Published:Updated:

முதலீட்டாளர்களே... தங்கமும், ரியல் எஸ்டேட் மட்டுமே முதலீடு அல்ல! #SmartInvestorIn100Days நாள்-97 

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

இன்னமும்கூட நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு, குறிப்பாக ஏழை, கிராமப்புற மற்றும் அதிகம் படிக்காதவர்களுக்கு, தங்கம்தான் பிரதான முதலீடு. அதற்குமேல் பணம் வருகிற, சேர்கிறபோது, முதலீடு என்று தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் வாங்குவது வீட்டுமனை அல்லது இடங்கள்.

பணம் பண்ணுவதற்கு பல்வேறு வழிகள், வாய்ப்புகள் இருக்கின்றன. சிலருக்கு வேலை. வேறு சிலருக்கு வியாபாரம் அல்லது தொழில். அப்படியெல்லாம் சம்பாதிக்கும் பணத்தை மேலும் பெருக்குவதற்கு, அவரவர் செய்துகொண்டிருக்கும் பிரதான வேலை, தொழில், வியாபாரம் தவிர, வேறு சிலவற்றிலும் ஈடுபடுகிறார்கள்.

இன்னமும்கூட நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு, குறிப்பாக ஏழை, கிராமப்புற மற்றும் அதிகம் படிக்காதவர்களுக்கு, தங்கம்தான் பிரதான முதலீடு. அதற்குமேல் பணம் வருகிற, சேர்கிறபோது, முதலீடு என்று தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் வாங்குவது வீட்டுமனை அல்லது இடங்கள்.

Representational Image
Representational Image

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதற்கும் அடுத்த மேல் நிலையில் இருக்கிறவர்களும் அந்த இரண்டு Physical Assets எனப்படும் பார்க்கக்கூடிய, தொட்டு உணரக்கூடிய பௌதிக சொத்துகள்மீது ஆர்வம் இருந்தாலும், அவர்கள் ஓரளவு பணத்தை, வங்கிகளில் அஞ்சலகங்களில் வைப்புகளாகச் சேமிக்க தெரிந்து வைத்திருக்கிறார்கள்; போடவும் செய்கிறார்கள். அவர்கள் `பைனான்ஷியல் அசெட்ஸ்’சுக்கு மாறுகிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அவர்களைச் சந்திக்கும் பல்வேறு நிறுவனங்களின் முகவர்கள், ``நீங்கள் காப்பீடு எடுக்க வேண்டும்” என்றும் ``பரஸ்பர நிதியில் முதலீடுகள் செய்யுங்கள். அது பாதுகாப்பானது” என்றும் தொடர்ந்து சொல்லிவர, அவர்களில் ஒரு பகுதியினர் வங்கிகளில் கிடைக்கும் வட்டி குறைந்த அளவாக இருக்கிறதே என்ற வருத்தத்தில், ஓரளவு பணத்தை, காப்பீடு மற்றும் பரஸ்பர நிதிகளில் பக்கம் திருப்பி விடுகிறார்கள்.

அப்படிச் சில ஆண்டுகள் போன பின்பு அல்லது அவர்களுக்கு கொஞ்சம் கூடுதல் விவரங்கள் தெரிய வந்த பின்னர், அவர்களே நேரடியாக பங்குகளில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள். டீமேட் கணக்குத் தொடங்குகிறார்கள். அதன் கவர்ச்சி சிலரை வேகமாக உள்ளே இழுத்துப் போய்விடுகிறது. முதலீடு என்று வந்தவர்கள் டிரேடிங், இன்ட்ராடே டிரேடிங், பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் என்று அடுத்தடுத்த நிலைகளுக்கு வேகமாகத் தாவுகிறார்கள்.

தாங்கள் எதற்காக உள்ளே வந்தோம்? என்ன செய்துகொண்டிருக்கிறோம்? இதனால் எவ்வளவு பணம் இழக்கிறோம்? என்பது போன்ற கவனங்கள் இல்லாமல், நஷ்டம் தரும் அந்தச் செயல்பாடுகளை விடமுடியாமல், உள்ளேயே உழன்று கொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேறு சிலர், கமாடிட்டீஸ், கரன்சி டிரேடிங் போன்றவற்றிலும் டிரேடிங் செய்யத் தூண்டப்படுறார்கள். அவர்களாக ஆர்வத்துடன் உள்ளே போகிறவர்களும் உண்டு.

