Published:Updated:

Zomato IPO: வருகிறது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஐ.பி.ஓ; ஒரு பங்கின் விலை எவ்வளவு தெரியுமா?

Zomato ஐ.பி.ஓ
Zomato ஐ.பி.ஓ

ஸொமேட்டோ நிறுவனம் இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் ரூ.9,000 கோடி மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களின் ஒன்றான ஸொமேட்டோ (Zomato), சில மாதங்களுக்கு முன்பிருந்தே பங்குச் சந்தையில் களமிறங்க நடவடிக்கை எடுத்துவந்த நிலையில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் ஒப்புதலுக்குப்பிறகு, வருகிற ஜூலை 14 முதல் 16-ம் தேதி வரை தனது ஐ.பி.ஓ-வை வெளியிடுகிறது.

இந்த ஐ.பி.ஓ மூலம் ரூ.8,250 கோடியைத் திரட்ட ஏற்கெனவே முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அதன் மதிப்பை அதிகரித்து, மொத்தம் ரூ.9,375 கோடியை முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகிறது. அதன்படி, இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் ரூ.9,000 கோடி மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.

IPO
IPO
Zomato IPO: பங்கு வெளியீடு மூலம் ரூ.8,250 கோடி திரட்டும் ஸொமேட்டோ; அடுத்த இலக்குகள் என்ன?

மேலும், தனது விற்பனை பார்ட்னரான இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் மீதமுள்ள ரூ.375 கோடியைத் திரட்ட முடிவு செய்திருக்கிறது.

இந்த ஐ.பி.ஓ-வில் ரூ.65 லட்சம் பங்குகள் ஸொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஐ.பி.ஓ-வில் வெளியிடப்பட்டும் பங்கு ஒன்றின் விலைப்பட்டை ரூ.72-76 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 195 பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக, இதன் மடங்கில் எவ்வளவு வேண்டுமானாலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களின் பிரிவுக்கு 75%, 10% ரீடெய்ல் முதலீட்டாளர்களுக்கு, 15% நிறுவனமல்லாத முதலீட்டாளர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.

IPO
IPO
ஐ.பி.ஓ வெளியீட்டில் பங்கு வாங்கி          லாபம் பார்ப்பது எப்படி? கவனிக்க வேண்டிய உத்திகள்...

ஐ.பி.ஓ வெளியீட்டிற்குப் பிறகு, ஜூலை 26-ம் தேதியிலிருந்து ஸொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டை கோட்டக் மஹிந்திரா கேப்பிட்டல், மார்கன் ஸ்டேன்லி இந்தியா மற்றும் கிரெடிட் சூசே செக்யூரிட்டீஸ் (இந்தியா) ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.

மிகப்பெரியஐ.பி.ஓ!

கடந்த 2020-ம் ஆண்டில் எஸ்.பி.ஐ கார்டு ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.10,355 கோடியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டியது. அதன்பிறகு இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டும் ரீதியில் எந்தவொரு ஐ.பி.ஓ-வும் வெளியாகவில்லை. கொரோனாவின் பிடியில் இருந்து இந்தியப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருகிறது. இந்தியப் பங்குச் சந்தைகளின் செயல்பாடுகளும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை தந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ரூ.9,375 நிதியைத் திரட்டும் நோக்கில் வெளியாகும் மிகப் பெரிய ஐ.பி.ஓ இது என்பதால், முதலீட்டாளர்களிடம் இந்த ஐ.பி.ஓ-வுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு