Published:Updated:

பங்குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா? #SmartInvestorIn100days - நாள்-16

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

சீட்டுக்கட்டு விளையாட ஆரம்பித்தவர், காசு வைத்து விளையாட ஆரம்பித்தவர், எவ்வளவு பணம் தோற்றாலும் ஆடுவதை நிறுத்துவாரா? அந்த ஆட்டம் அவரை விடுமா? இழுக்கும்.

`இன்ட்ரா டே’ வர்த்தகத்தை வெற்றிகரமாக செய்வது எப்படி என்று கேட்டால் பதில் சொல்லலாம். ஆனால், உங்களால் வெற்றிகரமாக, லாபகரமாக இன்ட்ரா-டே டிரேடிங்கை செய்ய முடிகிறதா என்று கேட்டால் நான் சொல்லும் பதில், `இல்லை. என்னால் முடியவில்லை’ என்பதுதான்.

அதெப்படி, இப்படிச் செய்தால் லாபம் என்று சொல்ல முடியும். ஆனால், செய்யமுடியாது என்று சொல்கிறீர்களே... என நீங்கள் கேட்கலாம். ஆனால், அது அப்படித்தான்.

சில `தியரிட்டிகலி பாசிபிள்’. ஆனால், நடைமுறைக்கு ஒத்துவராது. கார், வண்டிகள் கொடுக்கக் கூடிய மைலேஜ் குறித்து கார் தயாரிக்கும் நிறுவனம் சொல்வதுபோலதான். எல்லாம் `ஐடியல் கண்டிஷன்’ களில் நடக்கும். மற்றபடி... ம்ஹூம்! இன்ட்ரா டே வர்த்தகத்தில் தொடர்ந்து லாபமும் அப்படித்தான். நிகரமாக லாபம் செய்துவிட்டு வெளியேற முடியாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட இயந்திரங்கள் வேண்டுமானால் செய்யும். அல்லது மிகக் கடுமையான பயிற்சிகள் வேண்டும். என்னால் லாபகரமாக செய்ய முடியவில்லை என்று சொல்லும்போது, எந்த டிரேடும் அப்படியே நஷ்டம்தான் என்பதில்லை. பத்து டிரேட் செய்தால், சிலவற்றில் லாபம் கிடைக்கும், சிலவற்றில் பணம் போகும். நிகரமாக நஷ்டம்தான் ஏற்படுகிறது.

பங்குச்சந்தை
பங்குச்சந்தை

2005-லிருந்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக பல்வேறு ஊர்களில், அமைப்புகளில் பங்குச்சந்தை குறித்த விழிப்புணர்வு கூட்டங்களில் பேசியிருக்கிறேன். கூட்டம் முடிந்த பின்னர் சந்திக்கிற பலர், அவர்களது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். சந்தேகங்கள் கேட்பார்கள்.

தவிர, நான் எழுதியிருக்கும் பங்குச்சந்தை குறித்த புத்தகங்களை படித்த வாசகர்கள் பலரும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்கிறார்கள். அவர்களது கதைகளைச் சொல்லி, ஆலோசனை கேட்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அனுபவங்களின் அடிப்படையில் சொல்கிறேன், `இன்ட்ரா டே’ வர்த்தகத்தில் பணம் செய்தவர்கள் மிகமிகக் குறைவு. விட்டவர்கள்தான் அதிகம்.

மேலும் இன்ட்ரா டே செய்பவர்களை `டே டிரேடர்’ கள் என்று அழைப்பார்கள். அந்த வர்த்தகம் விடாது. மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும்.

சீட்டுக்கட்டு விளையாட ஆரம்பித்தவர், காசு வைத்து விளையாட ஆரம்பித்தவர், எவ்வளவு பணம் தோற்றாலும், ஆடுவதை நிறுத்துவாரா? அந்த ஆட்டம் அவரை விடுமா? இழுக்கும்.

பங்குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா?
பங்குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா?

`டே டிரேடு'ம் அப்படித்தான்.

ஒரு நாளைக்கு பத்து `கான்ட்ராக்ட்’ போடுகிறவர்கள் சாதாரணம். காலையில் வந்ததும், இது அதுவென்று சிலவற்றை வாங்கிவிடுவார்கள். விலை ஏறினால் விற்பார்கள். இறங்கினாலும் விற்பார்கள். விட்டதை அடுத்ததில் பிடிக்க முயற்சிசெய்வார்கள்.

எடுத்தவுடன் ஷார்ட் போகிறவர்களும் உண்டு. அதிலும் லாபமோ நஷ்டமோ. நிச்சயம் அடுத்த டிரேட் செய்வார்கள். லாபம் கிடைத்தால், செய்தது சரிதான் என்கிற சந்தோஷத்தில். நஷ்டம் ஆகிவிட்டால், `அதெப்படி விடுவது? விட்டதை அடுத்த டிரேடில் பிடித்துவிட வேண்டும் என்கிற ஆதங்கத்தில்.

பங்குச்சந்தை
பங்குச்சந்தை

இதில் வேடிக்கை என்னவென்றால், இன்ட்ரா டே செய்பவர்கள் பலர் அவர்களது லாப நஷ்டக் கணக்கை துல்லியமாகப் பார்ப்பதில்லை. மேலோட்டமாகத்தான் அதுவும், என் போன்றோர் அவர்களிடம் வலிய விவரங்கள் கேட்கிறபோதுதான் விவரங்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கே அதன் அளவு மனதில் படுகிறது. மற்றபடி அடுத்தடுத்த டிரேட்களுக்குப் போய்விடுகிறார்கள். முடிந்ததை அவர்கள் ஆராய்வதில்லை.

பெரும்பாலான பங்கு தரகு நிறுவனங்களைப் பொறுத்தவரை, இவர்கள்தான் வியாபாரம் தருகிறவர்கள். ஒவ்வொரு டிரேடுக்கும் புரோக்கரேஜ்.

அரசுக்கும் இவர்கள்தான் பால் தரும் பசுக்கள். ஒவ்வொரு டிரேடுக்கும், வரி. செக்யூரிட்டி டிரான்சாக்‌ஷன் டேக்ஸ், ஜிஎஸ்டி வரி, டர்ன் ஓவர் டேக்ஸ், செபி டர்னோவர் பீ, ஸ்டாம்ப் டூட்டி என்று அதன் போக்கில் கம்ப்யூட்டர் போட்டுத்தள்ளி பிடித்துக்கொண்டு மீதம்தான் தரும். அல்லது கேட்கும்.

அடுத்தடுத்த அத்தியாயத்தில் இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.

முதல் போடலாம்!

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.