Published:Updated:

பங்கின் விலை ஏறுவதும் இறங்குவதும் எதன் அடிப்படையில் தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-56

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

வேல்யுவேஷன் வைத்துதான் ஒரு பங்குக்கு இவ்வளவு வரை விலை கொடுக்கலாம் என்று முடிவுசெய்வார்கள். இந்த வேல்யுவேஷன் எப்படி கொடுக்கப்படுகிறது?

கடைக்குப் போகிறோம், ஒரு சட்டை அல்லது ஒரு பொருளைப் பார்க்கிறோம். நன்றாக இருக்கிறது. வாங்க நினைக்கிறோம், விலை கேட்கிறோம். என்ன விலையாக இருந்தாலும் வாங்கிவிடுவோமா?

செகண்ட் ஹாண்ட் வண்டி அல்லது வீடு விலை கேட்கிறோம். என்ன விலையானாலும் கொடுப்போமா? ஒருவர் திறமையானவர், நன்கு வேலை செய்யக்கூடியவர். அவர் கேட்கும் சம்பளம் எதுவானாலும் கொடுக்க ஒப்புக்கொள்வார்களா?

எல்லா இடங்களிலும் ஒரே அணுகுமுறைதான். குறிப்பிட்ட அளவு வரை சரி. அதற்குமேல், ம்ஹூம்தானே!

பங்குச்சந்தையிலும் பங்கு விலைகளிலும் அதே அணுகுமுறைதான் சரி. ஆனால், பொருள்களுக்கு விலை சொல்லப்படுவதுபோல பங்குகளுக்கு சொல்லப்படாது. பங்கின் விலைகள் தினசரி மாறும். தொடர்ந்து உயரும். தொடர்ந்து இறங்கும். சிலர் வாங்கலாம் என்பார்கள், சிலர் விற்றுவிட வேண்டும் என்று பரிந்துரைகள் சொல்வார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இப்போது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 1,573 ரூபாய். இதேபங்கு, ஓர் ஆண்டுக்கு முன்பு 1150 ரூபாய். அப்போது சிலர், ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு இதற்கு மேலும் வேல்யூ இருக்கும் பங்கு. வாங்கலாம் என்று வாங்கியிருப்பார்கள். அது, அவர்கள் கணிப்பு. வேல்யுவேஷன் குறித்த கணிப்பு. அப்படிப் பரிந்துரை செய்த புரோக்கிங் நிறுவனங்கள் உண்டு. அந்தக் கணிப்புகள் சரியாகியிருக்கின்றன.

அதுசரி, வேல்யுவேஷன் என்று சொன்னீர்களே, அது என்ன என்று கேட்கத் தோன்றுகிறதா? வேல்யுவேஷன் என்றால் `கொடுக்கப்படும் மதிப்பு’ என்று சொல்லலாம்.

share Market
share Market

மதிப்பு எவற்றைப் பொருத்தது?

· நிறுவனம் என்ன சம்பாதிக்கிறது? (ஏர்னிங்ஸ்)

· சம்பாதிப்பதில் எவ்வளவை பங்குதாரர்களுக்கு பிரித்துக்கொடுக்கிறது? (டிஸ்ட்ரிபியூஷன்- டிவிடெண்ட், போனஸ் பங்குகள்)

· பங்கு இப்போது என்ன விலை விற்கிறது/ என்ன விலைக்கு வர்த்தகமாகிறது? (கரன்ட் பிரைஸ்)

· ஒரு பங்கிற்குக் கிடைக்கும் சம்பாத்தியம் எவ்வளவு? ஏர்னிங்ஸ் பெர் ஷேர்-EPS)

· ஒரு பங்கிற்கு நிறுவனம் ஈட்டும் லாபம் போல எத்தனை மடங்கு அந்தப் பங்கின் சந்தை விலை இருக்கிறது? (PE Multiple, PE Ratio)

· நிறுவனத்தின் வருங்கால சம்பாத்யம் எப்படி இருக்கும்? (ஃபியூச்சர் ஏர்னிங்ஸ்)

· வருங்காலத்தில் ஒரு பங்கிற்கு கிடைக்கும் சம்பாத்யம் எவ்வளவு இருக்கும்? (ஃபியூச்சர் ஏர்னிங்ஸ் பெர் ஷேர்- Future EPS)

· ஃபியூச்சர் ஏர்னிங்ஸ் பெர் ஷேர்- Future EPS போல எத்தனை மடங்கு அந்தப் பங்கின் சந்தை விலை இப்போது இருக்கிறது? (Forward PE Multiple , Forward PE Ratio) PE.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவற்றை எல்லாம் வைத்துதான் ஒரு பங்குக்கு இவ்வளவு வரை விலை கொடுக்கலாம் என்று முடிவுசெய்வார்கள். இது ஒரே ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் செய்யும் முடிவல்ல. அந்த முடிவு யாரையும் கட்டுப்படுத்தாது. ஆளாளுக்கு, நிறுவனத்துக்கு நிறுவனம் அவர்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் மற்றும் கணிப்புகள், எதிர்பார்ப்புகள் அடிப்படையில் முடிவு செய்வார்கள். அவர்களின் கணிப்பு சரியாகவும் வரலாம்,. தவறாகவும் போகலாம். அவர்களை யாரும் பொறுப்பு சொல்ல முடியாது.

Share Price
Share Price

மேலே பார்த்த எட்டு அம்சங்களும் ஒன்றுபோல இருந்தாலும், முன்பு பார்த்த நல்ல பங்குகள் குறித்த ஐந்து லட்சணங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் வேல்யுவேஷன் முடிவு செய்வார்கள். முக்கியமாக, மேனேஜ்மென்ட் எப்படி, நம்பத்தகுந்ததா, நேர்மையானதா, சரியான தகவல்களைத்தான் தெரிவிக்குமா என எல்லாம் பார்ப்பார்கள்.

மாடு வாங்குகிறவர், அதன் வயது, இனம், கனம், எவ்வளவு பால் கொடுக்கும், அதற்கு ஏதும் நோய்கள் இருக்கின்றனவா வைத்திருந்தவர் யார் என்றெல்லாம் பார்த்து விலை முடிவு செய்வது போலத்தான். அங்கே, பசுமாட்டுக்கு வேல்யுவேஷன். இங்கே, பங்குக்கு வேல்யுவேஷன்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.