Published:Updated:

சார்ட்டை வைத்து பங்கு விலைநகர்வை முன்கூட்டி கணிக்க முடியுமா? #SmartInvestorIn100Days நாள் - 84

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

சார்ட்டை வைத்து, `இப்போது விலை ஏறும் நேரம்’. `இப்போது விலை பயங்கரமாக விழப்போகிறது’ என்றெல்லாம் சிலரால் சொல்லமுடியும். சிலர் சொல்வது பெரும்பாலும் சரியாகவே இருக்கிறது.

மனிதர்களுக்கு ஜாதகங்கள் வைத்து ஆரூடம் சொல்வார்கள். இப்போது நேரம் நன்றாக இருக்கிறது; அல்லது நன்றாக இல்லை என்பதுபோல. ஜாதக கட்டங்களில் கிரகங்களின் அமைப்பைப் பொறுத்து, `நீ பிரமாதமாக வருவாய், வெளிநாடு போவாய்’ என்பதுபோல சிலருக்கும், `சிரமப்பட்ட வாழ்க்கைதான். எவ்வளவு செய்தாலும் உனக்கு கடைசியில் கெட்ட பெயர்தான் வரும்’ என்பதுபோல வேறு சிலருக்கும் சொல்வார்கள்.

ஜாதகங்களை நம்புகிறவர்களும் உண்டு, நம்பாதவர்களும் உண்டு. மனிதர்களுக்கு ஜாதகம்போல, பங்குகளுக்கு, சார்ட் (Chart).

Representational Image
Representational Image

சார்ட்டை வைத்து, `இப்போது விலை ஏறும் நேரம்’. `இப்போது விலை பயங்கரமாக விழப்போகிறது’ என்றெல்லாம் சிலரால் சொல்லமுடியும். சிலர் சொல்வது பெரும்பாலும் சரியாகவே இருக்கிறது.

அதென்ன சார்ட்? அதை வைத்து எப்படி விலை நகர்வுகளை முன்கூட்டி கணிக்க முடியும்?

பங்குகள், பட்டியலிடப்பட்டபின் அவை தொடர்ந்து வர்த்தகம் ஆகின்றன. சிலர் வாங்க, சிலர் விற்க என்று, தினசரியே விலை மாறுகிறது. இப்படி மாறும் விலைகளை எல்லாம் நாள் வாரியாக குறித்துக்கொண்டே வருவார்கள். அந்த விவரங்களை `சார்ட்’ டில் சேர்ப்பார்கள்.

சார்ட் என்பது ஒரு பங்கு அல்லது குறியீட்டு எண்ணின் விலை மாறுதல்களைப் படமாகக் காட்டுவது. உதாரணத்துக்கு மார்ச் மாதம் புதிதாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பங்கு, அப்போது 100 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது. பின்பு விலை குறைந்து குறைந்து, ஏப்ரல் மாதம் 90 ரூபாய் அளவுக்குக் போய்விட்டது. அதன்பின் வேகமாக விலை உயர்ந்து, மே மாத இறுதியில் 120 ரூபாய் அளவுக்கு உயர்ந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அந்த விலை மாற்றங்களை ஒரு சார்ட்டாக வரைந்தால், கீழே கொடுக்கப்பட்டிருப்பதுபோல இருக்கும்.

சார்ட்டை வைத்து பங்கு விலை நகர்வை குறிக்கும் படம்.
சார்ட்டை வைத்து பங்கு விலை நகர்வை குறிக்கும் படம்.
பங்குச்சந்தையில் `ஸ்டாப் லாஸ்' எப்போது செய்ய வேண்டும் தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-82

இது மார்ச் முதல், மே மாதம் வரையிலான மூன்று மாத விலை சார்ட். இப்படியாக தினசரி விலை மாற்றங்களை, வார விலை மாற்றங்களை, மாத, ஆண்டு விலை மாற்றங்களை எல்லாம் படம் போடலாம். எவ்வளவுக்கு எவ்வளவு விவரங்கள் கிடைக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு, சார்ட்டின் தரம், அதாவது நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

தினசரி அதிகம் வர்த்தகம் ஆகாத, எப்போதாவது மட்டும் வர்த்தகம் ஆகிற அல்லது மிகக்குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகம் ஆகிற பங்குகளுக்கு சார்ட் வரைந்து, நடக்கப்போவதை சரியாக கணிக்க முடியாது.

இந்த இடத்தில் அதிகம் வர்த்தகம் ஆகிற ஒரு பங்கின் சார்ட் ஒன்றைப் பார்க்கலாம். அதற்கு, ஹிந்துஸ்தான் யூனிலிவர் லிட், HUL பங்கை எடுத்துக்கொள்ளலாம்.

HUL
HUL

மேலே கொடுக்கப்பட்டிருப்பது, HUL நிறுவனப் பங்கின் ஓராண்டு விலை சார்ட். இங்கே விலை என்றால், குளோசிங் விலைதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இதுபோல 2, 5, 10 ஆண்டுகள் மற்றும் நிறுவனம் பட்டியலிடப்பட்டதிலிருந்து தற்போதுவரை என, பல்வேறு காலகட்டங்களுக்கு விலை சார்ட்டுகள் வரையலாம். வரைகிறார்கள். பொது வெளியில் சுலபமாகவே கிடைக்கிறது.

சார்ட்டுகளில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று லைன் சார்ட். கோடுகள் கொண்ட வரைபடம். அதுதான் மேலே காட்டப்பட்டிருப்பது. மற்றொன்று `கேண்டில்ஸ்டிக் சார்ட்’ டுகள்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட் நிறுவனத்தின் ஒரு மாத விலைகளை பார்த்தால், கீழே கொடுக்கப்பட்டிருப்பதுபோல இருக்கும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்
பங்குச்சந்தையில் ஆப்ஷன் என்பது என்ன... அதனால் அதிக லாபம் கிடைக்குமா? #SmartInvestorIn100Days நாள்-81

லைன் சார்ட்டுகளைவிட அதிக தகவல்கள் தரும் சார்ட் இது. கேண்டில் (மெழுகுவத்தி) போல இருப்பதால், இந்தப் பெயர். குறிப்பிட்ட நாளின் ஆரம்ப விலை, அதிக பட்ச விலை, குறைந்தபட்ச விலை மற்றும் குளோசிங் விலை போன்ற நான்கையும் காட்டும் இந்த கேண்டில் சார்ட் காட்டும். இவற்றைப்பற்றி விரிவாகச் சொல்ல இந்தத் தொடரில் இடம் போதாது. `பங்குச்சந்தை டிரேடிங்- அள்ள அள்ளப் பணம் -3' என்று கேண்டில் ஸ்டிக் சார்ட் மற்றும் டெக்னிக்ல அனாலிசிஸ் குறித்து தனிப்புத்தகமே எழுதியிருக்கிறேன். கூடுதல் ஆர்வம் இருப்பவர்கள் அதில் பார்த்துகொள்ளலாம்.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

அடுத்த கட்டுரைக்கு