Published:Updated:

பங்குச்சந்தையில ஜெயிக்க எதெல்லாம் ரொம்ப முக்கியம்? தெரிஞ்சுக்கலாம்! #SmartInvestorIn100Days - நாள் 2

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும் பொருளாதார ஏற்ற இறக்கங்களை அலசும் தொடர்!

மூன்று நாள்களில் கிடைத்த பாடம்

கடந்த வெள்ளி, திங்கள், செவ்வாய் என்று மூன்று நாள்களாகப் பங்குச் சந்தைகளில் வெடிச்சத்தம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அதிரடி அறிவிப்புகள் எல்லாம் தீபாவளி (வரித்) தள்ளுபடிகள். கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள்.

இனி அவ்வளவுதான் என்று `ஷார்ட்’ போயிருந்தவர்கள் எல்லாம் Caught Unaware.

செப்டம்பர் 20, திங்கட்கிழமை, காலை சாவதானமாக 36,207 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், அன்று 10 மணிக்குமேல் வந்த கார்ப்பரேட் வரி அதிரடி குறைப்பு போன்ற இன்ப அதிர்ச்சி அறிவிப்புகளால், அங்கிருந்து அப்படியே 'ஜிவ்' என்று ராக்கெட் போல உயர்ந்து, 2000 புள்ளிகள் மேலேறி 38,000 புள்ளிகளைத் தொட்டு, அடுத்த நாளும் 1075 புள்ளிகள் உயர்ந்து, 39,000-ஐத் தாண்டி, கொடிகட்டி நின்றது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Sensex
Sensex

அடுத்தநாள் செவ்வாயன்று சென்செக்ஸ் அந்த உச்சத்தில் தயங்கித் தயங்கி நின்றுவிட்டு, அதற்கு அடுத்த நாளான நேற்று, புதனன்று, 500 புள்ளிகள் வீழ்ந்து 38,593 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நிதியமைச்சரின் இந்தக் குறிப்பிட்ட அறிவிப்பால் முதலீட்டாளர்களுக்குச் சந்தை மதிப்பில் பத்தரை லட்சம் கோடி ரூபாய் உயர்வு என்கிறது ஒரு கணக்கு. இந்தத் தகவல்களை வைத்து வேகமாக இரண்டு மூன்று விஷயங்களைப் பார்த்துவிடலாம்.

முதலாவது, பங்குச்சந்தையில் மட்டுமே இப்படி எல்லாம் ஒரே நாளில் 2000 புள்ளிகள் உயரும். அதே சமயம் விழவும் செய்யும். பல லட்சம் கோடிகள் வரும்; காணாமலும் போகும்.

Sensex
Sensex

முன்பு, பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி போய் UPA I வருகிறது என்று தேர்தல் முடிவுகள் தெரிவித்தவுடன், சென்செக்ஸ் குறியீட்டு எண் பயங்கரமாக விழுந்து, பங்கு வர்த்தகத்தையே ஒரே நாளில் இருமுறை நிறுத்தவேண்டிய அளவுக்குக் கலக்கியது.

2019-ல் பாஜகவும் மோடியும் மீண்டும் வெற்றிபெறுவது சந்தேகம் என்ற நிலையில், மோடி மீண்டும் பிரதமர் எனத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானதும் சென்செக்ஸ் பறந்தது.

பங்குச்சந்தையில் ஈடுபடாதவர்களுக்கு இவையெல்லாம் செய்திகள். கொஞ்சம் பரபரப்பு. கொஞ்சம் வியப்பு தருவன. அவ்வளவுதான். ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குதிக்கவைக்கும் அல்லது மாரடைப்பு தரும் அதிர்ச்சிகள். பிறகு? ஏதோ ஒரு நாள் திடீரென்று குபீர் என்று மொத்தமாக சில லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு உயர்வு அல்லது வீழ்ச்சி என்றால் எப்படியிருக்கும்?

தனிநபர்களுக்கு அவரவர் முதலீட்டுக்கு ஏற்ப அடி அல்லது ஏற்றம்.

இதைத்தான் ’பங்குகள், பரஸ்பர நிதிகள் எல்லாம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை’ என்கிறார்கள். ஆகவே, அதை பத்தோடு பதினோராவது சாதாரணமான எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். They mean it.

