Published:Updated:

பங்குச்சந்தையா, மியூச்சுவல் ஃபண்டா... முதலீட்டுக்கு எது பெஸ்ட்? #SmartInvestorIn100Days நாள்-88

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

ஒரு பங்கு நல்ல டிவிடெண்ட் தர வேண்டுமானால், அதில் முதலீடு செய்த பணம் பெருக வேண்டுமானால், அந்தப் பங்கின் விலை உயர வேண்டும்.

`என் முதலீடுகளை, நான் 14 ஆண்டுகளுக்கு விட்டு வைக்க முடியும். அவற்றைப் பங்குகளில் முதலீடு செய்யவா, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யவா? நான் `மாடரேட் ரிஸ்க்’ எடுக்கத் தயார்' என்று மஞ்சுநாதன் கேட்டிருக்கிறார்.

முதலீட்டு காலம் குறித்து தெளிவாக இருப்பதற்காக அவரைப் பாராட்டலாம். இதே சந்தேகம் இன்னும் பலருக்கும் இருக்கலாம் என்பதால், இதற்கான பதிலைச் சற்று விரிவாகவே பார்த்துவிடுவோம்.

பலரும் அவர்கள் செய்யும் முதலீடு எவ்வளவு காலத்துக்கானது என்பதில் தெளிவாக இருப்பதில்லை. அப்படியில்லாததால் அவர்களால் சரியான பங்குகளில் முதலீடு செய்ய முடிவதில்லை. நீண்டகாலம் விட்டு வைக்க முடியாத பணத்தை எடுத்து வந்து, ஏதாவது ஒரு பங்கில் முதலீடு செய்துவிட்டு, பின்பு அவசரத் தேவைக்கு எடுக்கப்போனால், சந்தை மொத்தமும் அல்லது அந்தக் குறிப்பிட்ட பங்கின் விலையோ தற்காலிகமாகக் குறைந்திருக்கலாம். ஆனாலும், அவர்கள் விற்றாக வேண்டும். பணம் தேவைப்படுகிறதே. வேறு என்ன செய்ய? நஷ்டம்தான் வரும்.

பங்குகள் மற்றும் பங்குகள் தொடர்பான மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து லாபம் பார்க்க வேண்டுமென்றால், அதற்கு நிச்சயம் நீண்ட கால அணுமுறை மட்டுமே சரிவரும். குறுகிய காலத்தில் எப்போதாவது பணம் பண்ண முடியுமே தவிர, எப்போதும், நிச்சயமாகப் பணம் பண்ண முடியாது. ஏன் தெரியுமா?

ஒரு பங்கு நல்ல டிவிடெண்ட் தர வேண்டுமானால், அதில் முதலீடு செய்த பணம் பெருக வேண்டுமானால், அந்தப் பங்கின் விலை உயர வேண்டும்.

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days
வரப்போகிற பட்ஜெட், பங்குச் சந்தையை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் தெரியுமா? #Smartinvestorin100days நாள்- 85

பங்கு விலை உயர்வதற்கு ஒன்றல்ல; பல விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். முதலாவது அந்நிறுவனம் வியாபாரத்தில் லாபம் செய்ய வேண்டும். அதற்கு, இந்நிறுவனத்தின் நிர்வாகத் திறன், தொழிலாளர்களுடனான நல்லுறவு, போதுமான அளவு இடுபொருள்கள் கிடைப்பது, உற்பத்தி செய்ய தேவையான மின்சாரம் போன்றவை கிடைப்பது, உற்பத்தியான பொருள்களை விற்பனை செய்யக்கூடிய திறன்மிக்க மார்கெட்டிங் & சேல்ஸ் குழுக்கள், பொருள்கள் போன்றவை நிறுவனத்துக்கு கிடைக்க வேண்டும் அல்லது தொடர வேண்டும்.

