கமாடிட்டி சந்தையில் முக்கிய கமாடிட்டிகள் 2020-ம் ஆண்டில் எப்படிச் செயல்படும் என்பதில், தங்கம் குறித்துத் தனிக் கட்டுரையாக விரிவாகப் பார்த்தோம். அடுத்த முக்கிய கமாடிட்டிகளான வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் குறித்து இங்கே பார்ப்போம்.

வெள்ளி

பொதுவாக, தங்கம் நகரும் திசையில்தான் வெள்ளியும் நகரும். என்றாலும், தற்போது தங்கம் மெள்ள ஏறும்போது வெள்ளி வலிமையாக ஏறுவதும், தங்கம் மெள்ள இறங்கும்போது வெள்ளி பலமாக இறங்குவதும் நிகழ்கிறது. 2019-ம் ஆண்டில் வெள்ளி ரூ.38,726 (ஒரு கிலோ வெள்ளியின் விலை) என்ற விலையிலிருந்து அதிகபட்சமாக ரூ.50,672-ஐ தொட்டது. வெள்ளி, தங்கத்தைவிட இப்படி ஒரு வலிமையான ஏற்றத்தைக் கொடுத்திருந்தாலும், வெள்ளியின் முடிவு விலை அடிப்படையில் பார்க்கும்போது 20% ஏற்றமே நிகழ்ந்திருக்கிறது.

வெள்ளி என்பது மதிப்புமிக்கது என்பதுடன், தொழிற்சாலை உபயோகம் என்ற கூடுதல் தேவையும் அதற்கு இருக்கிறது. உலகப் பொருளாதாரம் மேம்படும்போது வெள்ளியின் தேவை கூடுதலாக வாய்ப்பிருக்கிறது. எனவே, 2020-ம் ஆண்டில் வெள்ளியின் ஏற்றம் நிகழ்ந்தால், அது தங்கத்தைவிட பலமான ஏற்றமாக இருக்க வாய்ப்புள்ளது. வெள்ளி தற்போது ரூ.46,500 என்ற விலையில் வியாபாரமாகி வரும் நிலையில் அடுத்தகட்ட ஏற்றம் நிகழ்ந்தால், அதன் முந்தைய உச்சத்தின் அருகில் அதாவது, ரூ.51,000 என்ற எல்லையில் மிக பலமாகத் தடுக்கப்படலாம். இறக்கம் வந்தால் ரூ.37,400 என்ற ஆதரவு எல்லைவரை வந்து, மீண்டும் ஏறத் தொடங்கலாம்.

கச்சா எண்ணெய் 2020-ம் ஆண்டில் முக்கிய ஆதரவாக ரூ.3,600 என்ற எல்லையைக் கொண்டு இயங்க வாய்ப்புள்ளது!

கச்சா எண்ணெய்

2010-ம் ஆண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுமார் ரூ.4,000 என்ற விலையில் இருந்தது. பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் மிக வலிமையான ஏறி, 2013-ம் ஆண்டு உச்சமாக ரூ.7,784 என்ற புள்ளியைத் தொட்டு, நம் பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்தபட்சமாக ரூ.3,000, அதிகபட்சமாக ரூ.5,000 என்ற அளவில் நகர்ந்துவருகிறது. குறிப்பாக, 2019-ம் ஆண்டில் ரூ.3,314 என்ற குறைந்தபட்ச புள்ளியையும் மேலே ரூ.4,692 என்ற புள்ளியையும் தொட்டு நகர்ந்துவருகிறது. 2019-ம் ஆண்டின் ஆரம்பப் புள்ளியான ரூ.3,208-யும், அதிகபட்சமாகத் தொட்ட புள்ளியான ரூ.4,692-யும் கணக்கில் எடுத்துக்கொண்டால், கச்சா எண்ணெய் சுமார் 46% ஏற்றத்தைக் கொடுத்துள்ளது. கச்சா எண்ணெய் 2020-ம் ஆண்டில் முக்கிய ஆதரவாக ரூ.3,600 என்ற எல்லையையும், மேலே ரூ.5,050 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டு இயங்க வாய்ப்பிருக்கிறது.

காப்பர்

2019 -ம் ஆண்டு முழுவதும் ரூ.400 (ஒரு கிலோ) என்ற எல்லையில் இருந்து, ரூ.470 என்ற எல்லைக்குள்ளாகவே சுழன்று வந்தது. 2020-ம் ஆண்டில் மேல் எல்லையான ரூ.470-ஐ உடைத்தால் மிக பலமான ஏற்றம் வருவதற்கு வாய்புள்ளது.