ஆயிரம் ரூபாய் இருந்த HDFC வங்கி ஒரு ரூபாய் முகமதிப்பு பங்கு விலை, மூன்றே நாள்களில் 1,250 ரூபாய். 25 சதவிகித உயர்வு.

500 ரூபாய்க்கு மேல் வர்த்தகம் ஆகிக்கொண்டிருந்த ஜீ டிவி, எஸ் பேங்க், DHFL, மற்றும் கஃபே காஃபி டே போன்ற பங்குகளின் விலைகள் எல்லாம் இப்பொழுது அதலபாதாளத்தில்.

அள்ளியும் தரும், அடித்தும் நொறுக்கும்.

அப்படியென்றால், இந்தப் பங்குச்சந்தையைச் சரியாகக் கையாள முடியாதா? பங்கு வர்த்தகத்தை விட்டுவிடலாமா? நல்ல லாபம் வாய்ப்பிருக்கும் இந்தத் துறையிலிருந்து ஒதுங்கி விடலாமா?

அவசியம் இல்லை.

சரியாக கையாண்டால், இதை மேனேஜ் செய்யலாம். செய்கிறார்கள்.

``நான் எப்பவும் கரெக்ட்டா, விலை இறங்கிய பின் வாங்குவேன். சரியான உச்சத்தில் விற்றுவிடுவேன்” என்று சந்தையில் வர்த்தகம் செய்யவேண்டிய கரெக்ட்டான நேரத்தை `டைம்’ பண்ண முயற்சி செய்யக் கூடாது. விற்பன்னர்களே இதில் தோற்று இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் மேலே பார்த்த, Caught unaware .

கடந்த வியாழன் அன்று நிதியமைச்சர் அறிவிக்கப்போவது எவருக்கும் முன்கூட்டியே தெரிந்திருந்தால், அன்று காலை அறிவிப்புக்கு முன் அவ்வளவு சவசவவென்று நடந்துகொண்டிருக்குமா?

ஆக, இந்தச் சந்தையின் முரட்டுக் குதிரையைக் கையாள ஒரே வழி, அதை ’டைம்’ செய்ய முயற்சி செய்யாமல், அதில் நீண்ட ’டைம்’ பொறுமையாக இருப்பதுதான்.

நல்ல பங்குகளை தேர்ந்து, கவனித்து, வாங்கி, நீண்டகாலம் வைத்திருப்பதுதான். இதில் எல்லாச் சொற்களும் முக்கியம்.

``அப்படியென்றால் இப்போது கூட வாங்கலாமா? ஐய்யய்யோ! விலைகள் உயர்ந்து விட்டதே!” என்று சொல்லக்கூடாது. காரணம், இப்போதுதானே சொன்னோம், சந்தையை ’டைம்’ பண்ண வேண்டாமென்று.

நல்ல வாய்ப்பு தரும் பங்கு என்றால் வாங்கலாம். ஆனால்,

ஆனால்?

ஒரேயடியாக, மொத்த முதலீட்டையும் இறக்க வேண்டாம். Slow and Steady wins the race என்பது பங்குச் சந்தைக்கு அதிலும் குறிப்பாக சிறுமுதலீட்டாளர்களுக்கு நிச்சயம் வெற்றி தரும். பங்குச்சந்தையில் இந்தப் பொறுமைதான் ரொம்ப ரொம்ப முக்கியம்.

Stocks
Stocks

கொஞ்சம் கொஞ்சமாக, நல்ல பங்குகளை வாங்குவதுதான் சீரான முதலீடு. சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்.

ஒவ்வொரு திங்கள்கிழமையும் என்பதுபோல, முன்கூட்டியே முடிவு செய்து கொண்ட வாரத்தில் ஏதோ ஒரு நாள் அல்லது மாதம் ஏதோ ஒரு நாள், மிகச் சிறிய அளவுகளில் வாங்கிச் சேர்க்கலாம். இதுதான் சார் இப்ப மாடர்ன் உண்டியல். இதில் போட்டுக் கொண்டே வரலாம். சேமிப்பது மட்டுமல்ல; கூடவே வளர்ச்சியும் பார்க்கமுடியும்.

நீண்ட காலத்தில்!

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.