Published:Updated:

ஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்! #SmartInvestorIn100Days - நாள் 9

SmartInvestorIn100Days

இந்தப் பெரிய, ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் ஒரு செய்தியை உரக்கச் சொல்கிறது.

ஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்! #SmartInvestorIn100Days - நாள் 9

இந்தப் பெரிய, ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் ஒரு செய்தியை உரக்கச் சொல்கிறது.

Published:Updated:
SmartInvestorIn100Days

நேற்றுடன் முடிவடைந்த ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு மிகப் பிரமாதமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. மொத்தம் 2,01,60,000 பங்குகள் வெளியிடப்பட்டன. ஆனால், 'எங்களுக்குத் தாருங்கள்' என்று கேட்டு வந்திருக்கும் விண்ணப்பங்களோ மொத்தம் 225.6 கோடி பங்குகளுக்கு!

நாம் முன்பு தெரிவித்திருந்தபடி, இது ஓவர் சப்ஸ்கிரைப் ஆகியிருக்கிறது. ஆனால், எவருமே எதிர்பாராத அளவில், மிகப்பெரிய அளவில் ஓவர் சப்ஸ்கிரைப் ஆகியிருக்கிறது. மிகப்பெரிய அளவில் என்றால், வெளியிடப்பட்டதைப்போல 112 மடங்கு ஓவர் சப்ஸ்கிரிப்ஷன். அதுவும் பங்குச்சந்தை மந்தமாக, இறங்கு முகத்தில் இருக்கும் இந்த நேரத்தில்! அரசு அதன் வசம் இருக்கும் பங்குகளை இப்படி வெளியிட்டபோது கிடைக்கும் வரவேற்புகளிலேயே இது மிக அதிகம் என்கிறார்கள்.

Share Market
Share Market

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுபோன்ற நேரத்தில், சில பதங்களை, பங்குச் சந்தை பிரயோகங்களை விளக்குவது சுலபம். மொத்த வெளியீட்டில், சிறுமுதலீட்டாளர்களுக்கு 70 லட்சம் பங்குகள் (35%) ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை முன்பே குறிபிட்டிருந்தோம். அந்தப் பகுதியில் வந்திருக்கும் பணம் மட்டும் ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு ஆகக்கூடிய தொகையைப்போல 14.88 மடங்கு. சிலருக்கு சந்தேகம் வந்திருக்கலாம். எவர் சிறு முதலீட்டாளர், எவர் சிறு முதலீட்டாளர் இல்லை? அப்படி ஏதும் பாகுபாடுகள் இருக்கின்றனவா. அப்படியென்றால் நான் எந்தப் பகுதியில் வருகிறேன்? என்பதுபோல.

செபி (SEBI) என்று அழைக்கப்படும் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவின் வழிகாட்டுதல்படி, விண்ணப்பதாரர்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறார்கள். முதல் பகுதியினர், குவாலிஃபைடு இன்ஸ்டிடியூஷனல் பையர்ஸ் (QIBs). அதாவது தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள். இதில் அந்நியநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் (FIIs), இந்திய உள்நாட்டு நிறுவனங்கள் (DIIs), பரஸ்பர நிதிகள் (Mutual Funds) போன்ற அமைப்புகள் எல்லாம் வரும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டாவது பகுதி, ’நான்-இன்ஸ்டிடியூஷனல் இன்வெஸ்டார்ஸ்’ (NIIs). இதில் வருபவர்கள், ஹெச்.என்.ஐ. (ஹை நெட் ஒர்த் இண்டிவிஜுவல்ஸ்-HNI ) மட்டுமே. அதிக பணம் இருக்கும் செல்வந்தர்கள். மூன்றாவது பகுதி, ரீடெய்ல் இன்வெஸ்டர் என்று சொல்லப்படுகிற சிறு முதலீட்டாளர்கள். எவரெல்லாம், 2 லட்சம் அல்லது அதற்கு குறைவான தொகைக்கு விண்ணப்பிக்கிறார்களோ, அவர்களெல்லாம் சிறு முதலீட்டாளர்கள். அதற்கு மேற்பட்ட தொகைக்கு விண்ணப்பிக்கிறவர்கள் எல்லாம் ஹெச்.என்.ஐ வகையினராகக் கருதப்படுவர்.

