Published:Updated:

பங்குகளுக்கு போனஸ் ஷேர் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? #SmartInvestorIn100Days நாள்-60

#SmartInvestorIn100Days

ஒருவர் எத்தனை பங்குகள் வைத்திருக்கிறாரோ, அத்தனை இலவச பங்குகள். ஆயிரத்துக்கு ஆயிரம். 12 லட்சம் பங்குகளை வைத்திருந்தால், மற்றுமொரு 12 லட்சம் பங்குகள் இலவசம். போனஸ். வரையறை இல்லை.

பங்குகளுக்கு போனஸ் ஷேர் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? #SmartInvestorIn100Days நாள்-60

ஒருவர் எத்தனை பங்குகள் வைத்திருக்கிறாரோ, அத்தனை இலவச பங்குகள். ஆயிரத்துக்கு ஆயிரம். 12 லட்சம் பங்குகளை வைத்திருந்தால், மற்றுமொரு 12 லட்சம் பங்குகள் இலவசம். போனஸ். வரையறை இல்லை.

Published:Updated:
#SmartInvestorIn100Days

நேற்றைய அத்தியாயத்தில், பிரிட்டானியா இண்டஸ்டிரீஸ் கொடுத்த போனஸ் NCD-க்களை சந்தையில், நடக்கும் விலையில் வாங்கலாமா என்று விவாதித்தபோது சிலர், `அதென்ன NCD? அதைபற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமே!’ என்று நினைத்திருக்கலாம்.

ஆம். அந்தச் சிந்தனை சரிதான். பங்குகள் முதலீட்டில் ஆர்வம் இருப்பவர்களுக்கு இவை பற்றியும் தெரிய வேண்டும். நான்- கன்வெர்டிபிள் டிபென்ச்சர்’ என்பதன் சுருக்கம்தான் NCD.

ஒருவர், முதல் போட்டு வியாபாரம் ஆரம்பிக்கிறார். அது, அவருடைய வியாபாரம். அவர் மட்டுமே அந்த நிறுவனத்துக்கு முதலாளி. நிறுவனத்தில் போடப்பட்டிருக்கும் `கேப்பிட்டல்’ முழுவதும் அவருடையது. அதனால் அவர், `சோல் புரொபரைட்டர் மற்றும் `சிங்கிள் ஷேர் ஹோல்டர்’. இப்படி நடப்பவைதான் நாம் பார்க்கும் சிறு கடைகள், வியாபாரங்கள், நிறுவனங்கள் போன்றவை. MSME எனப்படும் சில ’மைக்ரோ, ஸ்மால் அண்ட் மீடியம் என்டர்பிரைசஸ்’களும் இந்த வழியில் நடத்தப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிறுவனம் லாபம் செய்தால் மொத்தமும் முதலாளிக்குத்தான். நட்டம் ஏற்பட்டால், அதையும் அவர் மட்டுமே ஏற்க வேண்டும். அதனால், அவர் போட்ட `முதல்’ பணம் குறையும். நட்டம் தொடர்ந்தால் கொஞ்சம் கொஞ்சமாக முதல் கரையும். சில சமயங்களில் அதிக நட்டங்கள் உண்டானால், முதலாளி போட்ட முதல் பணம் முழுவதும் காணாமல் போய்விடும்.

Smart Investor In 100 Days
Smart Investor In 100 Days

இதெல்லாம் பங்கு எனப்படும் `ஈக்விட்டி ஷேரி'ன் சாதக பாதகங்கள். அந்த முதலாளி, மற்றொருவரையும் அவரது கூட்டாளியாக சேர்த்துக்கொண்டால் அதன் பின் அந்த நிறுவனத்தில் இருவரும் பார்ட்னர்கள். சமமான முதல் போட்டிருந்தால், `ஈக்வல் பார்ட்னர்’கள். லாபமோ, நட்டமோ இருவருக்கும் சம பங்கு அல்லது முதல் போட்டிருக்கும் விகிதத்தில் பங்குதாரர்கள்.

அவர்கள் இருவர் தவிர, மேலும் பலரையும் முதல் போடச்சொல்லி, நிறுவனத்தில் பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொண்டால், அவர்கள் அனைவரும் நிறுவனத்தின் `ஷேர் ஹோல்டர்’கள். அது `பிரைவேட் லிமிடெட்’டோ `பப்ளிக் லிமிடெட்’ நிறுவனமோ, அது லாபம் செய்தால், ஷேர்களை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் அவரவர் போட்ட முதலுக்கு தக்கபடி பலன். நிர்வாகம் முடிவெடுக்கும் அளவு `டிவிடெண்ட்.’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிறுவனம் மிக நன்றாக லாபம் ஈட்டி, அவ்வப்போது பிரித்துக் கொடுத்த டிவிடெண்ட் போக, மீதமிருக்கும் பணம் நிறுவனத்திலேயே `ரிசர்வ்ஸ் & சர்ப்ளஸ்’ ஆக தங்கிவிடும். அந்தத் தொகையின் அளவு தொடர்ந்து வளர, ஒரு நேரம், அதில் இருக்கும் பணத்தை எடுத்து, போனஸ் பங்குகளாகப் பங்குதாரர்கள் அனைவருக்கும் வழங்கலாம். இது ஒரு விதத்தில் லாப பணத்தை மீண்டும் நிறுவனத்திலேயே `ரீ இன்வெஸ்ட்மென்ட்’ செய்வது போன்றது. வியாபாரத்தில் வந்த லாபம், டிவிடெண்ட் ஆக வெளியேறாமல், நிறுவனத்தின் `ஈக்விட்டி கேபிடல்’ ஆக மாறி, அதுவும் சம்பாதிக்க ஆரம்பிக்கும்.

