Published:Updated:

டிரேட் செய்ய பொருத்தமான பங்குகளின் இரண்டு லட்சணங்கள்! #SmartInvestorIn100Days நாள்-74

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

டிரேட் செய்ய சரியான, பொருத்தமான பங்குகளுக்கு இரண்டு லட்சணங்கள் பார்க்க வேண்டும்.

எதை டிரேட் செய்பவர்களாக இருந்தாலும், வாங்கி விற்கிற பொருள்கள் குறித்த விவரங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். சாதாரணமாக, சந்தையில் கிடைக்கும் பெரிய வெங்காயம், பெரும்பாலும் கிலோ முப்பது நாற்பது ரூபாய்க்குள் விற்பனையாகும் பொருள், கடந்த ஆண்டு எப்படி விலை உயர்ந்தது என்பது நமக்குத் தெரியும்.

கிலோ 100, 120 ரூபாய் எல்லாம் போகையில், சில வியாபாரிகள் `இந்த விலையெல்லாம் நிற்காது. மூன்று நான்கு மடங்குகளா... விலை விழ்ந்தே தீரும்’ என்று கையில் இருந்ததை எல்லாம் 120-க்கு விற்றிருக்கலாம். பின்னர் விரைவிலேயே விலை கிலோவுக்கு 200 போனபோது ஏமாற்றத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியிருக்கலாம்.

Buy and Sell
Buy and Sell

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேபோல, விலை 200 ரூபாய்க்கு அருகில் இருக்கையில் சில வியாபாரிகள், விலை 250, 300 ரூபாய் போகும் என்று கையில் இருந்ததை விற்காமல் வைத்திருந்திருக்கலாம். சிலர், மேலும் வாங்கிக் குவித்திருக்கலாம். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. விலை 200 ரூபாயிலிருந்து வேகமாக 130, 110 ரூபாய்க்கு இறங்கிவிட்டது. காரணம், இறக்குமதி ஆனவை மற்றும் அடுத்த வெள்ளாமையில் வந்தவை, சந்தைக்குள் வந்துவிட்டன. அவர்களுக்கு, தவறவிட்ட லாபம் அல்லது நஷ்டம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வெங்காயம் என்ற பொருளில், அதன் குணத்தில், பயன்பாட்டில் வேறுபாடு இல்லை. ஒருசில மாதங்களுக்குள்ளாகவே இவ்வளவு ஆட்டம். அதன் வரத்து குறைந்ததனால் விலை உயர்ந்தது. வரத்து சரியானதும் விலை இயல்புக்கு அருகில் வந்துவிட்டது. சில வியாபாரிகளுக்கு நஷ்டம், சிலருக்கு லாபம்.

இதுபோல உருளை, தக்காளி என்று பல காய்கறிகளிலும் நடக்கும். காய்கறிகளில் மட்டுமல்ல, பல்வேறு பொருள்களிலும் நடக்கும். எல்லாம், `டிமாண்ட் & சப்ளை’ செய்யும் வேலை.

Representational Image
Representational Image

பங்குகளிலும் விலை மாற்றங்களுக்குக் காரணம், அதே `டிமாண்ட் & சப்ளை’ தான். டாடா மோட்டார் நிறுவனம் பெரும் நஷ்டம் செய்கிறது என்று தெரியவந்ததும், அந்தப் பங்குகளை வாங்குவோர் இல்லை. அப்படியென்றால், சுத்தமாக டிமாண்ட் இல்லை. ஏற்கெனவே அந்தப் பங்குகளை வைத்திருப்போர், விற்றுக் கழற்றிக்கொள்ள விரும்புகிறார்கள். அதனால் சப்ளை அதிகம். விலை தொடர்ந்து இறங்கியது. ஒருநேரம், 117 ரூபாய்க்கே போனது.

விற்க விரும்புகிறவர்கள் எல்லாம் விற்று விற்று, பின்பு ஒரு நேரம் சந்தையில் சப்ளை குறைய ஆரம்பித்தது. அதே நேரம், `அட! இவ்வளவு நல்ல நிறுவனப் பங்கு 117 ரூபாய்தானா!’ என்று அதை பல நீண்டகால முதலீட்டாளர்களும் வாங்க ஆரம்பிக்க, டிமாண்ட் கூடி, விலையும் உயர ஆரம்பித்தது. இப்போது, 190 ரூபாய்க்கு அருகில்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிரேட் செய்ய சரியான, பொருத்தமான பங்குகளுக்கு இரண்டு லட்சணங்கள் பார்க்க வேண்டும். முதலாவது, அந்த நிறுவனப் பங்கு தினசரி கணிசமான அளவு டிரேட் ஆகிற பங்காக இருக்க வேண்டும். இரண்டாவது, அதன் விலையில் அடிக்கடி மாற்றங்கள் வரவேண்டும். மாற்றங்கள் என்றால், விலை உயர்வதோ அல்லது குறைவதோ ஏதாவது ஒன்று நிச்சயம் நடக்க வேண்டும்.

இவற்றை ஏன் முக்கியம் என்று சொல்கிறேன் என்று கேட்கலாம். அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆவதை `வால்யூம்’ என்பார்கள். வால்யூம் இல்லாத பங்குகளை, வேண்டிய, பெரும் அளவுகளில், கிட்டத்தட்ட ஒரே விலைகளில் வாங்க விற்க முடியாது. டிரேட் என்பது சமயத்தில் அதிக எண்ணிக்கையிலான பங்குகளில் செய்தால்தான் லாபம் கிடைக்கும்.

சென்செக்ஸ்
சென்செக்ஸ்

உதாரணத்திற்கு, ரிலையன்ஸ் பங்கை `லாங்’ போக நினைக்கிறோம். அதாவது, டிரேடிற்காக வாங்க விரும்புகிறோம். 1,000 பங்குகள் வாங்க ஆர்டர் போட்டால் உடனே கிடைக்கும். 10,000 போட்டாலும் உடனே கிடைக்கும். 3.1.2020 அன்று நடந்த வர்த்தகத்தைப் பாருங்கள். 3.5 லட்சம் பங்குகள், மும்பை பங்குச் சந்தையிலும், 95 லட்சம் பங்குகள் தேசிய பங்குச் சந்தையிலும் டிரேட் ஆகியிருக்கிறது. முக்கிய செய்திகள் இல்லாத சாதாரண நாளில், கிட்டத்தட்ட ஒரு கோடி பங்குகள் பரிவர்த்தனை!

ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் லிட்
ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் லிட்

ரிலையன்ஸ் பங்கிற்குப் பதிலாக, ஃபோர்ஸ் மோட்டார் என்ற பங்கை டிரேடிங்கிற்கு வாங்க விரும்பினால், ஒரே விலையில் அவ்வளவு பங்குகள் கிடைக்காது. சமயத்தில் 10,000 பங்குகள் வாங்கக்கூட முடியாது.

ஃபோர்ஸ் மோட்டார்ஸ்

ஃபோர்ஸ் மோட்டார்ஸ்
ஃபோர்ஸ் மோட்டார்ஸ்

அதே ஜனவரி 3-ம் தேதி அன்று, மும்பை பங்குச் சந்தையில் பரிவர்த்தனை ஆன, மொத்த ஃபோர்ஸ் மோட்டார் பங்குகளின் எண்ணிக்கை 13,250 தான். தேசிய பங்குச் சந்தையில் 73,879 தான்.

வாங்கியதை விற்க வேண்டும். விற்றிருந்தால், வாங்க வேண்டும். அதற்கு ஏதுவாக கணிசமான வால்யூம் இருக்க வேண்டும்.

அடுத்த லட்சணம், ஒரு நாளுக்குள்ளாகவே கணிசமான விலை வேறுபாடு நடக்க வேண்டும். இல்லாவிட்டால், டிரேடில் பெரிய லாபம் கிடைக்காது. முன்பு பார்த்ததுபோல ஒவ்வொரு டிரேடுக்கும் புரோக்கரேஜ், ஜிஎஸ்டி வரி, டர்னோவர் டேக்ஸ் என்பதுபோல பல கட்டணங்கள். டிரேடருக்கு மிஞ்சுவது குறைவாகிவிடும்.

உதாரணத்திற்கு, 3-ம் தேதி IDFC பங்கில் நடந்த வர்த்தகத்தைப் பார்த்தால் தெரியும்.

IDFC பங்கு

IDFC பங்கு
IDFC பங்கு

இரண்டு பங்குச் சந்தைகளிலும் அன்றைய தினத்தின் அதிகபட்ச விலை மற்றும் குறைந்தபட்ச விலைகளுக்கு இடையே வேறுபாடு கிட்டத்தட்ட ஒரு ரூபாய்தான். இதற்கு என்ன விலையில் வாங்கி, என்ன விலையில் விற்று லாபம் பார்ப்பது! ஆனால், ரிலையன்ஸ் பங்கில் கிட்டத்தட்ட 18 ரூபாய் வேறுபாடு.

டிரேடிங்கிற்கு பங்கு தேர்வுசெய்ய சுலபமான வழி, `ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்’ பகுதியிலும் வர்த்தகம் நடக்கும் பங்காகப் பார்த்து செய்வதுதான்.

அதென்ன `ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்’ என்று சிலர் கேட்கலாம். அதற்கான பதில் அடுத்த அத்தியாயத்தில்.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.