தவிர, நிறுவனத்தின் வியாபாரத்துக்கு தேவைப்படும் பணம் என்ற முதலீடு போதுமான அளவில் கிடைக்க வேண்டும். அடுத்து, அந்நிறுவனத்தின் வியாபாரத்துக்கு புதிய போட்டியாளர்கள் வந்துவிடக் கூடாது. அப்படி எவரும் வந்துவிட்டாலும், நிறுவனத்தால் அதைச் சமாளிக்க முடிய வேண்டும்.

மேலும், அரசுகள் புதிய வரிகள் விதிக்காமல் அல்லது இருக்கும் வரிகளை மாற்றங்கள் செய்யாமல் இருக்க வேண்டும். நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு சந்தையில் தொடர்ந்து தேவை இருக்க வேண்டும். மாற்றுப் பொருள் வந்துவிடக் கூடாது.

இவையெல்லாம் போக, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை, வியாபாரம் செய்வதற்கு சாதகமாக இருக்க வேண்டும். மேலும் இயற்கைச் சீற்றங்கள் அழிவுதரும் தாக்குதல்கள் ஆகியவை ஏற்படக்கூடாது.

குறைந்தபட்சம் இவையெல்லாம் சரியாக இருந்தால்தான் ஒரு நிறுவனத்தால் லாபம் செய்ய முடியும். இவற்றில் ஏதாவது ஒன்று சரியில்லாவிட்டாலும், அந்த நேரம் நிறுவனத்தின் வியாபாரமும் லாபமும் பாதிக்கப்படும். அதனால் பங்கு விலை குறையும்.

அதனால்தான் பங்குகளில் முதலீடு என்றால் குறுகிய காலத்தில் உத்தரவாதம் இல்லை என்பது. இவை எல்லாவற்றையுமே நல்ல நிறுவனங்களால் சமாளித்துவிட முடியும். ஆனால், உடனடியாக அல்ல. அதனால்தான் பங்குகளுக்கு நீண்டகாலம் தேவைப்படுகிறது.

ஆக, 5, 10, 15 ஆண்டுகள்போல நீண்டகால முதலீடு என்றால், பங்குகளில் முதலீடு தவறல்ல. செய்யலாம். ஆனால், ஓர் எச்சரிக்கை.

பங்குகளை வாங்கி வைத்துவிட்டு, 14 ஆண்டுகள் அது தொடர்பாக எதையும் கவனிக்காமல் தன் வேலையைப் பார்க்கலாம் என்று இருக்க முடியாது. 14 ஆண்டுகள் என்ற நீண்டகாலத்தில் சில நிறுவனங்கள் காணாமல்கூட போக வாய்ப்பிருக்கிறது. ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த HDIL, , சுஸ்லான், யூனிடெக், JP அசோசியேட்ஸ் போன்ற பல நிறுவன பங்குகள் இன்று ஒன்றும் இல்லாமல் போய்விட்டன. எனவே, நல்ல நிறுவனமாக இருந்தாலும், அவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது சரியான முடிவுகள் எடுக்க வேண்டியது அவசியம்.

TCS, HDFC Ltd, HDFC Bank, டைட்டான் SBI போன்ற சில நிறுவனங்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. ஆனாலும், அவற்றைப் போலவே பல ஆண்டுகள் சிறப்பாகச் செயல்பட்டுவந்த, சன் பார்மா, இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத சிக்கல்கள் போல எந்த நிறுவனத்துக்கும் சிக்கல்கள் வரலாம்.

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days
நீண்டகால முதலீடு, டிவிடெண்ட் வருமானத்துக்கு ITC பங்குகள் பாதுகாப்பானவையா? #SmartInvestorIn100Days நாள் - 87

மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில்தான் முதலீடு செய்கின்றன. எனவே, அந்த ரிஸ்க் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் உண்டு. ஆனால், இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு, பங்குகளில் நேரடியாக முதலீடு செய்தால், முதலீட்டாளரே கவனித்து முடிவுகள் எடுக்க வேண்டும். பரஸ்பரநிதிகளில் தேர்ந்த ஃபண்ட் மேனேஜர்கள் நிதியை நிர்வாகம் செய்வார்கள்.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

அடுத்த கட்டுரைக்கு