ஒரு நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் பங்கு வெளியிடும்போது, வெளியிடும் மொத்தப் பங்குகளையும் இந்த மூன்று பகுதிக்கும் இவ்வளவு என்று தனித்தனியே ஒதுக்கீடு செய்து வெளியிட வேண்டும். அந்தந்தப் பகுதிக்கு வரும் பங்குகளுக்கான கோரிக்கையின் அடிப்படையில் அந்த அந்தப் பகுதியில் யாருக்கு எவ்வளவு என்பன முடிவு செய்யப்படும். அப்படிச் செய்வதன் பெயர் அலாட்மென்ட்.

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

உதாரணத்துக்கு முதல் பகுதியான தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது 1 கோடி பங்குகள். வந்திருக்கும் விண்ணப்பங்களோ 108.79 கோடி பங்குகளுக்கு. அப்படியென்றால் விண்ணப்பங்களில் இருந்து 108-க்கு ஒன்று என்ற விகிதாசாரத்தில் ஒதுக்கீடு இருக்கும். உதாரணத்துக்கு, ஒரு பரஸ்பர நிதி 108, ஆயிரம் பங்குகளுக்கு விண்ணப்பித்திருந்தால், அந்த நிறுவனத்துக்கு, 108-க்கு ஒன்று என்ற விகிதத்தில் 1000 பங்குகள் வழங்கப்படும்.

சிறு முதலீட்டளர்களுக்கு அலாட் செய்யும் முறையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஒருவர் அதிகபட்சமாக 2 லட்ச ரூபாய்க்கு முதலீடு செய்யலாம் என்றிருந்தாலும், ஐ.பி.ஓ.வில் எவரெல்லாம் குறைந்தபட்சத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி-யில் 40 பங்களுக்கு மட்டும்) விண்ணப்பித்திருந்தார்களோ அவர்களில் அதிக எண்ணிக்கையிலானோருக்கு வழங்கும் விதமாக முதலில் அலாட்மென்ட் செய்வார்கள். அதிலும் போட்டி இருந்தால் கம்ப்யூட்டர் முறையில் லாட் போட்டு எடுப்பார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் அதன் ஐ.பி.ஓ வெளியீட்டில் நான்காவதாக ஒரு பகுதியினருக்கும் தனி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அது அந்நிறுவனத்தின் ஊழியர்கள். அந்தப் பகுதிக்கு என, ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம், 1.6 லட்சம் பங்குகளை ஒதுக்கீடு செய்திருக்கிறது. அந்தப் பகுதியில் வந்த விண்ணப்பங்கள், ஒதுக்கப்பட்டதைப்போல 5.84 மடங்கு. ஆக, அங்கும் லாட்தான் போட வேண்டியிருக்கும்.

பெரும்பாலும் சிறுமுதலீட்டாளர் (Retail Investors) பகுதிக்கு வெளியிடுவதில் 35 சதவிகிதமும், நான்-இன்ஸ்டிடியூஷனல் இன்வெஸ்டார்ஸ் (NIIs) பகுதிக்கு 15 சதவிகிதமும், தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் (QIBs) பகுதிக்கு 50 சதவிகிதமும் ஒதுக்குவது வழக்கம். ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் செய்த ஐபி.ஓவில், தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பகுதிக்கு 108.79 மடங்குக்கும், நான்-இன்ஸ்டிடியூஷனல் இன்வெஸ்டார்ஸ் பகுதிக்கு 354.52 மடங்குக்கும், சிறுமுதலீட்டாளர் பகுதிக்கு 14.88 மடங்குக்கும், ஊழியர் பகுதிக்கு 5.84 மடங்குக்கும் விண்ணப்பங்கள் போயிருக்கின்றன.

Source: Axis Capital
Source: Axis Capital

இந்தப் பெரிய, ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் ஒரு செய்தியை உரக்கச் சொல்கிறது.

அந்தச் செய்தி, இந்தப் பங்கு, வெளியிடப்பட்டதைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு லிஸ்ட்டிங் ஆகும். தவிர, லிஸ்ட் செய்யப்பட்ட பின்பும் விலை உயரும் வாய்ப்பிருக்கிறது என்பதுதான்.

பலரும் வாங்க நினைக்கும், வாங்கி வைத்துக்கொள்ள விரும்பும் பங்கு இது. அலாட்மென்டில் இந்தப் பங்கு கிடைக்காவிட்டால், பின்னர் அவர்களில் பெரும்பானானோர் அந்தப் பங்கை சந்தையில் வாங்க முயல்வார்கள். அதனால் அதன் விலை உயரும் வாய்ப்பு இருக்கிறது.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism