Published:Updated:

நிறுவனங்களுக்கு ₹ 92,000 கோடி அபராதம்... எந்தெந்த பங்குகள் விழும், எழும்?  - நாள்-26

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

டெலிகாம் நிறுவனங்கள் இப்படி ஒரு தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை. அதனால், அவற்றின் முந்தைய ஆண்டு வரவு-செலவு கணக்குகளில் இதற்காக என்று ஏதும் எடுத்து வைக்கவில்லை. ஆக, இது புதுச் செலவு. மிகப்பெரிய செலவு. #SmartInvestorIn100Days

பல ஆண்டுகளாக முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து லாபம் சம்பாதித்துக் கொடுத்த, மிக நல்ல பங்குகளாகக் கருதப்பட்டுவந்த பங்குகள் சில, சமீபத்தில் சிக்கலுக்கு உள்ளாகி வருகின்றன. அவற்றில் முக்கியமானவை, DHFL, யெஸ் பேங்க், ஜீ என்டர்டெயின்மென்ட், RBL பேங்க் மற்றும் இன்ஃபோசிஸ். அடுத்து, அந்த வரிசையில் சில டெலிகாம் பங்குகளும் வந்துவிடுமோ என அஞ்சவேண்டியிருக்கிறது.

கடந்த வியாழனன்று மதியம் 1 மணிக்கு மேல் திடீரென, பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலை 10 சதவிகிதம் விழுந்தது. கூடவே, ஐடியா செல்லுலார் நிறுவனப் பங்கு விலைகளும். அவை 20% விழுந்தன.

எல்லாம் நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தது..? திடீரென இந்தப் பங்குகள் இவ்வளவு விழுகிறதே! கையில் இருக்கும் அந்தப் பங்குகளை வைத்துக்கொள்வதா... மேலும் விழுமோ! என்ற குழப்பமும் அச்சமும் முதலீட்டாளர்களிடையே எழுந்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வோடஃபோன்
வோடஃபோன்

அன்றைய வர்த்தக நேரத்தின் முடிவு வரை வோடஃபோன் பங்கு விலை உயரவில்லை. மறுநாள் (அக்.25) மேலும் 5% விலை இறக்கம் கண்டது. ஆனால், பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் இரண்டு மணி நேரத்திற்குள் விழுந்த விலை முழுவதையும் மீட்டது. தவிர, சற்று விலை உயர்வுடனேயே அன்றைய தினத்தை முடித்துக்கொண்டது. மறுநாள் மேலும் சற்று உயர்ந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஏன், என்ன ஆயிற்று? டெலிகாம் நிறுவனங்களுக்கு என்ன பிரச்னை?

இது, 14 ஆண்டுகாலப் பிரச்னை. மத்திய அரசின் டிபார்ட்மென்ட் ஆஃப் டெலிகம்யூனிகேஷன்ஸுக்கும் (DoT ), டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் போர்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் பயன்படுத்திய டெலிகாம் நிறுவனங்கள், அதைக் கொடுத்த மத்திய அரசின் டிபார்ட்மென்ட் ஆஃப் டெலிகம்யூனிகேஷன்ஸுக்கு (DoT ) எவ்வளவு பணம் கொடுப்பது, கொடுக்கவேண்டிய தொகையை எப்படிக் கணக்கிடுவது என்பதில்தான் கருத்துவேறுபாடு. குறிப்பாக, AGR எனப்படும் `அட்ஜஸ்டட் கிராஸ் ரெவின்யு’வில் எதெல்லாம் வரும், எதெல்லாம் வராது என்பதில் கருத்துவேறுபாடு. அதன் காரணமாக DoT கேட்ட தொகையை டெலிகாம் நிறுவனங்கள் முழுமையாகக் கொடுக்க மறுத்தன.

Airtel - Oct,24 Price
Airtel - Oct,24 Price

பல்வேறு நீதிமன்றங்களில் இது தொடர்பாக வழக்குகள் போடப்பட்டன; தீர்ப்புகள் வந்தன. பின்பு, இறுதியாக  விஷயம் உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த அந்த வழக்கின் தீர்ப்பு, சென்ற வியாழன் அன்று வெளியிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பு, டெலிகாம் நிறுவனங்களுக்கு விழுந்த பெரிய அடி!

டெர்மினேஷன் ஃபீஸ் மற்றும் ரோமிங் சார்ஜஸ் தவிர மற்ற அனைத்தும், AGR (Adjusted Gross Revenue)ல் வரும் என்று உச்சநீதிமன்றம், தீர்ப்பு சொல்லிவிட்டது. மேலும், இதுகுறித்து இனி சட்டப்படியான முறையீடுகள் எதுவும் கூடாது (நோ லிட்டிகேஷன்) என்றும் சொல்லிவிட்டது. இந்தத் தீர்ப்பு, டெலிகாம் நிறுவனங்களுக்கு விழுந்த பெரிய அடி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புப்படி, பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் கட்டணம், வட்டி மற்றும் அபராதம் என்ற வகைகளில் DoT-க்கு சுமார் 92,000 கோடி ரூபாய் தரவேண்டும். தீர்ப்பு இப்படி வந்ததன் காரணமாகத்தான் டெலிகாம் துறை பங்குகளின் விலையில் அப்படி ஒரு வீழ்ச்சி.

