Published:Updated:

நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் காட்டப்படும் லாபம் உண்மைதானா?! #SmartInvestorIn100Days நாள் - 25

காரப்பரேட் வரிகள் குறைந்தால் நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும். அந்த லாப பணத்தை நிறுவனங்கள் முதலீடு செய்யும். அதனால் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று சொல்லப்பட்டது.

நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்

பொருளாதார சுணக்கம் இந்தியாவிலும் வந்துவிட்டது. பல்வேறு துறைகள் முக்கியமாக, மோட்டார் வாகனத்துறை மிக மோசமான சூழ்நிலையை சந்தித்துக்கொண்டிருக்கிறது என்றெல்லாம் நாலா பக்கங்களிலிருந்தும் கூக்குரல்கள் எழுந்தன. ஜி.எஸ்.டி வரியைக் குறையுங்கள், தனிநபர் வருமான வரியைக் குறையுங்கள் என்றெல்லாம் கேட்டார்கள். நிதியமைச்சர் எந்த வித சாதகமான பதிலையும் சொல்லவில்லை.

Sharemarket
Sharemarket

பின்னர் எவரும் எதிர்பாராத விதமாகத் திடீரென செப்டெம்பர் 20-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கார்ப்பரேட் வரிகளை - சர் சார்ஜ், செஸ் எல்லாம் சேர்த்து - சுமார் 35 சதவிகிதத்தில் இருந்து 25.17 சதவிகிதமாகக் குறைத்தார். இதன் மூலம் மத்திய அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் சுமார் ரூ.1,45,000 கோடி இனி வராது.

மேலும் மத்திய அரசின் பட்ஜெட் பற்றாகுறை, பிஸ்கல் டெபிசிட் 3.3%-க்கு பதிலாக, ஜி.டி.பி.யில் 4 % வரை போகலாம் என்றெல்லாம் சிலர் கணக்குப் போட்டுச் சொன்னார்கள்.

முக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

ஆனாலும் அரசு கார்ப்பரேட் வரிக் குறைப்பில் உறுதியாக இருந்தது. கார்ப்பரேட் வரிகள் குறைந்தால் நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும். அந்த லாப பணத்தை நிறுவனங்கள் முதலீடு செய்யும். அதனால் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று சொல்லப்பட்டது.

அப்படி கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்ட பின் முதல் முறையாக நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை அறிக்கைகள் (Q 2 பைனான்சியல் ரிசல்ட்ஸ்) வந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் பார்த்தால், நிறுவனங்களின் வரிச் செலவு கணிசமாகக் குறைந்திருப்பதும், அதனால் பல நிறுவனங்களின் லாபம் அதிகரித்திருப்பதும் தெரிகிறது.

நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்

உதாரணத்துக்கு கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி. அந்த நிறுவனத்தின் காலாண்டு கார்ப்பரேட் வரி, ஒப்பிடக்கூடிய சென்ற ஆண்டு இரண்டாம் காலாண்டுடன் பார்த்தால் 757 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது. 2018-19-ம் நிதி ஆண்டு இரண்டாம் காலாண்டில் கார்பரேட் டேக்ஸ்சுக்கு அது ஒதுக்கியது 970 கோடி ரூபாய். இப்போது 2019-20-ம் நிதி ஆண்டு இரண்டாவது காலாண்டில் வெறும் 213 கோடி ரூபாய்.

கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்!
இதுவரை வந்திருக்கும் காலாண்டு முடிவுகளில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், நிறுவனங்களின் லாபம் அதிகரித்திருக்கும் அளவுக்கு, வியாபாரம் அதிகரிக்கவில்லை என்பதுதான்.
கார்ப்பரேட் வரி குறைப்பு... பங்குச் சந்தைக்கு என்ன லாபம்?

இது எதைக் காட்டுகிறது என்றால், இன்னமும் சுணக்கம் இருக்கவே செய்கிறது. டிமாண்டு அதிகரிக்கவில்லை. ஆனால், வரிக்குறைப்பால் நிறுவனங்களின் லாபம் நிச்சயம் அதிகரித்திருக்கிறது என்பதைத்தான்.

ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ், டிசிஎஸ், இன்போசிஸ், மாருதி, ஐடிசி, கோல்கேட் மற்றும் இதுவரை ரிசல்ட் வெளியிட்டிருக்கிற 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளை வைத்துப்பார்த்தால் இப்படித் தெரிகிறது. மேலும் ரிசல்ட்கள் வர வர இது கொஞ்சம் மாறலாம்.

வரிக் குறைப்பின் மறுபக்கம்: கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த 4 விஷயங்களைச் செய்வார்களா?

நம்பி, வரிக்குறைப்பு செய்திருக்கும் அரசுக்கு உதவும் விதமாக, லாபத்தை அதிகரித்துக்கொண்டிருக்கும் நிறுவனங்கள், கூடுதல் டிவிடெண்ட் கொடுத்து முதலீட்டாளர்கள் கையில் பணத்தைத் தர வேண்டும் அல்லது வேலைவாய்ப்புகள் உருவாகும் வண்ணம் முதலீடு செய்ய வேண்டும்.

செய்வார்களா?

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.