Published:Updated:

காபி டே நிறுவன பங்குகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள்! #SmartInvestorIn100Days நாள்-70

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

இந்த `செல்லர் ஃபிரீஸ்’ அப்படிப்பட்ட ஒரு ஆபத்து. நான் ஒரு விலை கொடுத்து வாங்கிய பின், லாபம் கூட வேண்டாம், நட்டத்தைக் குறைத்துக்கொள்ள விற்க முயன்றாலும் இயலாது.

பங்குகளை வாங்க முயன்று, பங்குகள் கிடைக்காத நிலையின் பெயர், `பையர் ஃபிரீஸ்’ என்பதுபோல, பலரும் விற்க முயல்கையில், எவரும் வாங்க முன்வராத நிலைகளும் சந்தைகளில் நிகழும். அதன் பெயர், `செல்லர் ஃபிரீஸ்’ (Seller Freeze).

அதிக முதலீட்டாளர்கள் வைத்திராத சிறு சிறு நிறுவனப் பங்குகளில் இப்படிப்பட்ட `ஃபிரீஸ்’ நிலைகள் வரும். அதிக எண்ணிக்கையிலான பங்குகள் புழங்குகிற `லார்ஜ் கேப்’ பங்குகளுக்கு இந்த நிலைகள் வருவது அரிது. அதனால்தான் எப்போதும் லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளுடனே வர்த்தகத்தை வைத்துக்கொள்ளுங்கள் என்பது.

முதலீடு என்றால்கூட `ஸ்மால் கேப்’ பங்குகள்,`மிட் கேப்’ பங்குகள் பரவாயில்லை. முதலீடு என்பதால் உடனடியாகவோ, குறிப்பிட்ட நாளிலோ விற்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நல்ல நிறுவனம் என்பதால் விற்காமல் காத்திருக்கலாம். ஆனால், வாங்கி, சில நாள்களிலேயே அல்லது சில மணித்துளிகளிலேயே விற்று லாபம் பார்க்க நினைக்கும். `டிரேடிங்’குக்காக வாங்கும்போது, நம்மால் விற்க முடியுமா? அல்லது `நாம் வாங்கிய பின் விலை இறங்குகிறதே, உடனடியாக விற்று நட்டத்தைக் குறைத்துக் கொள்ளலாம்’ என்று விற்க முயலும்போது, நம்மிடம் வாங்க ஆள் கிடைப்பார்களா என்றெல்லாம் பார்த்துதானே வாங்க வேண்டும்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

27.12.2019 வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி நிலவரப்படி, தேசிய பங்குச் சந்தையில், `செல்லர் ஃபிரீஸ்’சில் இருந்த பங்குகளின் விவரங்கள் கீழே.

செல்லர் ஃபிரீஸ்
செல்லர் ஃபிரீஸ்

ஆக்ரோ பாஸ்பேட்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தின் 34,07,272 பங்குகளை விற்க ஆட்கள் இருக்கிறார்கள். ஏற்கெனவே 19.98 சதவிகிதம் விலை இறங்கி 98.75 ரூபாய்க்கு விற்க பலர் தயார். ஆனால், வாங்க ஆட்களில்லை!

முன்பு ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ஜெயபிரகாஷ் அசோசியேட் நிறுவனப் பங்குக்கும் இந்த நிலை. 76 லட்சத்துக்கும் அதிகமான பங்குகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. ஆனால், வாங்க எவருமில்லை. விலை 2.10 ரூபாய். முதல் நாள் விலையைக் காட்டிலும் 4.55% குறைவு.

Shares
Shares

இந்த `செல்லர் ஃபிரீஸ்’ அப்படிப்பட்ட ஒரு ஆபத்து. நான் ஒரு விலை கொடுத்து வாங்கிய பின், லாபம் கூட வேண்டாம், நட்டத்தைக் குறைத்துக்கொள்ள விற்க முயன்றாலும் இயலாது. காரணம், இந்த `ஃபிரீஸ்’ என்பவை ஒரே ஒரு நாளோடு முடிவது அல்ல. சில பங்குகளில் ஒவ்வொரு நாளும் என்று தொடர்ந்து விலை இறங்கும். ஆனாலும், வாங்க ஆள் இருக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்த நாள்களும் இப்படியே என்றால், விற்க நினைப்பவர் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். இப்படித்தான் சமீபத்தில், காபி டே என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்குக்கு நேர்ந்தது. ஊருக்கே, உலகத்துக்கே தெரிந்துவிட்டது அந்த நிறுவனம் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டிருந்தது என்று. முதலாளியும் தற்கொலை செய்துகொண்டுவிடுகிறார். அந்த நிலையில் அந்நிறுவனப் பங்குகளை யார் வைத்திருக்க விரும்புவார்கள்? பலரும் அலறியடித்து, வைத்திருப்பனவற்றை விற்க முன்வந்தார்கள்.

அதே சமயம் இந்நிலையில் அந்நிறுவனப் பங்குகளை யார் வாங்க முன்வருவார்கள்? அதுவும் அந்த விலையில்! வாங்க நினைப்பவர்களும் இன்னும் விலை இறங்கும். இறங்கட்டும். இறங்கினால் பார்த்துக்கொள்ளலாம் என்று காத்திருந்தார்கள்.

இந்த நிலையில் சந்தையில் அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் முழு விவரம் தெரியாதவர்கள், `ஆகா! விலை இறங்கியிருக்கிறது’ என்று வாங்கினால், பின் விற்க இயலாமல் போய்விடும். பலருக்கு அப்படி ஆகியிருக்கிறது.

Price chart
Price chart

2019, ஜூலை 26-ம் தேதி 194 ரூபாய் விலை இருந்த காபி டே என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு விலை, அக்டோபர் மாதம் 30-ம் தேதி, 29 ரூபாய். இடையில் தொடர்ந்து இறக்கம். பல நாள்கள் `செல்லர் ஃபிரீஸ்’.

எனவே, புரிந்துகொள்ள வேண்டியது, டிரேடிங் என்பது கடல் நீச்சல்போல.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.