Published:Updated:

ஷேர்மார்க்கெட்டில் பங்குகளை மட்டுமல்ல... டாலரும் வாங்கிவிற்கலாம்... எப்படி? #SmartInvestorIn100days

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

வியாபார நோக்கங்களுக்காக பங்குச் சந்தைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நான்கு கரன்சிகளில் எது ஒன்றையுமோ அல்லது எல்லாவற்றையுமோ, ஒருவர் வாங்கலாம். விற்றுக்கொள்ளலாம்.அதன் பெயர்தான், `கரன்சி ஃபியூச்சர்ஸ்’.

ஷேர்மார்க்கெட்டில் பங்குகளை மட்டுமல்ல... டாலரும் வாங்கிவிற்கலாம்... எப்படி? #SmartInvestorIn100days

வியாபார நோக்கங்களுக்காக பங்குச் சந்தைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நான்கு கரன்சிகளில் எது ஒன்றையுமோ அல்லது எல்லாவற்றையுமோ, ஒருவர் வாங்கலாம். விற்றுக்கொள்ளலாம்.அதன் பெயர்தான், `கரன்சி ஃபியூச்சர்ஸ்’.

Published:Updated:
#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

பங்குகள் வாங்கி விற்பது போலவே, வெளிநாட்டுப் பணத்தையும் இந்திய பங்குச் சந்தைகளில் வாங்க, விற்க முடியும். அதன் பெயர் கரன்சி ஃபியூச்சர்ஸ். இதை `FX future' என்றும் சொல்வார்கள்.

அமெரிக்க டாலர் என்று அறியப்படும் US Dollars (USD), ஜப்பானிய யென் (Yen - JPY), ஐரோப்பிய யூனியனின் யூரோ (EUR) மற்றும் கிரேட் பிரிட்டனின் பவுண்ட், Great Britain Pound (GBP) ஆகியவற்றை ஃபியூச்சர்ஸ் மார்க்கெட்டில் வாங்க, விற்க முடியும்

அமெரிக்க டாலர்
அமெரிக்க டாலர்

பங்குகளை வாங்கினால், அதன்பின் அவை விலை உயரலாம். அப்படி உயரும் என எதிர்பார்த்து வாங்குகிறார்கள். தவிர, பங்குகளுக்கு டிவிடெண்ட் கிடைக்கும். இந்தக் காரணங்களுக்காக, மக்களுக்கு பங்குகள் வாங்கும் ஆர்வம் இருக்கிறது. சமயங்களில் பங்கு விலைகள், இருப்பதைக் காட்டிலும் குறையும். அந்த எதிர்பார்ப்பில், நடப்பு விலைகளில் ஃபியூச்சர்ஸ் மார்கெட்டில் விற்றுவிட்டு, பின்பு விலை இறங்கியதும் வாங்கி, `கவர் ’ செய்து லாபம் பார்க்க, வர்த்தகம் செய்கிறார்கள்.

பங்குகள் வாங்குவது, விற்பது சரி. ஆனால், மக்கள் ஏன் வெளிநாட்டுப் பணத்தை வாங்க, விற்க வேண்டும்?

நம் நாட்டிலிருந்து பலரும், பல நிறுவனங்களும், பொருள்கள் மற்றும் சேவை ஏற்றுமதி செய்கின்றன. உதாரணத்திற்கு TCS, Infosys போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சேவை ஏற்றுமதி செய்பவை. ஏற்றுமதிக்காக அவர்களுக்கு வழங்கப்படும் பணம், இந்திய ரூபாய்களில் வராது. அவர்கள், அமெரிக்க டாலர்களில் பணம் கொடுப்பார்கள். இதேபோல எண்ணற்ற நிறுவனங்களும் அமைப்புகளும், நபர்களும் ஏற்றுமதிகள் செய்து, அமெரிக்க டாலர் மற்றும் வேறு சில வெளிநாட்டு கரன்சிகளில் பணம் பெறுகிறார்கள்.

அமெரிக்கா
அமெரிக்கா

சிலர், வெளிநாடுகளில் வேலை செய்து, அங்கே சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கான சம்பளமும் இதர வருமானங்களும் வெளிநாட்டு கரன்சிகளிலேயே வழங்கப்படுகின்றன. சிலர், வெளிநாடுகளுக்கு சுற்றுலா போகிறார்கள். அங்கே செலவு செய்ய, நம் நாட்டுப் பணத்தைக் கொடுத்து வெளிநாட்டுப் பணம் பெற்று எடுத்துச்செல்கிறார்கள்.

ஏற்றுமதியைப் போல இறக்குமதி செய்வோரும் ஏராளம். அவர்கள் பெறும் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு இந்தியப் பணத்தில் `பேமென்ட்’ கொடுக்க இயலாது. அவர்களுக்கு வெளிநாடுப் பணம் தேவை. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், சுற்றுலாவாசிகள் ஆகியோர், அவர்கள் நாட்டுப் பணத்தை இங்கே செலவுசெய்ய இயலாது. அவற்றை இந்திய ரூபாய்களாக மாற்றிக்கொள்கிறார்கள்.

அமெரிக்க டாலர்
அமெரிக்க டாலர்

இப்படியாக, நம் நாட்டில் பலருக்கும் வெளிநாட்டுப் பணத்துடன் தொடர்பு இருப்பது போக, அரசுக்கும் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வெளிநாட்டுக் கடன் போன்றவற்றால் அந்நிய நாட்டின் கரன்சிகளுடன் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது.

இந்த வெளிநாட்டு கரன்சிகளில் முக்கியமானது, அமெரிக்க டாலர். இந்தியாவைப் போன்றே உலகின் பல நாடுகளிலும்கூட அமெரிக்க டாலருக்கு மதிப்பு உண்டு. அமெரிக்க டாலருக்கு அடுத்தடுத்த இடங்களில் யூரோ, யென் மற்றும் பவுண்டு ஆகியவை இருக்கின்றன.

பங்குச் சந்தைகளுக்கு வெளியே வங்கிகள் மூலமும், அனுமதிக்கப்பட்ட தரகர்கள் மூலமும் இந்த வெளிநாட்டு கரன்சிகளை வாங்கலாம், விற்கலாம். அப்படி பரிவர்த்தனைகள் செய்ய, செய்பவரின் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்களைக் காட்டச் சொல்வார்கள். காரணம் கேட்பார்கள். விலை ஏற்ற இறக்கத்தைப் பயன்படுத்தி, லாபம் செய்யும் திட்டம் என்று சொல்ல இயலாது.

ஆனால், வியாபார நோக்கங்களுக்காக பங்குச் சந்தைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நான்கு கரன்சிகளில் எது ஒன்றையுமோ எல்லாவற்றையுமோ, ஒருவர் வாங்கலாம். விற்றுக்கொள்ளலாம்.

அதன் பெயர்தான், `கரன்சி ஃபியூச்சர்ஸ்’. இதை FX future என்றும் சொல்வார்கள். இந்த சுவாரஸ்யமான வர்த்தகம் மற்றும் `ஹெட்ஜிங்’ வாய்ப்புகள் குறித்து அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.