Published:Updated:

இன்ஃபோசிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம்..! பிரச்னையின் மறுபக்கம் #SmartinvestorIn100Days நாள் -24

இன்ஃபோசிஸ் விவகாரத்தில் தாமதங்கள் சிலருக்கு சாதகமாகும்; வேறு சிலருக்கு பாதகமாக அமையலாம்.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்

தனியார், பங்குதாரர், பிரைவேட் லிமிடெட் என்று நிறுவன அமைப்புகளுக்கும் பப்ளிக் லிமிடெட் அமைப்புக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.

பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகம் அதன் பெரும்பான்மை பங்குகளை வைத்திருப்போரான புரமோட்டர்கள் வசம் இருப்பதால், அவர்களின் நிர்வாகத் திறமை, வேகம், ஆர்வம் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு நிறுவனம் சிறப்பாகவோ அல்லது சுமாராகவோ செயல்படும்; லாபமீட்டும். இது ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தின் குவாலிட்டி மேனேஜ்மென்ட்.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்

புரமோட்டர்கள் அந்த நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்குகள் இன்போசிஸ் போல 14 சதவிகிதமோ அல்லது டி.எல்.எப் போல 74 சதவிகிதமோ... புரமோட்டர்கள், நிறுவனத்தின் போர்டு மூலம் முடிவு செய்கிற விதமே தலைமை நிர்வாகிகள் மற்றும் டாப் மேனேஜ்மென்ட் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். வியாபாரம் அதன் விரிவாக்கம் மற்றும் மற்ற முக்கிய முடிவுகளை எல்லாம் டாப் மேனேஜ்மென்ட் எடுக்கும்.

தங்கள் பணத்தை, பங்குகளை வாங்குவதன் மூலம் நிறுவனத்திற்கு முதலீடாக கொடுத்தவர்களுக்கு, நிறுவனத்தின் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளைத் தடுக்கும், மாற்றும் வாய்ப்பு மிக மிக குறைவு. கணிசமான பங்குகள் வைத்திருக்கும் LIC போன்ற இன்ஸ்டிடியூஷனல் முதலீட்டாளர்களாக இருந்தால் மட்டும் நிர்வாகத்தின் சில முடிவுகளை மாற்ற முடியும், தடுக்க முடியும்.

Vikatan

மற்றபடி அதிலும் குறிப்பாக ரீடெய்ல் இன்வெஸ்டார் எனப்படும் சிறு முதலீட்டாளர்கள், நிர்வாகம் சொல்வதைக் கேட்டுக்கொண்டும் கொடுப்பதை வாங்கிக் கொண்டும் மட்டுமே இருப்பவர்கள்.

வியாபாரம்
வியாபாரம்

நிறுவனத்தையும் வியாபாரத்தையும் போர்டு மூலம் நடத்தும் புரமோட்டர்கள் அல்லது அவர்கள் நியமித்த நிர்வாகிகள் செய்வது எல்லாம் நிறுவனத்தின் நலன் கருதி மட்டுமே என்றும், அவர்கள் கொடுக்கும் கணக்குகள் சரியான முறையில்தான் செய்யப்பட்டிருக்கின்றன என நம்பும் நிலையில்தான் ஏனைய பங்குதாரர்கள் இருக்கிறார்கள்.

நிறுவனம் செய்யும் வியாபாரம், லாபம் போன்றவற்றைப் பொருத்து நிறுவனத்தின் பங்குகளை சந்தையில் எவர் வேண்டுமானாலும் வாங்கலாம்; விற்கலாம் என்ற நிலையில் வியாபாரம் லாபம் குறித்த தகவல்கள் அதி முக்கியமாகின்றன.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்

நிறுவனத்தின் வியாபாரம், லாபம் நஷ்டம் குறித்த தகவல்கள், அதன் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல, பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் அனைவருக்கும். அதாவது, பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும், ஈடுபடவிரும்பும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பங்குசந்தைகள் மூலம் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

எப்படி? சரியான தகவல்களாக. ஒரே நேரத்தில். அனைவருக்கும் ஒன்றுபோல தெரிவிக்கப்பட வேண்டும்.

