Published:Updated:

டெக்னிக்கல் அனலிசிஸ், ஒரு பங்கின் ஏற்ற இறக்கத்தை கணித்துச் சொல்லுமா? #SmartInvestorIn100Days நாள்-27

விலை இறங்கப்போவதை மட்டுமல்ல, விலை உயரப்போவதையும் முன்கூட்டியே அடையாளம் காட்டுவது, டெக்னிக்கல் அனலிசிஸ். எப்படி?

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days
``ஒரு பங்கின் விலை விழுவதற்கு முன், விழப்போகிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?” என்று கேட்டிருக்கிறார் வாசகர் பார்த்திபன்.

இதென்ன சாதாரண கேள்வியா? மில்லியன் டாலர் கொஸ்டின் அல்லவா! இதற்கு மிகச் சரியான பதில் தெரிந்தால் யாரும் பங்குச்சந்தையில் நஷ்டம் செய்ய மாட்டார்கள். ஆனாலும் இதற்கான பதிலைத் தேடும் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. அதில் பல முன்னேற்றங்கள் வந்திருக்கின்றன.

விலை வீழ்ச்சி
விலை வீழ்ச்சி
நிறுவனங்களுக்கு ₹ 92,000 கோடி அபராதம்... எந்தெந்த பங்குகள் விழும், எழும்?  - நாள்-26

பங்குகளை வாங்க வேண்டுமென்றால் அல்லது கையில் இருக்கும் அந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்தது போதும் என்று முடிவெடுக்க வேண்டுமென்றால், அந்த நிறுவனத்தின் ஃபண்டமென்டல்களைப் பார்க்க வேண்டும் என்பார்கள். `அந்தப் பங்கின் ஃபண்டமென்டல்ஸ் நன்றாக இருக்கிறது' அல்லது `சரியில்லை' என்பது போன்ற பரிந்துரைகள் சொல்லப்படுவதைக் கேட்டிருக்கலாம். அதென்ன ஃபண்டமென்டல்ஸ்?

``ஐந்து லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த, 53.30 லட்சம் ரூபாய் செலவு!''

ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியம் எப்படி என்று கேட்டால், மருத்துவர்கள் எவற்றை எல்லாம் சோதனை செய்துவிட்டு முடிவுக்கு வருவார்கள் என்று தெரியும்தானே!

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, நுரையீரல் ஃபங்ஷன், கிட்னி, லிவர் ஆகிவற்றின் ஃபங்ஷன்ஸ், தவிர ECG போன்றவற்றை சோதிப்பார்கள். இந்தச் சோதனைகளின் முடிவில் கிடைக்கும் ரிசல்ட்டை வைத்து, `நோ பிராப்ளம், நீங்கள் போகலாம்” என்பார்கள். வேறு சிலருக்கு மேலும் சில டெஸ்ட்டுகள் அல்லது அறுவைசிகிச்சை, மாத்திரைகள் மருந்துகள், உணவுக்கட்டுப்பாடுகளைப் பரிந்துரைப்பார்கள்.

பங்குச் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடி... ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

அதேபோன்றதுதான் ஒரு நிறுவனத்திற்கு அனலிஸ்ட்டுகள் செய்யும் சோதனைகள்; அதன் பின்னர், அந்தச் சோதனைகளில் கிடைக்கும் தகவல்களை வைத்து அவர்கள் செய்யும் அலசல்கள் மற்றும் அதன்பின் அவர்கள் செய்யும், `விற்கலாம்’ அல்லது `வாங்கலாம்’ என்று சொல்லும் ரெக்கமண்டேஷன்களும்.

ஆக, பங்குச்சந்தைகளில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டுவிதமான அணுகுமுறைகள் இருக்கின்றன. ஒன்று ஃபண்டமென்டல் அனலிசிஸ். மற்றொன்று டெக்னிக்கல் அனலிசிஸ். இரண்டும் முற்றிலும் வேறுபட்ட தகவல்களை வைத்து முடிவுக்கு வருபவை.

முதலாவது, நடந்து முடிந்தனவற்றை வைத்து சொல்லும் முறை. மற்றொன்று, நடந்துகொண்டிருப்பதை வைத்து நடக்கப்போவதை அனுமானிக்கும்முறை.

