Published:Updated:

பங்குச் சந்தை: வரியை மிச்சம் செய்ய வழி... எப்போது பங்கு வாங்கலாம்? #SmartinvestorIn100Days நாள் - 86

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

பங்குகளையோ, பங்குகள் தொடர்பான பரஸ்பர நிதிகளையோ 12 மாதங்கள் வைத்திருந்துவிட்டு விற்றால், அதில் லாபம் கிடைத்தால், அந்த லாபத்தில் 10 சதவிகிதத் தொகையை கேப்பிட்டல் கெயின்ஸ் டேக்ஸாகக் கட்ட வேண்டும்.

"நான் 1,360 ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பங்குகளை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருக்கிறேன். அவற்றின் சராசரி அடக்கவிலை 200 ரூபாய். இவற்றை, நான் வரும் மார்ச் 31-க்குள் விற்றால், கேப்பிட்டல் கெயின்ஸ் டேக்ஸ் கட்ட வேண்டுமா... எவ்வளவு கட்ட வேண்டும்?" என்று வாசகர் எம். என். சுவாமி கேட்டிருக்கிறார்.

ஓராண்டுக்கு மேல் வைத்திருந்துவிட்டு விற்றால், ஒரு லட்ச ரூபாய் வரையிலான லாபத்திற்கு கேப்பிட்டல் கெயின்ஸ் டேக்ஸ் கிடையாது. அதற்கு மேல் உள்ள தொகைக்கு, 10 சதவிகித வரி என்பது தற்சமயம் நடப்பில் இருக்கிற சட்டம்.

State Bank of India
State Bank of India

அடக்க விலை என்பது 200 ரூபாய் என்று சொல்லும்போது, சராசரி என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால், வெவ்வேறு விலைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் வாங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வரி கணக்கிடும்போது... வாங்கியது எப்போது, என்ன விலையில் வாங்கினீர்கள்... என்று ஒவ்வொரு வாங்குதலையும் (பர்சேஸ்) கணக்கிடுவார்கள். அதே போன்றதுதான் விற்கும்போதும். முதலில் வாங்கியதை, முதலில் விற்றதாகக் கணக்கெடுப்பார்கள். ஆக, இதில் சராசரி விலை என்பதைக் கணக்கில் எடுக்க மாட்டார்கள்.

மேலும், சமீபத்தில் செய்திருக்கும் ஒரு மாறுதல்படி, 31 மார்ச் 2018 வரையிலான கேப்பிட்டல் கெயின்ஸ் (லாபம்) மொத்தத்திற்கும் வரி இல்லை. இதை கிராண்ஃபாதர்டு (Granfathered) என்கிறார்கள். எனவே, உங்கள் பங்குகளின் வாங்கிய விலையைக் கணக்கிடும்போது, 31.3.2018-க்குப் பிந்தைய சந்தை விலைக்கு வாங்கியதுபோலத்தான் கணக்கிடுவார்கள். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பங்கு விலை 2018 மார்ச் 28 அன்று, கிட்டத்தட்ட 248 ரூபாய் அருகில் இருந்திருக்கிறது. அதனால், அதற்குமேல் கிடைக்கும் லாபம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

சார்ட்டை வைத்து பங்கு விலைநகர்வை முன்கூட்டி கணிக்க முடியுமா? #SmartInvestorIn100Days நாள் - 84

தோராயமாகக் கணக்கிட்டால், தற்போதைய விலையான 318ல் விற்பதாக இருந்தால், பங்கு ஒன்றுக்கு 70 ரூபாய் வீதம், 1,360 பங்குகளுக்கு 95,200 ரூபாய் லாபம் வருகிறது. லட்ச ரூபாய் வரை வரி இல்லை. எனவே வரி இல்லை.

இவையெல்லாம் என்னுடைய புரிதல்கள். வரி தொடர்பானது என்பதால், இவை குறித்த விவரங்களை ஆடிட்டர்களிடம் கேட்பதே சரியானதாக இருக்கும்.

வரப்போகிற பட்ஜெட், பங்குச் சந்தையை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் தெரியுமா? #Smartinvestorin100days நாள்- 85
 Income tax
Income tax
அடுத்து, "எந்தெந்த வகையில் கேப்பிட்டல் கெயின் டேக்ஸ் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம்?" என்று வாசகர் அனந்த குமார் கேட்டிருக்கிறார்.

பங்குகளையோ பங்குகள் தொடர்பான பரஸ்பர நிதிகளையோ 12 மாதங்கள் வைத்திருந்துவிட்டு விற்றால், அதில் லாபம் கிடைத்தால், அந்த லாபத்தில் 10 சதவிகிதத் தொகையை கேப்பிடல் கெயின்ஸ் டேக்ஸாகக் கட்ட வேண்டும்.

இந்த வரியைத் தவிர்ப்பதற்கான மிக எளிய வழி, ஓராண்டிற்குப் பின் விற்பதுதான். ஒரு லட்ச ரூபாய் வரையிலான தொகைக்கு வரி இல்லை என்கிற சலுகை, ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படுகிறது. அதனால், கையில் இருக்கும் பங்குகளின் வாங்கிய தேதிகளைக் கவனித்து, ஒவ்வோர் ஆண்டும் லட்ச ருபாய் அளவில் லாபங்களைப் பதிவுசெய்வது மற்றொரு வழி.

தவிர, குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதன் மூலம், ஒன்றுக்கு மேற்பட்ட லட்ச ரூபாய்களுக்கு வரி விலக்கு பெறலாம்.

சார்ட்டை வைத்து பங்கு விலைநகர்வை முன்கூட்டி கணிக்க முடியுமா? #SmartInvestorIn100Days நாள் - 84
"ஒரு பங்கை வாங்கி சேர்க்க விரும்புகிறேன். மாதாமாதம் 5,000 ரூபாய்க்கு ஒரு தேதியில் வாங்குவது அல்லது மாதாமாதம் Support விலையில் வாங்குவது அல்லது ஆண்டின் குறைந்த விலையில் வாங்குவது, இவற்றில் எது சிறந்தது? இவை அல்லாமல் வேறு சிறந்த முறை இருந்தாலும் சொல்லுங்கள்" என்று ஜானு கேட்டிருக்கிறார்.

குறிப்பிட்ட தேதியில் வாங்கும் முறைக்கும் நீங்கள் கேட்கும் ஏனைய முறைகளுக்கும் உள்ள வேறுபாடு, குறிப்பிட்ட தேதி முறையில், வாங்கவேண்டிய தேதியை நிறுவனத்திடம் நாம் முன்கூட்டி தெரிவித்துவிடுவதால், அது கட்டாயம் வாங்கப்படும். மற்ற முறைகளில் வாங்க நாம் சந்தையைக் கவனிக்க வேண்டும். இதுதான் சப்போர்ட் விலை. இதுதான் ஆண்டின் குறைந்த விலை என்பதையெல்லாம் சரியாகக் கணக்கிட, கணிக்க, யூகிக்க வேண்டும். அங்கே தவறுகள் நிகழலாம்.

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

’குறிப்பிட்ட தேதி’ என்பதில் ஒரு ‘ ரேண்டம்னெஸ்’ இருக்கிறது. குறைவான விலையும் கிடைக்கும், கூடுதல் விலையும் கிடைக்கும்.

அந்த குறிப்பிட்ட தேதியைத் தேர்வுசெய்வதில், மாத ஆரம்பம், நடு, கடைசி என்பதுபோல ஆராய்ந்து முடிவுக்கு வரலாம்.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

அடுத்த கட்டுரைக்கு