Published:Updated:

GDP குறைந்திருப்பதால் பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சியடையுமா? #SmartInvestorIn100Days நாள்-49

#SmartInvestorIn100Days

பொருளாதார நிலை இப்படி இருக்கிறதே... பங்கு விலைகள் மேலும் இறங்குமோ என்கிற பயம் சிலருக்கு வரலாம். பொருளாதாரப் புள்ளி விவரங்களுக்கும் பங்கு விலைகளுக்கும் இருக்கும் தொடர்பு என்ன என்று தெரிந்துகொள்ள சிலருக்கு ஆர்வம் இருக்கலாம்.

GDP குறைந்திருப்பதால் பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சியடையுமா? #SmartInvestorIn100Days நாள்-49

பொருளாதார நிலை இப்படி இருக்கிறதே... பங்கு விலைகள் மேலும் இறங்குமோ என்கிற பயம் சிலருக்கு வரலாம். பொருளாதாரப் புள்ளி விவரங்களுக்கும் பங்கு விலைகளுக்கும் இருக்கும் தொடர்பு என்ன என்று தெரிந்துகொள்ள சிலருக்கு ஆர்வம் இருக்கலாம்.

Published:Updated:
#SmartInvestorIn100Days

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறித்துச் சுட்டிக்காட்டும் GDP எண் வெளியிடப்பட்டது. இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் GDP 4.5 சதவிகிதம் என்பதே அன்று வெளிவந்த தகவல்.

இந்தத் தகவல் வெளிவருவதற்கு முன்பாகவே வெள்ளியன்று பங்குச் சந்தைகளில் பங்கு விலைகள் இறக்கம் கண்டன. NSE மற்றும் BSE ஆகிய இரண்டு சந்தைகளின் குறியீட்டு எண்களும் கிட்டத்தட்ட 0.8 சதவிகிதம் குறைந்தன.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

பொருளாதார நிலை இப்படி இருக்கிறதே... பங்கு விலைகள் மேலும் இறங்குமோ என்கிற பயம் சிலருக்கு வரலாம். பொருளாதாரப் புள்ளி விவரங்களுக்கும் பங்கு விலைகளுக்கும் இருக்கும் தொடர்பு என்ன என்று தெரிந்துகொள்ள சிலருக்கு ஆர்வம் இருக்கலாம்.

நாட்டின் GDP என்பது உள்நாட்டு உற்பத்தி எப்படி இருக்கிறது என்று காட்டுகிற ஓர் அளவு. `கிராஸ் டொமெஸ்டிக் புராடக்ட் (Gross Domestic Product)’ என்ற ஆங்கில பதத்தின் சுருக்கமே GDP.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த GDP-யின் அளவு இன்னும் ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று நமது பிரதமர் கூறினார். இப்போதைக்கு நமது உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2.936 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்.

கிட்டத்தட்ட 3 லட்சம் கோடியிலிருந்து 5 லட்சம் கோடி ஆக வேண்டும். அப்படி ஆக முடியுமா என்பது சிலரின் கேள்வி. காரணம், வளர்ச்சி வேகம் அதிகரிக்கவில்லை; மாறாக குறைகிறது. ஓரிரு முறை அல்ல. தொடர்ந்து குறைந்து வருகிறது.

மோடி
மோடி

2019-20-ம் இரண்டாவது காலாண்டு என்பது, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் கொண்டது. இந்த மூன்று மாதங்களில் நாட்டின் GDP வளர்ச்சி, அதிர்ச்சியளிக்கும் விதமாக வெறும் 4.5 சதவிகிதம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இவற்றுக்கும் பங்குச்சந்தைகளின் ஏற்ற இறக்கங்களுக்கும் தொடர்பு உண்டு. இந்த எண் காட்டுவது, நாட்டில் ஒட்டுமொத்தமாகப் பொருளாதார விஷயங்கள் எப்படி நடந்துகொண்டிருக்கின்றன என்பதை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பங்குச்சந்தை குறியீட்டு எண்களின் நகர்தல் என்பது குறிப்பிட்ட சில பங்குகளின் விலை ஏற்ற இறக்கங்களைப் பொறுத்தது. அதாவது, சென்செக்ஸில் உள்ள 30 பங்குகள் மற்றும் நிஃப்டியில் உள்ள 50 பங்குகளின் விலை மாற்றங்களைப் பொருத்தது. இந்த இரண்டும் தவிர, மிட் கேப் இன்டெக்ஸ், ஸ்மால் கேப் இன்டெக்ஸ் என்று பல்வேறு குறியீட்டு எண்கள் இருக்கின்றன. இவையெல்லாம், பங்குகளின் விலை மாற்றங்களை பிரதிபலிப்பவை.

மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தை

வியாபாரம் நன்றாக நடந்தால், லாபம் அதிகமாக வந்தால், பங்குகளின் விலைகள் உயரும். ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், உற்பத்தி செய்யும், மேன்பேக்சரிங் துறை நிறுவனங்கள், கட்டுமானம் செய்யும் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் போன்ற பல சேவைகள் செய்யும் நிறுவனங்கள் என்று பலவகையான தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நிறுவனப் பங்குகளின் விலைகள் அந்தந்த நிறுவனங்களின் வியாபாரம் மற்றும் லாப நஷ்டங்களை வைத்து மாறும்.

இவையெல்லாம் சரியாக நடந்தால், நன்றாக நடந்தால் அது GDP எண்ணில் தெரியவரும். அவையெல்லாம் குறைகின்றன என்பதை GDP எண் காட்டுவதாகக் கொள்ளலாம்.

அப்படியென்றால், வெளிவந்திருக்கும் 4.5 சதவிகிதம், கடந்த ஆறு வருடத்தில் இல்லாத அளவு குறைவான வளர்ச்சி வேகத்தைத்தான் காட்டுகிறது. அப்படியென்றால், பங்கு விலைகள் மேலும் விழுமோ!

வேறு காரணங்களுக்காக பங்கு விலைகள் குறையலாம். ஆனால், வெளிவந்திருக்கும் GDP வளர்ச்சி 4.5 சதவிகிதம் என்பதற்காகக் குறையாது. அதற்கு இரண்டு காரணங்கள்.

Economy Slowdown
Economy Slowdown

முதலாவது, பங்குச்சந்தையில் எப்போதுமே எதிர்பாராத செய்திகளுக்குத்தான் அதிக `ரியாக்‌ஷன்’ இருக்கும். இந்த அளவுதான் வளர்ச்சி இருக்கப்போகிறது என்பது சந்தைக்கு முன்பே தெரியும். பல `ரேட்டிங் ஏஜென்சி’ களும், வங்கிகளும் முன்கூட்டியே இதுகுறித்து சொல்லிவிட்டார்கள். அப்போதே இந்தச் செய்திக்கான இறக்கத்தை சந்தை செய்துவிட்டது. அதை Already discounted என்பார்கள். இப்போது வெளிவந்திருப்பது, கணிப்பை உறுதி செய்வதுதான். அதனால், மீண்டும் ஒருமுறை அதே விஷயத்துக்காக `ரியாக்‌ஷன்’ இருக்காது அல்லது குறைவாக இருக்கும்.

இரண்டாவது காரணம், வந்திருப்பது முடிந்துபோன காலாண்டு குறித்த தகவல். ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கானது. அதாவது Past data. சந்தை எப்போதும் வரப்போவதற்குத்தான் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும். அதை வைத்துதான் காய்கள் (விலைகள்) நகர்த்தும்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

பண்டிகைக் கால விற்பனை ஆட்டோமொபைல்களிலும், பிரிட்ஜ், வாஷிங் மிஷின், டிவி போன்ற `ஒயிட் கூட்ஸ்’ சிலும் நன்றாக இருந்ததாகச் சில தகவல்கள் வருகின்றன. தவிர, வங்கிகள் கார்ப்பரேட்களுக்குக் கொடுக்கும் கடன்கள் குறித்தும் சில பாசிட்டிவான தகவல்கள் வரலாம் என்கிற எதிர்பார்ப்பு சந்தையில் இருக்கிறது. தாமதமாக வந்த மழை போன்ற காரணங்களினால் செப்டம்பர் மாத GDP வளர்ச்சி பாதிக்கப்பட்டது. ஆனால், அடுத்த காலாண்டான `அக்டோபர் நவம்பர் டிசம்பர் ’அவ்வளவு மோசமாக இருக்காது என்று சந்தையில் சிலர் நினைக்கிறார்கள்.

இப்படி, சந்தை வரப்போவதையும் மனதில் வைத்துதான் விலைகளை மாற்றும்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism