Published:Updated:

பங்குச்சந்தையில் முதலீட்டு ரிஸ்க்கை கையாள்வது எப்படி? #SmartInvestorIn100Days நாள்-34

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

பங்குகள் தொடர்பான வர்த்தகத்தில் ரிஸ்க்கும் உண்டு. நல்ல வருமானம் தரும் வாய்ப்புகளும் உண்டு.

எல்லோரும் படிக்கும் படிப்பை படிப்பவர்கள், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள். அவர்களுக்கு பெரிய சம்பளம் இல்லாவிட்டாலும் ஒரு சராசரி சம்பளத்துடன்கூடிய வேலை கிடைத்துவிடும்.

சிலர், முனைந்து கண்டுபிடித்து, `இந்தப் படிப்பு இப்போதுதான் அறிமுகம் ஆகியிருக்கிறது. வருங்காலத்தில் பிரமாதமான வாய்ப்புகள் தரும் திறன் இந்தப் படிப்புக்கு உள்ளது' என்று வித்தியாசமான படிப்புகளைப் படிப்பார்கள். இப்படிக் கண்டுபிடித்துப் படித்தவர்களில் சிலருக்கு, அவர்கள் நினைத்தது போலவே நடக்கும். பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.

Study
Study

வேறு சிலருக்கு நடக்காது. இப்படிப் புதிதாக வந்ததைப் படிக்காமல், எல்லோரும் படிப்பதையே படித்திருந்தால், குறைந்தபட்சம் இருபதாயிரம் அல்லது முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்திலாவது ஒரு சராசரி வேலை கிடைத்திருக்கும். இப்போது அதுவும் போச்சு என்பார்கள்.

எல்லோரும் படிப்பதைப் படித்து, நிச்சய வெற்றி தரும் வழியில் போனவர்கள் ரிஸ்க் எடுக்கவில்லை. வித்தியாசமான படிப்பு படித்தவர்கள் ரிஸ்க் எடுத்துள்ளார்கள்.

ரிஸ்க் என்றால், கிடைத்தால் கூடுதலாகக் கிடைக்கும்; கிடைக்காவிட்டால் ஒன்றும் இல்லாமல் போகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

போஸ்ட் ஆபீஸ், வங்கி டெபாசிட்டுகள் போன்றவற்றில் பணம் முதலீடு செய்தால், 7 முதல் 8.5 சதவிகிதம் வரையிலான வட்டி கிடைக்கும். போடும் பணம் எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளில் இரட்டிப்பாகும். ரிஸ்க் இல்லை. அல்லது மிகக் குறைவு. வருமானம் நிச்சயம். ஆனால் அளவானது.

பங்குகளில் முதலீடு செய்பவர் எடுப்பது ரிஸ்க். சில பங்குகள் நினைத்தது போல விலை ஏறும். ஒரு சில பங்குகள் சில மாதங்களிலேயே விலை இரட்டிப்பாகும். வேறு சில, விலை இறங்கும். அவற்றில் முதல், அடிவாங்கும். மொத்தத்தில் போட்ட பணத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கலாம். அல்லது போட்ட பணத்தில் ஒரு பகுதி காணாமல் போகலாம்.

முதலீடு
முதலீடு
vikatan
வழக்கத்தைவிட அதிக வாய்ப்பிருக்கும் இடங்களில் நிச்சயம் ரிஸ்க் இருக்கும். ரிஸ்க்கே இல்லாத இடங்களில் கிடைக்கும் வருமானம், நிச்சயம் குறைவாகத்தான் இருக்கும். இதை மாற்றமுடியாது.

பங்குகள் தொடர்பான வர்த்தகத்தில் ரிஸ்க்கும் உண்டு. நல்ல வருமானம் தரும் வாய்ப்புகளும் உண்டு. சமீபத்தில் வெளியிடப்பட்ட IRCTC நிறுவனத்தின் பங்கு வெளியீட்டில் 310 ரூபாய்க்கு பங்குகள் அலாட் செய்யப்பட்டன. விண்ணப்பித்தவர்களில் ஒரு பகுதியினருக்கு, நபருக்கு 14 பங்குகள் கொடுத்தார்கள். அதற்கடுத்த 15 நாள்களில் அந்தப் பங்குகள் சந்தையில் 620 ரூபாய் விலை போயின. தொடர்ந்து விலை உயர்ந்து 880 ரூபாயில் தற்போது வர்த்தகம் நடக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அலாட்மென்ட் கிடைத்தவர்களுக்கு போட்ட பணம் 15 நாள்களில் இரட்டிப்பானது. அலாட்மென்ட் கிடைக்காமல் சந்தையில் பட்டியல் இடப்பட்டதும், 620 ரூபாய்க்கு வாங்கியவர்களுக்கும் லாபம்தான். அதற்கடுத்த 15 நாள்களில், அந்தப் பங்கின் விலை கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு. போட்ட பணத்திற்கு 50 சதவிகித லாபம்.

ஃபிக்செட் டெபாசிட்டில் 8 சதவிகித வட்டிக்குப் போட்டு வைத்தால், போட்ட பணம் இரட்டிப்பாக எட்டு வருடம் ஆகும். 50 சதவிகித வருமானம் கிடைக்க ஐந்து ஆண்டுகள் ஆகலாம்.

சேமிப்பு
சேமிப்பு

புதிய பங்கு வெளியீடுகள் மட்டுமல்ல, இதே பகுதியில் ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி குறித்தும் எழுதியிருந்தோம். அப்போது அதன் விலை, ரூ.270 சொச்சம். 20 நாள்களில் அதன் விலை, ரூ.335. இடையில் 370 ரூபாய்க்கு போனது. 15 நாள்களில் 10 சதவிகித விலை உயர்வு.

இதேபோல, ஒவ்வொரு 15 நாளும் கொடுக்குமா? நிச்சயம் கொடுக்காது. இதோடு விலை ஏற்றம் முடிந்துவிட்டதா? இனி அந்தப் பங்கு விலை உயராதா? சொல்லமுடியாது. இனி, விலை குறையாதா? வாங்கிய விலைக்கும் கீழே போகாதா? சொல்ல முடியாது.

அதேதான் IRCTC பங்கு விலைக்கும்.

அக்டோபர் 24, டைட்டன் பங்கு விலை 1,374 ரூபாய். நவம்பர் 7-ம் தேதி இரண்டு வாரங்களில் அதன் விலை 1,158 ரூபாய். பங்கு ஒன்றுக்கு 216 ரூபாய் விலை குறைவு. கிட்டத்தட்ட 15 சதவிகித விலை வீழ்ச்சி. 1,374 ரூபாய்க்கு ஒருவர் வாங்கியிருந்து 1,158 ரூபாயில் விற்றிருந்தால், அவருக்கு போட்ட பணத்திற்கு வருமானம் வராதது மட்டுமல்ல, போட்ட பணத்தில் 15 சதவிகிதம் காணாமல் போய்விட்டது. முதலுக்கே மோசம்.

இப்படி, இதற்கு இன்னும் பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம். இப்படி போட்ட பணம், போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்டிலோ, வங்கி டெப்பாசிட்டிலோ போகாது. பங்குச்சந்தையில் ரிஸ்க்கும் உண்டு. ரிவார்டும் உண்டு.

ரிஸ்க்கைக் குறைத்து ரிவார்டை அதிகப்படுத்த ஏதும் வழிகள் உள்ளனவா?

அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.