ஏர்டெல் நிறுவனம் DoT-க்கு கொடுக்கவேண்டிய தொகை ரூ.21,682 கோடி. வோடஃபோன் குழுமம் ரூ.19,823 கோடி. ஆர்.காம் ரூ.16,456 கோடி. டாட்டா குழுமம் ரூ.9,987 கோடி. ஐடியா செல்லுலார் ரூ.8,485 கோடி. ஏர்செல், ரூ.7,852 கோடி. BSNL ரூ.2,098 கோடி. MTNL ரூ.2,537 கோடி. வீடியோகான் ரூ.1,032 கோடி. ரிலையன்ஸ் ஜியோ 13.3 கோடி ரூபாய்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு

ஏற்கெனவே, ஜியோவின் வருகையால் கட்டணங்களைக் குறைத்து தடுமாறிக்கொண்டிருக்கும் இந்த நிறுவனங்கள், இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க வேண்டும். அந்த நிறுவனங்கள் இப்படி ஒரு தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை. அதனால் அவற்றின் முந்தைய ஆண்டு வரவு-செலவு கணக்குகளில்  இதற்காக என்று ஏதும் எடுத்து வைக்கவில்லை. ஆக, இது புதுச் செலவு. மிகப்பெரிய செலவு.

தவிர, பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் நிறைய கடன் வாங்கி வைத்திருக்கின்றன. பார்தி ஏர்டெல் நிறுவனம் வாங்கியிருக்கும் கடன் 1.16 லட்சம் கோடி ரூபாய். வோடஃபோனின் கடன் தொகை ஒரு லட்சம் கோடி ரூபாய்.

டெலிகாம் துறையில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் சேர்த்து வாங்கிவைத்திருக்கும் மொத்த கடன் தொகை சுமார் 7 லட்சம் கோடி ரூபாய்.

இதன் காரணமாக, இந்த நிறுவனங்கள் வாங்கியிருக்கும் கடன்களை ஒழுங்காகத் திருப்பிக் கட்டுமா என்கிற அச்சமும் எழுந்திருக்கின்றன. அதனால்தான், தீர்ப்பு வந்த அன்றே சில வங்கிப் பங்குகளின் விலைகளும் உடனடியாக இறங்கின. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பங்கு விலை, வியாழன் அன்று  5% விழுந்தது.

ஆக்ஸிஸ் வங்கி கொடுத்திருக்கும் கடன் 14,015 கோடி ரூபாய். அந்த வங்கியின் மொத்தக் கடனில் அது, 2.82 சதவிகிதம். ஸ்டேட் பேங்க் ஆஃப்  இந்தியா கொடுத்திருக்கும் கடன் 37,330 கோடி ரூபாய். அந்த வங்கியின் மொத்தக் கடனில் அது, 1.67 சதவிகிதம்.

Aitel vs jio vs vodafone
Aitel vs jio vs vodafone

HDFC வங்கி கொடுத்திருக்கும் கடன் 24,514 கோடி ரூபாய். அந்த வங்கியின் மொத்தக் கடனில் அது, 2.73 சதவிகிதம். பேங்க் ஆஃப் பரோடா வங்கி கொடுத்திருக்கும் கடன் 13,955 கோடி ரூபாய். அந்த வங்கியின் மொத்தக் கடனில் அது, 2.67 சதவிகிதம். கோடக் மகேந்திரா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவையும் முறையே 4,676 கோடி மற்றும் 7,318 கோடி ரூபாய் கடனாகக் கொடுத்திருக்கின்றன.

இந்தத் தீர்ப்பு, இந்தத் துறையின் முதுகெலும்பை உடைக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது என்று செல்லுலார் ஆபரேட்டர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (COAI) சொல்லியிருக்கிறது.

Telecom Industry
Telecom Industry

டெலிகாம் துறை நிறுவனங்களின் இடுப்பை மட்டுமல்ல, வங்கித்துறை மற்றும் டெலிகாம் துறை சார்ந்த அதன் பிற நிறுவனங்களின் இடுப்பையும் இந்த ஒரு தீர்ப்பு உடைக்கும் போல் தெரிகிறது.

அதே சமயம், இதே தீர்ப்பு ஒரே ஒரு டெலிகாம் நிறுவனத்திற்குப் பெரிய வாய்ப்பையும் அள்ளிக்கொடுத்திருக்கிறது. அந்த ஒரு நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ.

தாமதமாக இந்தத் துறைக்குள் வந்ததால், ஜியோ கட்டவேண்டிய தொகை சில கோடி ரூபாய்களே. ஆனால், ஜியோவின் அத்தனை கட்டணக் குறைப்புகளையும் தாண்டி, தாங்கி, இப்போதும் ஜியோவுடன் களத்தில் நிற்கும் இரண்டு டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல்லும் வோடபோனும் கட்டவேண்டிய தொகைகள் பெரிது. அதனால் இந்தத் தீர்ப்பு, ஜியோவுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.