ஃபண்டமென்டல் அனலிசிஸில் என்னவெல்லாம் பார்ப்பார்கள் என்பதை வேறு ஒரு சமயம் கூடுதல் விளக்கங்களுடன் பார்க்கலாம். இப்போது, பார்த்திபன் அவர்களின் கேள்விக்கு மீண்டும் வருவோம். விலை இறங்கப்போவதை மட்டுமல்ல, விலை உயரப்போவதையும் முன்கூட்டியே அடையாளம் காட்டுவது டெக்னிக்கல் அனலிசிஸ். பங்கு விலைகளை மட்டுமல்ல, பல்வேறு இன்டெக்ஸ்களின் நகர்வுகளையும் அதைவைத்து கணிக்கமுடியும்.

விலை வீழ்ச்சி
விலை வீழ்ச்சி

ஒரு பங்கின் விலை விழுவதற்கு முன், `விழப்போகிறது' என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில், `டெக்னிக்கல் அனலிசிஸ்’ செய்து கண்டுபிடிக்கலாம் என்பதுதான். ஆம். ஒரு பங்கின் விலை மூவ்மென்ட்களை கணிக்கக்கூடிய ஏற்பாடு டெக்னிக்கல் அனலிசிஸ் என்றால் அது மிகை இல்லை.

விலை இறங்கப்போவதை மட்டுமல்ல. விலை உயரப்போவதையும் முன்கூட்டியே அடையாளம் காட்டுவது டெக்னிக்கல் அனலிசிஸ். பங்கு விலைகளை மட்டுமல்ல, பல்வேறு இன்டெக்ஸ்களின் நகர்வுகளையும் அதைவைத்து கணிக்க முடியும்.

பங்குச்சந்தையில் பணம் செய்பவர்கள், ஜெயிப்பவர்கள் தற்செயலாகவோ குருட்டாம் போக்கிலோ, `பத்துக்குள்ள ஏதோ ஒரு நம்பர்’ என்பதுபோல வாங்கவேண்டிய பங்குகளைத் தேர்வு செய்வதில்லை. `நேரம் சரியில்லை’ என்பது போல முடிவுசெய்து பங்குகளை விற்பதில்லை.

sensex
sensex

கோழி கூவினால் விடியப்போகிறது. தவளை கத்தினால் மழை வரும். யானைகளுக்கு சுனாமி வருவது முன்கூட்டியே தெரியும், அவை எதிர்த்திசையில் ஓடும் என்றெல்லாம் சொல்லப்படுபவை, சொல்பவர்களின் அனுபவம் காரணமாக இருக்கலாம். ஆனால், கோழி, தவளை, யானை ஆகியவை எப்படி அவற்றை அவ்வளவு சரியாகச் செய்கின்றன? அவற்றுக்கு ஏதோ தகவல்கள் கிடைக்கின்றன. அதை வைத்துதான் அவை அப்படி செய்கின்றன. (இதெல்லாம் அவர்கள் சொல்லும் லாஜிக்படிதான்; அறிவியல் படி அல்ல)

சாதகமாகும் சர்வதேசச் சூழ்நிலைகள்... பங்குச் சந்தைகள் இனி மேல்நோக்கிச் செல்லுமா?

அதேபோல, குறிப்பிட்ட பங்குகளின் விலைகளிலோ அல்லது பங்குச்சந்தை குறியீட்டு எண்ணிலோ, அடுத்து என்ன நிகழும் என்பதை முன்கூட்டியே சுட்டிக்காட்டும் சில அறிகுறிகள் உண்டு. அவற்றை ’இண்டிகேட்டர்ஸ்’ என்பார்கள். அவற்றைவைத்து ஆராய்பவர்கள், விலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பெரும்பாலும் சரியாகச் சொல்லிவிடுகிறார்கள்.

அப்படி கணக்கிட்டுச் சொல்பவர்களை, `சார்டிஸ்ட்’ என்றும், `டெக்னிக்கல் அனலிஸ்டுகள்' என்றும் அழைப்பார்கள்.

பங்குகளின் விலைகள் உயரப்போகின்றனவா அல்லது விழப்போகின்றனவா என்பதையும், அந்த மாற்றத்தின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதையும், என்ன விலை வரை உயரலாம் அல்லது விழலாம் என்பதையும்கூட டெக்னிக்கல் அனலிசிஸ் செய்பவர்களால் தெரிவிக்க முடியும்.

டெக்னிக்கல் அனலிசிஸ் என்பது ஒரு `டூல் பாக்ஸ்’ போல. அதில் பல்வேறுவிதமான கருவிகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு திறன் உண்டு. அவற்றில் சில இதோ... கீழே உள்ள ஸ்லைடு படங்களைப் பார்க்கவும்.

இவற்றில் சிலவற்றை பற்றி அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.