Published:Updated:

எஸ் பேங்கில் என் வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்குமா? #SmartInvestorIn100Days நாள்-13  

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

டெபாசிட்தாரர் ஒருவருக்கு அதிகபட்ச இன்ஷூரன்ஸ் தொகை, ஒரு லட்சம்தான் என்பதை வைத்துப் பார்க்கும்போது, ஒரே வங்கியில் வைப்புநிதி வைத்துக்கொள்வது என்பது ரிஸ்க்.

விலைகள் பிரமாதமாக உயர்ந்தும், பின்னர் கடுமையாக வீழ்ச்சி அடைந்த பல்வேறு பங்குகள் குறித்து முந்தைய பகுதிகளில் பார்த்தோம். மேலும், வந்திருக்கும்  சில கேள்விகள், அப்படிப்பட்ட பங்குகளை விலைகுறைந்திருக்கும் இந்த நேரத்தில் வாங்கலாமா... வாங்கிச் சேர்க்கலாமா என்பதுபோல இருக்கின்றன.

அதே நேரத்தில், மணிகண்டன், பாலாஜி முருகேசன், சந்திரா துளசி போன்ற சிலர், அதிக விலைகளில் வாங்கி வைத்திருக்கும் பங்குகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவற்றை வைத்திருப்பதா, விற்றுவிடுவதா என்றும் கேட்கிறார்கள்.

அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு முன், அவசரமாகப் பதில் சொல்லவேண்டிய ஒரு கேள்வியும் இருக்கிறது. அது, சேகரனுடையது.

Yes Bank
Yes Bank

எஸ் பேங்கில் என் வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்குமா?

இதே சந்தேகம் பலருக்கும் இருக்கலாம் என்பதால், இதற்கு முன்னுரிமை.

பங்குச் சந்தையின் கண்காணிப்பு ஆணையம், செபி (SEBI). வங்கிகளின் கண்காணிப்பு ஆணையம் ரிசர்வ் வங்கி. இரண்டும் வேறு வேறு அமைப்புகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எஸ் பேங்கில் இப்போது நடந்துகொண்டிருக்கும் பிரச்னை, வங்கியின் முதல் (கேப்பிடல்) தொடர்பான விஷயம். அதனால்தான், அந்நிறுவனத்தின் பங்குகள் இந்தப் பாடு படுகின்றன. இந்தப் பிரச்னையால், நேரடியாக வங்கியில் இருக்கும் வைப்புகளுக்கு சிக்கல் ஏதும் கிடையாது. அப்படி ஏதாவது சிக்கல் என்றால், ரிசர்வ் வங்கியின் ஆய்வுகளில் அது தெரியவரும். ரிசர்வ் வங்கி விடாது; விடக்கூடாது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனால், எந்த வங்கியும் வாடிக்கையாளர்களிடம் பெற்று வைத்திருக்கும் வைப்பு நிதிகளை வெளியாட்களுக்கு, நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்துத்தான் வியாபாரமும் லாபமும் செய்யமுடியும்; செய்கின்றன. அப்படிக் கொடுக்கும் கடன்கள், வாராக் கடன்கள் ஆகிவிட்டால், வங்கி சிரமத்துக்குள்ளாகும். பெரிய அளவில் சிக்கல் என்றால், வங்கியில் போடப்பட்டிருக்கும் வைப்புகளுக்கும் அந்தச் சிக்கல் பரவலாம்.

எஸ் வங்கியில் அப்படி ஏதும் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை. வராது என்று நம்மால் சொல்ல முடியாது. காரணம் நமக்குத் தெரியாது. அப்படி ஏதேனும் ஒன்று ஆகிவிட்டால், வங்கியில் டெபாசிட் போட்டவர்களுக்கு அவர்களுடைய டெப்பாசிட் பணம் திரும்பக் கிடைக்குமா?