தாமதங்கள் சிலருக்கு சாதகமாகும்... வேறு சிலருக்கு பாதகமாக அமையலாம்.

தவிர, தகவல்கள் அடிப்படையில் பங்குகள் வாங்குவதும் விற்பதும் நடைபெறுவதால், அந்த தகவல்கள் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். அதை உறுதி செய்யத்தான் இன்டர்னல் ஆடிட்டர், எக்ஸ்டெர்னல் ஆடிட்டர், மேனேஜ்மென்ட் கமிட்டி, போர்டு என்று பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு நிறுவனம் பணம் செலவு செய்கிறது.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்

குறிப்பிட்ட காலகட்டத்தில் நிறுவனம் நஷ்டம் அடைந்தால், லாபம் செய்தால், பெரும் லாபம் செய்தால் என்று ஒவ்வொரு போக்கிற்கும், பங்குகள் விலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். அந்தத் தகவல்களின் அடிப்படையில் பங்குகளை சிலர் விற்பார்கள், வேறு சிலர் வாங்குவார்கள். அப்படி, பலருடைய பணம் இந்தத் தகவல்களை வைத்து பங்குச்சந்தையில் ஈடுபடுத்தப்படுகிறது. லாபமோ நஷ்டமோ பார்க்கிறது.

வெளியிடப்படும் தகவல்களால் பங்கு விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு அதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் லாப நட்டம் தவிர, அந்த விதம் நிறுவனத்தை நடத்திய நிர்வாகிகளுக்கு, இங்கிரிமெண்ட், போனஸ், பதவி உயர்வுகள், ஸ்டாக் ஆப்ஷன்ஸ் போன்றவையும் முடிவுசெய்யப்படும். நிறுவனத்தின் பங்கு விலைகள் உயர்வதால் புரமோட்டர்கள் சொத்து மதிப்பு கூடும் அல்லது குறையும். அந்த பங்குகளை வாங்கி வைத்திருக்கும் பல்வேறு பரஸ்பர நிதிகளின் NAV மாறும்.

இன்ஃபோசிஸ் பரிதாபங்கள்: இதை அன்றே செய்திருக்கலாம்?!
#SmartInvestorIn100Days நாள் - 22

இவ்வளவும் நிர்வாகிகள் கொடுக்கும் நிதிநிலை தகவல்களால் நடப்பவை. இவற்றைத்தான் இன்ஃபோசிஸ் நிர்வாகத்தினர் குறிப்பாக அதன் CEO மற்றும் CFO சரியாக செய்யவில்லை. உள்நோக்கத்துடன் செலவுகளை குறைத்து, லாபத்தை அதிகரித்துக் காட்டி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்திருப்பதாக இன்ஃபோசிஸ் ஊழியர்கள் சிலர் வெளி உலகுக்கு அபாய மணி அடித்து இருக்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து, செபி மற்றும் வேறு சிலகண்காணிப்பு அமைப்புகளும் விசாரிக்க இருக்கின்றன. புகார் சரியென்றால், நிர்வாகம் செய்திருப்பது சாதாரண தவறல்ல. பலரையும் அவர்களுடைய பணத்துக்கு தவறான முடிவுகள் எடுக்க வைக்கும், உள்நோக்கமுள்ள செயல்பாடு; தங்கள் பதவிகளை, சம்பளத்தை, வருங்கால வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள செய்திருக்கும் திட்டமிட்ட தவறான செயல்; நேர்மையான நிர்வாகிகள் செய்யக்கூடிய புரொபஷனல் செயல் அல்ல;

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்
இது லட்சக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு செய்திருக்கும் நம்பிக்கை துரோகம்.
நம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா?! #SmartInvestorIn100Days நாள்-21

குற்றம் நிரூபிக்கபட்டால், புரமோட்டர்கள் தவறு செய்தவர்களைத் தண்டித்து, புதிய சரியான நிர்வாகிகளை நியமிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம். அதுதான் இன்போசிஸ் நிறுவனம் மீது முதலீட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை வரவழைக்கும்.

இது இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு மட்டுமல்ல. பங்குச் சந்தையின் பட்டியலிடப்பட்ட இருக்கும் அத்தனை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.