Published:Updated:

RIL பங்குதாரர் முகேஷ் அம்பானி 2018-19ல் பெற்ற டிவிடெண்ட் எவ்வளவு தெரியுமா?#SmartInvestorIn100Days 48

சிலர் பங்குகளை வாங்கும்போது அவற்றின் டிவிடெண்ட் யீல்டு என்ன என்று பார்த்து அதற்காகவே வாங்குவார்கள். நீண்டகாலத்தில் அந்த நிறுவனங்கள், TCS, இன்ஃபோசிஸ்போல அடிக்கடி போனஸ் பங்குகளும் கொடுக்க, அவற்றுக்கும் அதே அளவு டிவிடெண்ட் பெற்று, ஆதாயம் அடைவார்கள்.

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

முன்பு பார்த்த பல ப்ளு சிப் பங்குகளின் `டிவிடெண்ட் யீல்டு’ நன்றாக இருக்கும். வேறு சில பங்குகளில் `டிவிடெண்ட் யீல்டு’ ஒன்றும் இல்லாமல் வெகு சுமாராக இருக்கும். உதாரணம், MRF பங்குகள்.

10 ரூபாய் முகமதிப்புள்ள MRF பங்குகளுக்கு வழங்கப்படும் டிவிடெண்ட் 600%. அந்த நிறுவனப் பங்கின் சந்தை விலை 64,000 ரூபாய். 10 ரூபாய் பங்கு ஒவ்வொன்றுக்கும் வழங்கப்படும் டிவிடெண்ட் தொகை 60 ரூபாய்.

டெம்.ஆர்.எஃப்
டெம்.ஆர்.எஃப்

64,000 ரூபாய் முதலீடு செய்தால், ஆண்டுக்கு டிவிடெண்ட் வருமானம் 600 கிடைக்கும்! யீல்டு கணக்கிட்டால் வருவது 0.9% அதாவது 100 ரூபாய்க்கு ஆண்டுக்கு 90 காசு. வங்கி வட்டியே 100 ரூபாய்க்கு, 6 ரூபாய் 50 காசு முதல் 8 ரூபாய் வரை.

ஆக, MRF பங்கு டிவிடெண்ட் யீல்டு வேலைக்கு சரிப்பட்டு வராது. ஆனால், அதை வேறு சில காரணங்களுக்காக வாங்குகிறார்கள், வைத்திருக்கிறார்கள்.

178 கோடியை இழந்த ஜுன்ஜுன்வாலா கற்றுத்தரும் படிப்பினை! #SmartInvestorIn100Days நாள் -35

முன்பெல்லாம் எவ்வளவு டிவிடெண்ட் வந்தாலும் அதற்கு, டிவிடெண்ட் பெறுகிறவர்கள் வருமான வரி கட்ட வேண்டியதில்லை. Fully Exempted ஆக இருந்தது. சமீபத்தில் 2016 ஏப்ரல் முதல்தான், ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் வரையிலான டிவிடெண்ட் மட்டும் முற்றிலும் வருமான வரி விலக்கு உள்ளதாகவும் அதற்கு மேல் பெறும் டிவிடெண்ட் தொகைகளுக்கு 10% வரி கட்ட வேண்டும் என்றும் ஆக்கியிருக்கிறார்கள்..

அஞ்சல் நிலையத்திலோ வங்கியிலோ டெபாசிட் போட்டு, அதற்கு வட்டி வருமானம் வந்தால், அந்தத் தொகைக்கு வருமான வரி உண்டு. ஆனால், பங்குகள் தரும் டிவிடெண்டுக்கு இப்படி ஒரு சலுகை.

இந்தச் சலுகை சிறுமுதலீட்டாளர்களுக்குக் கிடைக்கிறது. அதைவிட அதிகமாக லாபம் அடைகிறவர்கள், பட்டியல் இடப்பட்ட நிறுவனங்களின் புரொமோட்டர்கள்தான். அவர்கள் வைத்திருக்கும் ஏராளமான பங்குகளுக்கும் அதே சதவிகிதத்தில் டிவிடெண்ட் வழங்கப்படுகிறது. 30% வருமான வரிக்குப் பதிலாக 10% மட்டும் கட்டிவிட்டு, மீதத்தை அப்படியே எடுத்துக்கொண்டுப் போகிறார்கள்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மிகப்பெரும் பங்குதாரர், முகேஷ் அம்பானி 2018-19ம் ஆண்டில் பெற்ற டிவிடெண்ட் தொகை மட்டும் 1904 கோடி ரூபாய்.

இந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி அம்பானி, விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி என்று பலர் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் ஜுன்ஜுன்வாலாவும் உண்டு.

சிலர் பங்குகளை வாங்கும்போது அவற்றின் டிவிடெண்ட் யீல்டு என்ன என்று பார்த்து அதற்காகவே வாங்குவார்கள். நீண்டகாலத்தில் அந்த நிறுவனங்கள், TCS, இன்ஃபோசிஸ் போல அடிக்கடி போனஸ் பங்குகளும் கொடுக்க, அவற்றுக்கும் அதே அளவு டிவிடெண்ட் பெற்று, ஆதாயம் அடைவார்கள்.

கார்வி நிறுவனத்தின் வலைதளத்தில் காணப்படும் அதிக டிவிடெண்ட் யீல்டு தரும் பங்குகளைப் பாருங்கள்.

டிவிடெண்ட்
டிவிடெண்ட்

அதில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் HPCL நிறுவனம், தரும் `யீல்டு’ பார்த்தீர்களா?

டிவிடெண்ட் யீல்டு
டிவிடெண்ட் யீல்டு

10 ரூபாய் முகமதிப்புள்ள பங்கு ஒன்றுக்கு 15 ரூபாய் 90 காசு டிவிடெண்ட் தருகிறது அந்நிறுவனம். அதன் தற்போதைய சந்தை விலை, ரூபாய் 294. அதன் டிவிடெண்ட் யீல்டு, 5.4%. 100 ரூபாய்க்கு 5 ரூபாய் 40 காசு. கூடவே அதற்கு வரி சலுகைகள். மேலும் விலை உயரும் வாய்ப்பு.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.