TCS
TCS

அப்படி பங்குதாரர்களுக்கு வழங்கப்படுவதுதான், `போனஸ் ஷேர்’கள். முன்பு பார்த்த TCS நிறுவனம், பலமுறை 1:1 (ஒன்றுக்கு ஒன்று) என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் கொடுத்திருக்கிறது. TCS மட்டுமல்ல. பல நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று போனஸ் பங்குகள் கொடுக்கிறார்கள்.

ஒன்றுக்கு ஒன்று என்றால், ஒருவர் எத்தனை பங்குகள் வைத்திருக்கிறாரோ, அத்தனை இலவச பங்குகள். ஆயிரத்துக்கு ஆயிரம். 12 லட்சம் பங்குகளை வைத்திருந்தால், மற்றுமொரு 12 லட்சம் பங்குகள் இலவசம். போனஸ். வரையறை இல்லை.

நிறுவனம் முன்கூட்டியே அறிவிக்கிற `ரெக்கார்ட் டேட்’ என்ற தேதியில் எவரெல்லாம் அந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் கொடுப்பார்கள். தேதிகளைத் தெரிந்துகொண்டு சந்தையில் அப்படிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை எவரும் விலைக்கு வாங்க முடியும். அப்படி போனஸ் அறிவிக்கப்பட்ட பின், ஆனால் கொடுக்கப்படுவதற்கு முன்பு என்ற இடைப்பட்ட காலத்தில் அந்தப் பங்குகளின் `நிலை’க்குப் பெயர் `கம் போனஸ்’ (Cum Bonus). போனஸ் கொடுத்து முடிக்கப்பட்டபின், அந்நிறுவனப் பங்கின் நிலை, ‘எக்ஸ் போனஸ்’ (Ex Bonus).

`கம் போனஸ்’ பங்குகள் விலை அதிகம் இருக்கும். `எக்ஸ் போனஸ்’ ஆகிற அன்று அதற்குத்தக்க விலை குறையும்.

மும்பை பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தை

உதாரணத்துக்கு சமீபத்தில், அக்டோபர் 23-ம் தேதி, HCL டெக்னாலஜீஸ் நிறுவனம், அதன் பங்குதார்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்குகள் அறிவித்தது. அப்போது அந்தப் பங்கின் விலை 1,120 ரூபாய். அதன் பின் அந்தப் பங்கின் `ரெக்கார்ட் டேட்’ ஆன, 7.12.2019 வரை அது கம் போனஸ்’ பங்கு. போனஸ் அறிவித்த நேரம், HCL டெக்னாலஜீஸ் பங்கு விலை 1,118 ரூபாய் இருந்தது. `ரெக்கார்ட் டேட்’க்குப் பின் போனஸ் பங்குகள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. 100 பங்குகள் வைத்திருந்தவர்களுக்கு மற்றுமொரு 100 பங்குகள். அதனால் அவர்கள் 200 பங்குகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆனார்கள்.

`கம் போனஸ்’ நேரத்தில் 1,118 ரூபாய் விலை இருந்தது, `எக்ஸ் போனஸி'ல் டிசம்பர் 9-ம் தேதி 552 ரூபாய் ஆகிவிட்டது. விலை பாதிக்குப் பாதியாகிவிட்டது. ஆனால், பங்குதாரரின் மொத்தப் பங்குகளின் மதிப்பு குறையவில்லை. முன்பு 100*1,118 = 1,11,180. ’எக்ஸ் போனஸி'ல் 200 பங்குகள் 552 ரூபாய் வீதம் 1,10,400. கிட்டத்தட்ட அதே விலை.

போனஸ் பங்கு என்றால் எப்போதும் ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில்தான் தரப்பட வேண்டும் என்பதில்லை. தவிர, 2019-ம் ஆண்டு போனஸ் பங்குகள் தருகிற பிற நிறுவனங்கள் ஏதும் உண்டா... போன்றவை குறித்து நாளை பார்க்கலாம்.

- முதல் போடலாம்.

குறிப்பு: பிரிட்டானியா இண்டஸ்டிரீஸ் கொடுத்திருப்பது போனஸ் NCD-கள் என்று குறிப்பிட்டிருக்கிறோம். போனஸ் என்றால் இலவசம்தான். அந்நிறுவனம் NCDகளாக கொடுப்பதால், அவற்றை வைத்திருந்து வட்டி பெற விரும்புபவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு அப்படிப்பெற்றுவிட்டு, பின்னர் NCDகளை நிறுவனத்திடம் திருப்பிக்கொடுத்து விட்டு பணம் பெற்றுக்கொள்ளலாம். உடனடியாக பணம் வேண்டுமென்றால் பங்குச்சந்தையில் நடக்கும் விலையில் விற்றுக்கொள்ளலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism