Published:Updated:

நிஃப்டி, சென்செக்ஸ்... இரண்டுக்குள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வோம்! #SmartInvestorIn100Days நாள்-53

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

`இப்போது சந்தை எப்படி இருக்கிறது’ என்று கேட்டால், எவற்றின் விலைகளை வைத்து, சந்தை உயர்வு என்றோ, சந்தை இறக்கம் என்றோ சொல்வது? எப்படிப் புரிந்துகொள்வது?

`புல் ரன்’ எனப்படும் காளையின் ஓட்டம் சில ஆண்டுகள் நடக்கும். அப்படிப்பட்ட ஓட்டம் எப்போது நிற்கும். எப்போது, எதனால் நிலைமை மாறும்?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வது கடினம் என்று தெரிந்திருந்தாலும், பலரும் இவற்றைக் கணிக்க முயல்வார்கள். இவற்றுக்கான பதில்கள் முன்கூட்டியே தெரிந்தால்தானே நஷ்டத்தைத் தவிர்க்க முடியும்; லாபத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும் அல்லது அதிகமாக்கிக்கொள்ள முடியும்.

பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருக்கும் சுமார் 5,000-க்கும் சற்று அதிகமான நிறுவனங்களின் பங்குகளும் ஒரே மாதிரி விலை உயரவோ, குறையவோ செய்யாது. அந்தந்த நிறுவனங்களின் லாப நஷ்டங்களைப் பொறுத்து சிலவற்றின் விலைகள் உயர்ந்தும், சிலவற்றின் விலைகள் குறைந்தும், இன்னும் பலவற்றின் விலைகள் அதிகம் மாறுதல்கள் இல்லாமலும் இருக்கும்.

`இப்போது சந்தை எப்படி இருக்கிறது’ என்று கேட்டால், எவற்றின் விலைகளை வைத்து, சந்தை உயர்வு என்றோ, சந்தை இறக்கம் என்றோ சொல்வது? எப்படிப் புரிந்துகொள்வது?

இந்தச் சிக்கலைத் தீர்க்கத்தான் குறியீட்டு எண் என்பதை ஏற்படுத்தினார்கள். குறியீட்டு எண் என்பதை ஆங்கிலத்தில் `இன்டெக்ஸ்’ என்பார்கள். எதையாவது சுட்டிக்காட்டுவதுதான் `சுட்டி’. `சுட்டி’ என்பது இன்டெக்ஸ்.

ShareMarket
ShareMarket
ஹர்ஷத் மேத்தாவால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா?#SmartInvestorIn100Days நாள்-51

நம் நாட்டை ஆள்பவர்கள், மக்களின் பிரதிநிதிகளான M.P-க்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். 130 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கும் நாட்டில், 18 வயது ஆனவர்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்யும் 543 பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளாகக் கருதப்படுகிறார்கள். மாநிலங்களில் ஆள்பவர்கள், மக்கள் பிரதிநிதிகளான M.L.A-க்களால் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அப்படித்தான் பங்குச்சந்தைகளின் நிலவரத்தை, போக்கைத் தெரிந்துகொள்ள, குறிப்பிட்ட சில நிறுவனப்பங்குகளை `பிரதிநிதிகள்’ ஆகத் தேர்வு செய்து, அவற்றின் விலை மாற்றங்களை வைத்து, மொத்த சந்தையும் இப்படித்தான் என்று முடிவு செய்கிறார்கள்.

`இன்று பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் முடிந்தன’ என்று செய்தி வந்தால், அன்று பட்டியலிடப்பட்டிருக்கும் எல்லாப் பங்குகளின் விலைகளும் உயர்ந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது.

குறியீட்டு எண்களுக்குள் இருக்கும் அந்தக் குறிப்பிட்ட பங்குகளின் நிகரமான விலை மாற்றம், உயர்வாக இருக்கிறதென்று மட்டுமே பொருள் கொள்ள வேண்டும். BSE, என்றால் குறிப்பிட்ட 30 பங்குகள், NSE என்றால், குறிப்பிட்ட 50 பங்குகளின் விலை மாற்றங்கள்.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸில் இருக்கும் 30 பங்குகள் எவை என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கலாம். அவையெல்லாம் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள்.

சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் 30 நிறுவனங்களின் பங்குகள்... (படத்தில் இருக்கும் அட்டவணையைப் பார்க்க)

Sensex 30
Sensex 30
சென்செக்ஸ் 30
சென்செக்ஸ் 30

தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான, நிஃப்டி 50-ல் இருக்கும் 50 பங்குகள், சென்செக்ஸில் இருக்கும் நிறுவனங்களைக் காட்டிலும் துறைகள் அடிப்படையில் பார்த்தால், பரந்துபட்டது.

நிஃப்டி 50 பட்டியலில் இருக்கும் நிறுவனப் பங்குகள் (படத்தில் இருக்கும் அட்டவணையைப் பார்க்க)

நிஃப்டி 50
நிஃப்டி 50
நிஃப்டி 50
நிஃப்டி 50
நிஃப்டி 50
நிஃப்டி 50

சென்செக்ஸ் உயர்வு என்றால் 30 பங்குகளின் விலைகளும் உயர்ந்ததாக அர்த்தமில்லை. நிஃப்டி உயர்வும் அப்படியே. அந்த 30 அல்லது 50 பங்குகளில் சிலவற்றின் விலைகள் அன்று உயர்ந்தும் வேறு சிலவற்றின் விலைகள் அன்று குறைந்தும், முன் சொன்னது போல மற்றும் சிலவற்றின் விலைகளில் மாற்றம் இல்லாமலும் இருக்கலாம்.

பங்குச் சந்தையைத் தீர்மானிக்க, கணிக்க உதவும் 6 காலகட்டங்கள்! #SmartInvestorIn100Days நாள்-52

எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து (அது வேறு விதமான கணக்கு- இப்போதைக்கு அதற்குள் போக வேண்டாம். விட்டுவிடுவோம்), வருவதை வைத்துச்சொல்வதுதான் சந்தையின் உயர்வோ, இறக்கமோ.

Investing
Investing

தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுமே மக்கள் பிரநிதிகள் ஆகிவிட மாட்டார்கள். அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர்களே மக்கள் பிரதிநிதிகளாகக் கருதப்படுவர். இங்கே பிற பங்குகளின் பிரதிநிகள்போல பாவிக்கப்படும் பங்குகளை யார் தேர்வு செய்வது, எப்படித் தேர்வு செய்கிறார்கள், தேர்வு செய்யும் முறையில் ஏதும் லாஜிக் இருக்கிறதா? அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

அடுத்த கட்டுரைக்கு