்கத்தை உண்டாக்கும்.

தொடர்ந்து ஏற்றம் கண்டு அதிக மதிப்பீட்டில் இருக்கும் சந்தையானது ஒரு கட்டத்தில் இறக்கம் அடைய ஆரம்பிக்கும். அதன் மூலம் விலை மற்றும் மதிப்பு இடையிலான வேறுபாட்டை சமநிலை செய்ய முயற்சி செய்யும். இதன் காரணமாக, பங்கின் விலைகள் குறையும். ஆனால், நாம் விலை குறைவதைப் பார்ப்போமே தவிர, அதன் மதிப்பு என்ன என்பதைக் கவனிக்க மறந்து விடுகிறோம்.

அவசியம் கேட்க வேண்டிய 2 கேள்விகள்...

பங்கின் விலை குறைவாக இருக்கும்போது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய இரண்டு கேள்விகள் இனி...

1. எதிர்காலத்தில் நல்ல மதிப்புடன் விளங்கும் பங்கை நாம் வாங்குகிறோமா?

2. நாம் இப்போது தரும் விலை அந்தப் பங்கின் எதிர்கால மதிப்புக்கு நியாயமானதா?

இந்தக் கேள்வியின் மூலமாக, ஒரு பங்கு எதிர்காலத்தில் தொடர்ந்து மதிப்பு மிக்கதாக இருக்கும் என்று நமக்குத் தோன்றும்பட்சத்தில் சந்தை இறக்கம் காணும்போதும் அந்தப் பங்கைத் தொடர்ந்து வைத்திருக்கலாம். வாய்ப்பு இருந்தால் மேலும் அந்தப் பங்கை இறக்கத்தின்போது இன்னும் கொஞ்சம் வாங்கிச் சேர்க்கலாம்.

இறக்கத்தால் பங்கின் மதிப்பு குறைவ தில்லை. விலை குறைந்துள்ளது என்பதை நாம் என்றும் மறக்கக்கூடாது.

பங்கின் மதிப்பைத் தீர்மானிப்பது எது..?

அடுத்த கேள்வி, மதிப்பு மிக்க பங்கு என்பதை எது தீர்மானிக்கிறது? இந்தக் கேள்விக் கான பதிலைப் பெற பின்வரும் கேள்விகளை அவசியம் கேட்க வேண்டும். 1. தொழிலின் தரம் எப்படி இருக்கிறது, 2. நிறுவன நிர்வாகத்தின் தரம் எப்படி இருக்கிறது, 3. விற்பனை வளர்ச்சி எப்படி இருக்கிறது, தொடர்ந்து லாபம் ஈட்டும் வாய்ப்பு எப்படி இருக்கிறது, நிறுவனத்தின் செயல்பாடுகள் எப்படி, 4. கடன், அடமானம் உண்டா, 5. தொழில் குறித்த கணிப்பு என்ன, 6. ஜி.டி.பி வளர்ச்சி பங்களிப்பு எப்படி?

உதாரணமாக, கடந்த 10, 20 ஆண்டுகளாக சந்தைக்கு சாதகமாக இருந்த அம்சங்கள் இனியும் சாதகமாக இருக்கும் என்பது நிச்சயம் இல்லை. சந்தை இண்டெக்ஸின் கூறுகள்கூட காலத்துக்கேற்ப நிறைய மாற்றங்களுக்கு உள்ளாகும். எனவே, நிறுவனங்கள் காலத்துக்கு ஏற்ப தங்களைப் புதுப்பித்து, மாற்றங்களுக்கு உள்ளாகவில்லை எனில், அவற்றின் மதிப்பு குறையும் வாய்ப்புகள் அதிகம். அதனால் அதன் விலையும் குறையும்.

வேல்யூ பங்குகள் என்றால்...

