Published:Updated:

காலாண்டு முடிவுகளால் பங்கின் விலை உயரும்போது என்ன செய்ய வேண்டும்? #SmartInvestorIn100Days நாள்-76

காலாண்டு முடிவுகளால் பங்கின் விலை உயரும்
காலாண்டு முடிவுகளால் பங்கின் விலை உயரும்

காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளிவருகிறபோது அதன் விலைகள் மீண்டும் உயரும் என்று ஒருவர் எண்ணினால், அவர் என்ன செய்யலாம்?

பியூச்சர்ஸ் மார்க்கெட்டில் ’லாட் சைஸ்’ அதிகம் என்று பார்த்தோம். ஆனாலும், மக்கள் அந்த வர்த்தகத்திலும் ஈடுபட காரணம் இருக்கிறது. முதல் காரணம், வாங்குவதற்கும் விற்பதற்கும் கேஷ் மார்க்கெட்டில் செய்வதைப்போல முழு தொகையும் தேவையில்லை.

ஆமாம். 500 ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் வாங்க ஏழரை லட்ச ரூபாய் தேவையில்லை. அந்த மொத்த தொகையில் ஒரு பகுதியை மட்டும் மார்ஜின் பணமாகக் கொடுத்தால் போதும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி? #SmartInvestorIn100Days -43

உதாரணத்துக்கு ரிலையன்ஸ் பங்கு அதிகமாக விலை இறங்கிவிட்டது. அடுத்த காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளிவருகிறபோது அதன் விலைகள் மீண்டும் உயரும் என்று ஒருவர் எண்ணினால், அவர் என்ன செய்யலாம்?

அவர் அப்படி உறுதியாக நம்பினால், அவரால் இயன்ற அளவு எண்ணிக்கையில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளை கேஷ் மார்க்கெட்டில் வாங்கி வைத்துக்கொள்ளலாம். அவரிடம் 6.1.2020 நிலவரப்படி 1,33,000 ரூபாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவரால் சுமார் 88 பங்குகள் வாங்க முடியும்.

பங்கின் விலை ஏற்றம்
பங்கின் விலை ஏற்றம்

அவர் எதிர்பார்த்தபடி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 30 ரூபாய் உயர்ந்துவிட்டது என்றும் வைத்துக்கொள்வோம். அந்த நேரம், அவர் விற்று லாபத்தைப் பதிவு செய்துகொள்ள நினைக்கிறார்; விற்றுவிடுகிறார். அவர் வாங்கி வைத்திருந்த 88 பங்குகளுக்கு, பங்கு ஒன்றுக்கு 30 ரூபாய் வீதம் 2,640 ரூபாய் லாபம்.

இது கேஷ் மார்கெட்டில்... அதனால்தான் அவரால் 88 என்பது போன்ற எண்ணிக்கையில் வாங்க முடிகிறது, விற்க முடிகிறது. மொத்தப் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

அதற்குப் பதிலாக, அதே கணக்கு மற்றும் எதிர்பார்ப்புடன் அவர் அதே 1,33,000 பணத்தை ’மார்ஜின் பணம்’ ஆகக் கட்டினால் அவரால் பியூச்சர்ஸ் மார்க்கெட்டில், ஒரு லாட், அதாவது 500 ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் வாங்க முடியும்.

மார்ஜின் மட்டுமே கட்டியிருப்பதால், அவர், `டிமேட்’ கணக்குக்கு பங்குகள் வராது. ஆனால், 500 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் வாங்கிய கான்ட்ராக்ட் அவருக்கு வரும். பின்பு அவர் அதை விற்கலாம். முன்பு பார்த்தது போலவே அவர் 30 ரூபாய் லாபம் வரும்போது விற்றால், 500 கொண்ட லாட்டுக்கு அவருடைய லாபம் 15,000 ரூபாய்.
சந்தை
சந்தை

அவர் கட்டிய மார்ஜின் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். லாபம் 15,000 ரூபாயும் கிடைக்கும். ஒரே அளவு முதல் பணத்தை வைத்துக்கொண்டு கூடுதல் பணத்துக்கு வர்த்தகம் செய்ய அனுமதிப்பதுதான் பியூச்சர்ஸ்.

அட! நன்றாக இருக்கிறதே என்று அவசரப்பட்டுவிடாதீர்கள். எதிர்பார்த்ததைப்போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை உயர்ந்தால், இப்படி லாபம். மாறாக விலை 30 ரூபாய் குறைந்தால்? கேஷ் மார்க்கெட்டில் வாங்கியவருக்கு நஷ்டம் 2,640 ரூபாய். பியூச்சர்ஸில் வாங்கியவருக்கு 15,000 ரூபாய் நஷ்டம்.

பியூச்சர் மார்க்கெட்டில் MRF நிறுவனத்தின் லாட் சைஸ் என்ன தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-75

மேலும் கேஷ் மார்க்கெட்டில் வாங்கியவர் விற்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இந்தக் காலாண்டில், நிதி நிலை இல்லாவிட்டால் அடுத்த காலாண்டு நிதிநிலை வரை பொறுத்திருக்கலாம் அவர் முடிவு செய்தால் யாரும் தடுக்க முடியாது.

சென்செக்ஸ் உயர்வு
சென்செக்ஸ் உயர்வு

ஆனால், பியூச்சர்ஸில் அப்படியில்லை. கால வரையறை உண்டு. வாங்கிய பங்கை, குறிப்பிட்ட நாள்களுக்குள் விற்க வேண்டும். விற்றுவிட்டு வேறு வாங்கிக்கொள்ளலாம். ஆனால், வாங்கியிருந்தால் குறிப்பிட்ட நாள்களுக்குள் விற்க வேண்டும்.

பியூச்சர்ஸ் மார்க்கெட்!
பியூச்சர்ஸ் மார்க்கெட்டில் வாங்கவோ விற்கவோ ஆர்டர் போடும்போது எந்த மாத கானன்ட்ராக்ட் என்று சொல்லிப் போட வேண்டும்.
டிரேட் செய்ய பொருத்தமான பங்குகளின் இரண்டு லட்சணங்கள்! #SmartInvestorIn100Days நாள்-74

இப்போது நடப்பது ஜனவரி மாதம் அல்லவா! இப்போது கான்ட்ராக்ட் போடுவது என்றால், ஜனவரி அல்லது பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் ஏதாவது ஒன்றில் வாங்கலாம், விற்கலாம்.

பியூச்சர்ஸ் மார்க்கெட்டில் குறிப்பிட்ட நாள்களுக்குள் வாங்கியிருந்தால் விற்க வேண்டும். ஏன்... எதற்காக... என்பதை நாளை பார்க்கலாம்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

அடுத்த கட்டுரைக்கு