Published:Updated:

குறியீட்டு எண்ணை வைத்து ஒரு பங்கின் போக்கை கணிக்க முடியுமா? #SmartInvestorIn100Days நாள்-54

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

நிஃப்டியில் மொத்தம் 50 பங்குகள் என்பது சரி. ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரே மதிப்பு கிடையாது.

இன்டெக்ஸ்களில் இருக்கும் பங்குகள் விலை இறங்கினால், இன்டெக்ஸ் இறங்கும். விலைகள் உயர்ந்தால், இன்டெக்ஸ் உயரும். அந்த குறியீட்டு எண்களின் நகர்வை வைத்து பங்குச்சந்தை எப்படி இருக்கிறது, போக்கின் திசை என்ன, மார்க்கெட் `மூட்’ (Mood) என்ன என்பதெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

அதே சமயம், குறியீட்டு எண் நகர்வு போலதான் எல்லாப் பங்குகளின் விலைகளும் உயரும் அல்லது குறையும் என்று சொல்ல முடியாது.

share Market
share Market

உதாரணத்திற்கு, 5.12.19 வியாழன் அன்று நிஃப்டி 24 புள்ளிகள் இறக்கம். ஆனால், அதே நாள், டாடா எலிக்சி பங்கு விலை ஆறு சதவிகிதம் உயர்வு. டாடா எலிக்சி பங்குகள் மட்டும் வைத்திருப்பவருக்கு, அன்றைய தினம் நிஃப்டி இறங்கியதால் பாதிப்பு இல்லை என்பது தவிர, நிஃப்டி என்ற குறியீட்டு எண் நகர்வை மட்டும் அவர் பார்த்திருந்தால், அவருக்கு சரியான தகவல் கிடைத்திருக்காது. காரணம், நிஃப்டி சந்தை இறக்கம் என்கிறது. ஆனால், அவர் வைத்திருக்கும் பங்கு விலையோ நல்ல உயர்வு கண்டிருக்கிறது. இது ஒரு விஷயம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மற்றொரு சுவாரஸ்யமான விஷயம், ஒரு நாள் வர்த்தகத்தில், இன்டெக்ஸுக்கு உள்ளாக இருக்கும் பங்குகளிலேயே சிலவற்றின் விலைகள் உயர்ந்தும் வேறு சிலவற்றின் விலைகள் குறைந்தும் இருக்கும். அவற்றை கூட்டிக்கழித்து நிகரமாக, விலைகள் உயர்வா, தாழ்வா என குறியீட்டு எண், இன்டெக்ஸ் காட்டும்.

உதாரணத்திற்கு, நிஃப்டி 24 புள்ளிகள் இறக்கம் கண்ட 5.12.19 அன்று, நிஃப்டியில் இருக்கும் ஐம்பது நிறுவனங்களில் ஒன்றான TCS பங்குகளின் விலை, அதே நாள், 2 சதவிகிதம் விலை உயர்வு கண்டது. இது ஏன் இப்படி என்று தெரிந்துகொள்ள, குறியீட்டு எண்கள் எப்படி கட்டமைக்கப்படுகின்றன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

நிஃப்டியில் மொத்தம் 50 பங்குகள் என்பது சரி. ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரே மதிப்பு கிடையாது.

எப்படி கேரம் போர்டு `காயின்’களில் சிவப்புக்கு ஐந்து மதிப்பெண், வெள்ளைக்கு இரண்டு மற்றும் கறுப்புக்கு ஒரு மதிப்பெண் என்று வேறுபாடுகள் இருக்கின்றனவோ அப்படி. `பிளேயிங் கார்டு’ களில் ராஜா, ராணி, ஜாக் ஆகியவற்றுக்கு வெவ்வேறு மதிப்புகள் இருப்பதுபோல, இன்டெக்ஸில் இருக்கும் பங்குகளுக்கும் வித்தியாசமான `மதிப்பு’ தரப்படுகிறது. அப்படித்தான் குறியீட்டு எண் கட்டமைக்கப்படுகிறது. இப்படி மாறுபடும் மதிப்பு கொடுப்பதற்கு `வெயிட்டேஜ்’ என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிஃப்டி குறியீட்டு எண்ணில் HDFC Bank பங்கிற்குத்தான் மிக அதிக `வெயிட்டேஜ்’. 11.08 சதவிகிதம். அடுத்தபடியாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். அதற்கு 10.68 சதவிகித வெயிட்டேஜ். மூன்றாவது வெயிட்டேஜ், HDFC லிமிடெட் என்ற வீட்டுக்கடன் கொடுக்கும் நிறுவனப் பங்கிற்கு. அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் பங்குகளைக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையில் பார்க்கலாம்.

நிஃப்டி வெயிட்டேஜ்
நிஃப்டி வெயிட்டேஜ்

நிஃப்டியில் மொத்தம் 50 நிறுவனங்களின் பங்குகள் இருந்தாலும், அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கும் முதல் பத்து நிறுவனங்களுக்கு தரப்பட்டிருக்கும் வெயிட்டேஜ் மட்டும், 61.18 சதவிகிதம். ஏனைய 40 நிறுவனப் பங்குகள் அனைத்திற்கும் சேர்த்து, 38.82 சதவிகிதம்தான்.

அப்படியென்றால், அதிக வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டிருக்கும் சில பங்குகள் கொஞ்சம் விலை மாறினாலும், அது நிஃப்டியில் எதிரொலிக்கும். வேறு அதிக வெயிட்டேஜ் கொடுக்கப்படாத சில பங்குகளின் விலை மாற்றங்கள், நிஃப்டியில் பெரிய தாக்கம் கொடுக்காது.

குறிப்பாக, HDFC Bank, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் HDFC லிமிடெட் ஆகிய பங்கு விலை மாற்றங்கள் நிஃப்டியின் போக்கில் தாக்கம் தரவல்லவை.

shares
shares

2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முழுக்க, HDFC Bank விலையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனாலும், நிஃப்டி 0.83 சதவிகிதம் உயர்ந்தது. காரணம், அதே காலகட்டத்தில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்கு விலை உயர்வு, 8.22 சதவிகிதம்.

இப்படியாக, சில பங்கு விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் கணிசமான தாக்கம் கொடுக்கின்றன.

சரி, இந்தப் பங்குகள்தான் குறியீட்டு எண்ணில் இருக்க வேண்டும் என்று எப்படித் தீர்மானிக்கிறார்கள். குறிப்பாக, நிஃப்டியின் 50 பங்குகள் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன? அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.