சவாலான பொருளாதாரச் சூழலிலும் லாபம் ஈட்டக்கூடிய நிறுவனங்கள் எவை என்பதை அவற்றின் காலாண்டு முடிவுகளைப் பார்த்தாலே கண்டுபிடித்துவிட முடியும். அந்தவகையில், ஒவ்வொரு துறையிலும் உள்ள வேல்யூ பங்குகளைப் பார்ப்போம்...

வங்கித்துறை - ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி

இந்தத் தனியார் வங்கி இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.12,604 கோடி நிகர வட்டி வருமான மாக ஈட்டியுள்ளது. அதே போல, வரிக்கு முந்தைய லாபமும் ரூ.5,555 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் மேலாண் நிர்வாகம், வளர்ச்சி, மூலதன கட்டமைப்பு, நிதிநிலையின் போக்கு ஆகியவை அனைத்துமே சிறப்பாக உள்ளது. இந்தப் பங்கு கடந்த ஓராண்டில் 13.4% வருமானம் கொடுத்துள்ளது.

ஆட்டோ உதிரிபாகங்கள் - எக்சைட் இண்டஸ்ட்ரீஸ்

பேட்டரி பிசினஸில் பெரிய நிறுவனமாக எக்சைட் இண்டஸ்ட்ரீஸ் விளங்குகிறது. இதன் சிறப்பான நிதிநிலை செயல்பாடு அடிப்படையில் தரமான நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.3,959.24 கோடி லாபத்தைக் கடந்த காலாண்டில் பதிவு செய்துள்ளது. இதன் இ.பி.எஸ் அளவும் காலாண்டு அடிப்படையில் ரூ.46.58 என்னும் அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. சென்செக்ஸ் குறியீட்டுடன் ஒப்பிடுகையில், இந்தப் பங்கு குறைவான ரிஸ்க்கையே கொண்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் - ஹெச்.சி.எல் டெக்

ஹெச்.சி.எல் டெக் அதன் வளர்ச்சி, நிர்வாகம், நிதிநிலை ஆகியவற்றின் அடிப்படையில் மிக உயர்ந்த தரமான நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ஐ.டி துறையில் மூன்றாவது நிறுவனமாகத் தரச்சான்று தரப்பட்டுள்ளது. இந்தப் பங்கு உயர்ந்த டிவிடெண்ட் வருமானத்தையும் கொடுத்து உள்ளது. இந்தப் பங்கின் மதிப்பும் கவர்ச்சிகர மானதாக இருக்கிறது.

இதன் காலாண்டு வரிக்குப் பிறகான லாபம் அதிகரித்து, ரூ.3,593 கோடியாக உள்ளது. மேறும், அரையாண்டு அடிப் படையில் ரூ.12,636 கோடி பணம் இந்த நிறுவனத்திடம் சேமிப்பில் உள்ளது. கடந்த ஏப்ரல் 2022-ல் இந்த நிறுவனம் அதன் முதலீட் டாளர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.18 வீதம் டிவிடெண்ட் வழங்கியது.

பொறியியல், டிசைன் மற்றும் கட்டுமானம் - எல் அண்ட் டி

இந்தியாவின் பொறியியல், டிசைன் மற்றும் கட்டுமான துறையில் உலகளாவிய திட்ட செயல்பாடுகள் மூலம் முன்னணி பெரிய நிறுவனமாக எல் அண்ட் டி விளங்குகிறது. அதன் விற்பனை அளவு, லாப வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த நிறுவனத் தின் தற்போதைய பங்கு விலை சரியான மதிப்பீடாகக் கருதப் படுகிறது. இதன் பாசிட்டிவ்வான நிதிநிலை செயல்பாடு, மிகக் குறைவான கடன்-பங்கு மூலதன விகிதம் ஆகியவற்றின் காரண மாக சந்தையின் பாதிப்புகளைச் சமாளித்து சிறப்பாக செயலாற்றக் கூடிய பங்காக இது உள்ளது.

சந்தையில் தற்போது முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை இழக்கக் காரணமாக இருந்த பங்குகளும் உள்ளன. அவற்றையும் பார்க்கலாம்.

வோடஃபோன் ஐடியா - இந்த விற்பனை அதிகரித்தாலும் புத்தக மதிப்பு நெகட்டிவ்வாக உள்ளது. துறையின் போட்டியை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி மதிப்பிலான கூட்டு ஒப்பந்தத்துக்கு இந்த நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இந்தப் பங்கு அடைந்த வீழ்ச்சியால் இதன் சந்தை மதிப்பு ரூ.47,000 கோடி அளவுக்கு சரிந்திருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது.

ரிலையன்ஸ் கேப்பிடல் - திவால் ஆனதாக அறிவிக்கப்பட்ட நிறுவனம் இது. இதற்குக் கடன் கொடுத்தவர்கள் அடமானமாக வைக்கப்பட்ட பங்குகளை விற்று, கடனை மீட்க முயன்றதால் இதன் சந்தை மதிப்பும் கடுமையாகச் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து வீழ்ச்சி கண்டது.

டாடா மோட்டார்ஸ் - இந்த நிறுவனத்தின் பங்கு தாரர்களுக்கு ஏற்பட்ட நிகர இழப்பு வருடாந்தர அடிப்படையில் 86.4% அதிகரித்துள்ளது.

இன்டர்குளோப் ஏவியேஷன் - விமானச் சேவை துறையில் அதிக சந்தைப் பங்களிப்பை வைத்துள்ள நிறுவனம் இது. ஆனால், நிறுவனத்தின் நஷ்டம் காரணமாக இதன் புத்தக மதிப்பு நெகட்டிவ்வில் உள்ளது. காலாண்டு வரிக்குப் பிந்தைய லாபம் 46.6% குறைந்துள்ளது. ஆனால், விற்பனை நன்றாக வளர்ச்சி கண்டுள்ளது.

மார்ச் 2021-க்குப் பிறகான காலாண்டுகளில் டிசம்பர் காலாண்டு தவிர, மீதமுள்ள காலாண்டுகளில் இந்த நிறுவனம் நஷ்டத்தையே பதிவு செய்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் விமான சேவைக்கான எரிபொருள் செலவும் அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் இந்த சவால்களை எல்லாம் என்ன உத்திகளைப் பயன்படுத்தி சமாளித்து லாபகரமானதாக அமையப்போகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (பேடிஎம்): சாஃப்ட் பேங்கின் விஷன் 1 போர்ட்ஃபோலியோவில் உள்ள இந்த நிறுவனம் மார்ச் 31, 2022 உடன் முடிந்த நிதி ஆண்டில் மட்டும் 23.9 பில்லியன் டாலரை இழந்துள்ளது. பேடிஎம் மதிப்பீட்டில் 600 மில்லியன் டாலரை இழந்துள்ளது.

2021 நவம்பரில் பட்டியல் ஆனதிலிருந்து பேடிஎம் நிறுவனப் பங்கு கடும் சரிவை சந்தித்து வருகின்றன. ஐ.பி.ஓ வெளியிடுபோது பேடிஎம் சந்தை மதிப்பு ரூ.1.4 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டது. தற்போது இதன் சந்தை மதிப்பு ரூ.33,529 கோடியாக உள்ளது.

முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஈடுபடும்போது முக்கியமாகக் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றும் மறந்துவிடக் கூடாத பாடம் பங்குகளை அவற்றின் மதிப்பை அறிந்து சரியான விலையில் தேர்ந் தெடுத்து முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான். மதிப்பறியாமல் வாங்கப் படும் பொருளால் எதிர்காலத்தில் நமக்கு லாபம் கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்!

தமிழில்: ஜெ.சரவணன்

சந்தை சரிவில் வாங்க வேண்டிய
விலை குறைந்த வேல்யூ பங்குகள்!
சந்தை சரிவில் வாங்க வேண்டிய
விலை குறைந்த வேல்யூ பங்குகள்!
சந்தை சரிவில் வாங்க வேண்டிய
விலை குறைந்த வேல்யூ பங்குகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism