Published:Updated:

பிரிட்டானியா கம்பெனி ஷேர் ஹோல்டர்களுக்கு தந்த போனஸ் என்ன தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்- 59

இதற்கு பதில் சொல்வதற்கு முன் NCD என்றால் என்ன, பங்குகளுக்கும் NCD-களுக்கும் இடையே என்ன வேறுபாடு என்பனவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பின்பு அவரவர்களே முடிவெடுக்க முடியும்.

#SmartInvestorIn100Days நாள்- 59
#SmartInvestorIn100Days நாள்- 59
வாசகர் ஹாசன், 'NCD பங்குகள் என்றால் என்ன? அவற்றை முதலீட்டுக்காக வாங்கலாமா?' என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் சொல்லும்போது, இது தொடர்பான இன்னும் பலவற்றையும் சொல்லிவிட வாய்ப்பிருக்கிற காரணத்தினால் அதை இன்றைக்குப் பார்த்துவிடலாம்.
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

2018-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு அனைவருக்கும் ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில், 30 ரூபாய் முகமதிப்புள்ள NCD என்று சுருக்கமாக அழைக்கப்படும் ’Non-convertible debentures’களை இலவசமாக வழங்கியிருக்கிறது. மேலும், அந்த NCD-களைப் பங்குச்சந்தையில் பட்டியலிட்டிருக்கிறது. அதனால், அவற்றை எவரும் வாங்கலாம். அவை, டிசம்பர் மூன்றாவது வாரத்தில், 31 ரூபாய் 50 பைசா என்ற விலையில் வர்த்தகமாகிறது.

இவற்றை முதலீட்டிற்கு வாங்கலாமா?

இதற்கு பதில் சொல்வதற்கு முன் NCD என்றால் என்ன, பங்குகளுக்கும் NCD-களுக்கும் இடையே என்ன வேறுபாடு என்பனவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பின்பு அவரவர்களே முடிவெடுக்க முடியும்.

முதலில் தெரிவிக்க விரும்புவது, NCD என்பது, கடன் பத்திர வகையைச் சேர்ந்தது, பங்கு அல்ல.
பங்குச் சந்தை
பங்குச் சந்தை
பங்கை வாங்குவதற்கு முன்பு, எந்தெந்த விஷயங்களை ஆராய வேண்டும்? #SmartInvestorIn100Days நாள்-58

பிரிட்டானியா வழங்கியிருக்கும் NCD-யின் முகமதிப்பு 30 ரூபாய். அதற்கு நிறுவனம் கொடுக்கும் ஆண்டு வட்டி 8 சதவிகிதம். டிபென்ச்சரின் கால அளவு மூன்று ஆண்டுகள். அதன்பின், டிபென்ச்சர் வைத்திருப்பவர்களிடம் இருந்து 30 ரூபாய் பணம் கொடுத்து நிறுவனம் அதைத் திரும்ப வாங்கிக்கொள்ளும்.

இதற்கு முன்பு NTPC, புளுடார்ட் எக்ஸ்பிரஸ், டாக்டர் ரெட்டீஸ் லாப், ஹிந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய நிறுவனங்கள் இப்படி டிபென்ச்சர்களை போனஸாக வழங்கியிருக்கின்றன.

நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு டிவிடென்ட் மற்றும் போனஸ் பங்குகள் வழங்குவது இயல்பானது. அதற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் இருந்தால் போதும். ஆனால், பங்குதாரர்களுக்கு இப்படி NCD வழங்குவது கொஞ்சம் அசாதாரணமானது. இதற்கான வழிமுறை, கம்பெனிகள் சட்டத்தில் இல்லை. அதனால், இதை ‘ஸ்கீம் ஆப் அரேஞ்ச்மெண்ட்’ வகையில்தான் வழங்க முடியும் என்றும், இதற்கு நீதிமன்றம், ரிசர்வ் வங்கி மற்றும் சில நேரங்களில் கார்ப்பரேட் அஃபேர்ஸ் அமைச்சகத்தின் ஒப்புதல்கூட தேவைப்படும் என்கிறார்கள்.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

நிறுவனம், பிரிட்டானியா என்பதாலும், இது கடன் பத்திரம் என்ற விதத்திலும் இதில் போடுகிற முதலீடு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கலாம். இது கொடுக்கும் 8 சதவிகித வட்டி என்பது, அதன் முகமதிப்பின் மீது.

30 ரூபாய் NCD-யைக் கூடுதல் விலை கொடுத்து வாங்கினால், கிடைக்கிற வருமானம் (ஈல்டு) 8 சதவிகிதத்தைக் காட்டிலும் குறைவாக இருக்கும். பங்குகளுக்கு வழங்கப்படும் டிவிடெண்ட் தொகைக்கு கிடைக்கும் வருமான வரி சலுகையைக் காட்டிலும், டிபென்ச்சர் தரும் வட்டிக்கு சலுகைகள் குறைவு. இவற்றை மனதில் வைத்து வாங்கும் முடிவை எடுக்கலாம்.

டிபென்சர்களை டீமேட் கணக்குகளில் வரவு வைக்கும்போது, அவற்றின் எண்ணிக்கையை காட்டாமல், அவற்றின் பணமதிப்பைக் காட்டுவார்கள். உதாரணத்திற்கு ஒருவர் 30 ரூபாய் முகமதிப்புள்ள பிரிட்டானியா NCD, 100 வைத்திருந்தால், அது அவரின் டீ மேட் கணக்கில் ரூ.3,000 என்று காட்டும். அது செய்யும் கணக்கு, 30 X 100.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

NCD வைத்திருப்பவரோ அல்லது அவரின் புரோக்கரோ பங்குச் சந்தையில் வாங்கும்போதும் விற்கும்போதும் ’ஆர்டர்’ போடுகையில், டிரேடிங் டெர்மினலில், அதை 3,000 என்று போட்டுவிடக்கூடாது. கணக்கில் இருப்பது 100 தான். பிரிட்டானியா டிபென்ச்சர்களின் வர்த்தகத்தின் தொடக்கத்தில் இப்படிப்பட்டக் குழப்பம் நேர்ந்தது. பின்பு, அந்தத் தவறுகள் செய்தவர்கள் அவற்றைச் சரி செய்ய, டிபென்ச்சர்களை உடனடியாகச் சந்தையில் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு, அதனால் அவற்றின் விலை ஒரு நேரம் 37 ரூபாய் வரை போய்விட்டது.

இப்போது வாங்க நினைப்பவர்கள், அந்த 37 ரூபாய் விலையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதற்காக இந்தத் தகவல்.

- முதல் போடலாம்.

ரிலையன்ஸ், டி.சி.எஸ் நிறுவனங்களில் `PE மல்டிப்பிள்' எப்படியிருக்கிறது? #SmartInvestorIn100Days நாள்-57

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.