திருமணமாகி, குழந்தை பிறந்த உடன், வருமானமும் சற்று கூடியிருக்கும் நிலையில் சொந்த வீடு ஆசை மற்றும் வருமானவரி விலக்கு பெறும் நோக்கத்துடன் சிலர் வீடு / பிளாட் வாங்க முடிவெடுக்கிறார்கள். அதற்காக அதுவரை சேர்த்த பணம் மற்றும் தங்க நகைகள், சேமநலநிதி போன்றவற்றுடன் வங்கிக் கடனும் பெறுகிறார்கள்.

Representational Image
Representational Image

வீட்டுக்கடனுக்குக் கட்ட வேண்டிய மாதாந்திரத் தவணை EMI காரணமாக, அவர்கள் கட்டும் பணம் சேமிப்பாகிறது. கூடவே அவர்களுக்கு வருமான வரிவிலக்கு சலுகையும் கிடைக்கிறது. தவிர வாடகைச் செலவும் குறைகிறது.

இப்படிப்பட்ட கவனமில்லாத சிலர், வீடு பிளாட் வாங்க முயற்சி செய்யாமல், தவிர்க்க கூடிய பல்வேறு செலவுகளைச் செய்துவிட்டு, கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியைக்கூட சேமிக்காமல், முழுவதும் செலவு செய்கிறார்கள். வேறு சிலர் அதுவும் போதாமல், கடன் வேறு வாங்குகிறார்கள்.

வாகனக் கடன்கள், பர்சனல் லோன், நகைக்கடன் என பலவற்றையும் வாங்கி, அடுத்த கட்டமாக கூவிக் கூவி விற்கப்படும் கிரெடிட் கார்டும் வாங்கி, அந்த முதல் அனுபவம் கொடுத்த தெம்பில் மேலும் சில கிரெடிட் கார்டுகளை வாங்கி, தவணைகள் கட்டத் தவறி, `சிபில் ஸ்கோர்’ ல் கீழ் இறங்குகிறார்கள்.

கூடுதல் செலவு செய்து வாழ்ந்த பழக்கம் ஒருபுறம், நிலுவையில் இருக்கும் கடன்கள் மறுபுறம். ஆனாலும் விடாமல் துரத்தும் தேவைகளைச் சமாளிக்க புதிய கடன் வாங்க முயற்சி செய்கிறார்கள். குறைந்துவிட்ட சிபில் ஸ்கோரால் வங்கிகளில் அவர்களுக்கு கடன் கிடைப்பதில்லை. அதனால் வேறு வழியின்றி, இரண்டு, மூன்று, நான்கு வட்டி என ஆண்டுக்கு, 24%, 36%, 48 சதவிகித வட்டிக்குப் பணம் வாங்கும் நிலைக்குப் போய், கடுமையாகக் கடன் வசூல் செய்வோரிடம் மாட்டிக்கொள்கிறார்கள். கயிறு இறுக்குகிறது.

Representational Image
Representational Image

எல்லோரும் இப்படி ஆகிவிடுவதில்லை. நூற்றுக்கு ஐந்து அல்லது பத்து நபர்கள், கூடுதலாக உழைத்து, சம்பாதித்து, செலவுகள் தவிர்த்து சேமித்து, தேர்ந்து முதலீடு செய்து, பொருளாதார அடுக்கில் வேகமாக உயர்கிறார்கள். நிம்மதியாக, கௌரவமாக, வாழ்கிறார்கள். வளர்கிறார்கள்.

முன்பகுதியில் பார்த்த 90 சதவிகித மக்களுக்கும் இறுதியாகப் பார்த்த 10 சதவிகித மக்களுக்கும் இடையே அவர்களது செயல்பாடுகளில் அப்படி என்னதான் வேறுபாடு?

நாளை பார்க்கலாம்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.