வைப்பு நிதி
வைப்பு நிதி

தற்போதைய சட்டங்களின்படி, வங்கியில் ஒருவர் பெயரில் போடப்படும் டெபாசிட்டுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய்க்கு வங்கிகள் Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) -னிடம் காப்பீடு எடுக்க வேண்டும். அதற்கு பிரீமியம் கட்டவேண்டும். DICGC அமைப்பு, மத்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் அதன் சப்சிடரி அமைப்புகளில் ஒன்று. 1961-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வங்கியால் டெபாசிட்தாரருக்கு அவருடைய டெபாசிட் பணத்தைத் திருப்பித்தர முடியாமல் போனால், ஃபார்மாலிட்டிகளுக்குப் பிறகு, ஒருவருக்கு அவர் போட்டிருந்த தொகை அல்லது ஒரு லட்சம், இரண்டில் எது குறைவோ, அது DICGC யிடம் இருந்து கிடைக்கும். ஃபார்மாலிட்டிகள் முடிந்து பணம் கைக்கு வர சிறிது காலமாகலாம். இந்தியாவில் இயங்கும் எந்த வங்கியானாலும் இதுதான் அளவு.

வைப்பு நிதி
வைப்பு நிதி
1968-ம் ஆண்டு 5,000 ரூபாயாக இருந்த இந்த இழப்பீட்டுத் தொகை, 1993-ல் ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பின் கடந்த 26 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படவில்லை.

தவிர, பிறநாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த காப்பீட்டுத் தொகை மிகவும் குறைவு. உதாரணத்திற்கு, பிரேசில் நாட்டில் இது 42 லட்சம் ரூபாய்க்கு இணையான பணம். ரஷ்யாவில் ரூ.12 லட்சத்துக்கு இணையான ரூபிள். இந்தியாவில், இந்தத் தொகையை நிச்சயம் உயர்த்தப்பட வேண்டும்.

இதுகுறித்த பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றமும், இந்தத் தொகை போதுமா என்று கேட்டதற்கு, DICGC, ஒரு லட்சம் என்பது உடனடி நிவாரணம்தான் என்று பதில் சொல்லியிருக்கிறது. மேலதிக விவரம் தெரியவில்லை.

டெபாசிட்தாரர் ஒருவருக்கு அதிகபட்ச இன்ஷூரன்ஸ் தொகை ஒரு லட்சம்தான் என்பதை வைத்துப் பார்க்கும்போது, ஒரே வங்கியில் மொத்தப் பணத்தையும் டெபாசிட் செய்வது என்பது ரிஸ்க். இரண்டாவது, ஒருவர் பெயரிலேயே எல்லா டெபாசிட்டுகளையும் போடுவதும் ரிஸ்க். குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் பிரித்துப் போடுவது குறித்து வருமான வரி சட்டம் என்ன சொல்கிறது என்று ஆடிட்டர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதெல்லாம் வங்கியில் பிரச்னை வந்தால்தான். இந்தியாவில் 1960-ம் ஆண்டுக்கு முன் லக்‌ஷ்மி பேங்க் மற்றும் பலாய் சென்ட்ரல் பேங்க் ஆகிய இரண்டு வங்கிகள் கெட்டுப்போயின. அதனால்தான் DICGC உருவாக்கப்பட்டது.

அதன் பின்பு, 2004-ம் ஆண்டு வாக்கில் குளோபல் டிர்ஸ்ட் பேங்க் என்று ஒரு வங்கி இப்படி ஆகிவிடும் நிலைக்கு வந்தது. உடனே, ரிசர்வ் வங்கி தலையிட்டு, அந்த வங்கியை  ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்  வங்கியுடன் இணைத்து பிரச்னையைத் தவிர்த்தது. சுதந்திர இந்தியாவில், இதுவரை வங்கிகள் பெயிலியர் என்பது இல்லை.

வைப்பு நிதி
வைப்பு நிதி

சில கூட்டுறவு வங்கிகளில் இப்படி நடப்பதுண்டு. இப்போதுகூட மகாராஷ்டிராவைச் சேர்ந்த அர்பன் கூட்டுறவு வங்கியான பி.எம்.சி வங்கி சிரமத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியில் அதைப் பற்றி முன்னமே எழுதியிருக்கிறோம். ரிசர்வ் வங்கி தலையிட்டு டெபாசிட்தாரர்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறது. எல்லா வங்கிகளிலும் வட்டி, கால், அரை சதவிகிதங்கள் மட்டுமே வேறுபாடு எனும்போது, பல்வேறுவிதமான செய்திகளில் அடிபடும் எஸ் வங்கியில் இருக்கும் டெபாசிட்டுகளை, மற்ற சில வங்கிகளுக்கு மாற்றலாம். போஸ்ட் ஆபீஸ் டேர்ம் டெபாசிட்டுகளும் பாதுகாப்பானவை.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.