Published:Updated:

நடுத்தர மக்கள் பங்குச்சந்தையை தவிர்ப்பது சரியா? #SmartInvestorIn100Days நாள்-65

#SmartInvestorIn100Days

முதலீட்டு வருமானம் என்பது ஒரு மாந்தோட்டம். தரையில் கிடப்பவை எல்லாம் பாதுகாப்பான, அதேசமயம் குறைந்த வருமானம் தரும் முதலீடுகள். மரமேறிப் பறிப்பவை ரிஸ்க்கான முதலீடுகள். பங்குச்சந்தை முதலீடுகள் அவற்றில் ஒன்று.

நடுத்தர மக்கள் பங்குச்சந்தையை தவிர்ப்பது சரியா? #SmartInvestorIn100Days நாள்-65

முதலீட்டு வருமானம் என்பது ஒரு மாந்தோட்டம். தரையில் கிடப்பவை எல்லாம் பாதுகாப்பான, அதேசமயம் குறைந்த வருமானம் தரும் முதலீடுகள். மரமேறிப் பறிப்பவை ரிஸ்க்கான முதலீடுகள். பங்குச்சந்தை முதலீடுகள் அவற்றில் ஒன்று.

Published:Updated:
#SmartInvestorIn100Days

``நான் ஒரு வேலையில் இருக்கிறேன். என் சம்பளத்தில் சேமிக்கும் பணத்தை, அவ்வப்போது ஃபிக்சட் டெபாசிட் போன்றவற்றில் போட்டுவிடுகிறேன். கணிசமான பணம் சேர்ந்ததும், ஓர் இடம் அல்லது பிளாட் வாங்குகிறேன். எனக்கு பங்குச்சந்தை பற்றியெல்லாம் தெரியாது. அதுபற்றி, அவ்வப்போது கேள்விப்படும் செய்திகளும் அவ்வளவு சரியானதாக இல்லை. நான், பங்குச் சந்தையைத் தவிர்த்துவிடுவது சரியா... பங்குகளில் முதலீடுசெய்யாவிட்டால் பெரிய தவறாகிவிடுமா... பெரிய அளவில் எதையாவது இழக்கிறவனாகிவிடுவேனா?"

இப்படி பெரும்பாலான நடுத்தர மற்றும் அதற்கும் குறைவான வருமானம் பெறுவோரின் மன ஓட்டம் இருக்கலாம். அவர்களுக்குப் பதில் சொல்வது அவசியம்.

அவர்கள், தாராளமாக பங்குச்சந்தையைத் தவிர்த்துவிடலாம். வங்கி மற்றும் அஞ்சலக ஃபிக்சட் டெபாசிட்டுகள், வீடுகள், பிளாட்டுகள், இடங்கள் போன்றவை பாதுகாப்பானவை மற்றும் ஓரளவு வருமானமும் தருபவைதான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலீட்டு வருமானம் என்பது ஒரு மாந்தோட்டம். தரையில் கிடப்பவை எல்லாம் பாதுகாப்பான, அதேசமயம் குறைந்த வருமானம் தரும் முதலீடுகள். மரமேறிப் பறிப்பவை ரிஸ்க்கான முதலீடுகள். பங்குச்சந்தை முதலீடுகள் அவற்றில் ஒன்று.

மரம் ஏறத்தான் வேண்டும் என்று கட்டாயமில்லை. ஏறினால், பறித்தால் கூடுதல் பலன். விழுந்தால் அடி. தெரிந்துகொண்டு உள்ளே வரவேண்டும். செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒத்து வராவிட்டால் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

Shares
Shares

சிலருக்கு எத்தனை முறை விழுந்தாலும் புத்தி வராது. மீண்டும் மீண்டும் ஏறி விழுந்து சிரமப்படுவார்கள்.

இன்றைக்கு, வருமான வரிகளைப் பொறுத்தவரை பங்கு முதலீட்டுக்குக் கிடைக்கும் விலக்குகள், சலுகைகள் மிக அதிகம். இத்தனைக்கும் 2016 ம் ஆண்டுக்கும் முன்பு, இதற்கு வழங்கப்பட்ட சலுகைகள் இப்போது குறைக்கப்பட்டிருக்கின்றன. அதற்குமுன் இன்னும்கூட அதிகம் இருந்தன. ஆனால், குறைக்கப்பட்ட பின்னரும்கூட, பங்கு முதலீட்டிற்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் அதிகமே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலாவது, டிவிடெண்ட்டுகளுக்குக் கிடைக்கும் வரிச்சலுகை. வங்கி அஞ்சலக டெபாசிட்டுகள், டிபென்ச்சர்கள், பாண்டுகள் போன்றவற்றுக்கு வட்டி கிடைக்கும். சில குறிப்பிட்ட ஐந்தாண்டு டெபாசிட் மற்றும் `டேக்ஸ் ஃபிரீ பாண்டு’கள் தவிர, மற்ற அனைத்திற்கும் வருமான வரியில் எந்தச் சலுகையும் இல்லை. கிடைக்கிற வட்டி முழுவதும் பெறுபவரின் வருமானமாக கருதப்பட்டு, வரி விதிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு, ஒருவருக்கு ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய் வங்கி டெபாசிட்டுகளின் வட்டியாகக் கிடைத்தால், அதை அவர் வருமானமாகக் காட்டி, வரி கட்ட வேண்டும். `ஸ்டாண்டர்டு டிடெக்‌ஷன்’, உச்சவரம்புக்கு மேல் மற்றும் பிரிவு 80C போன்றவற்றைத் தாண்டி, அவருக்கு வருமானம் இருந்தால், இந்த வட்டி வருமானத்துக்கு அவர் அவருடைய வருமான வரி வரம்புப் படி வரி கட்ட வேண்டும்.

வரி சதவிகிதம், 5 அல்லது 20 அல்லது 30-ஆக இருக்கலாம். 6 லட்ச ரூபாய்க்கு, 5 சதவிகித வரி என்பது 30,000 ரூபாய். 20 சதவிகிதம் என்பது, 1,20,000. 30 சதவிகிதம் என்பது, ரூபாய் 1,80,000.

ஆனால், அதே அளவான ஆறு லட்ச ரூபாய், அவருக்கு பட்டியலிடப்பட்டிருக்கும் இந்திய நிறுவனங்கள் பங்குகளுக்கு தரும் டிவிடெண்டாக வந்தால், வருமான வரிச் சட்டம் பிரிவு 115 BBDA-ன் கீழ், அவர் ஒரு ரூபாய் கூட வரி கட்ட வேண்டாம். ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலான டிவிடெண்டுக்கு வருமான வரி கிடையாது.

Representational Image
Representational Image

மறைந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லிதான், அவர் நிதியமைச்சராக இருந்தபோது, 2016-ம் ஆண்டு முதல் 10 லட்ச ரூபாய்க்கு மேல் வரும் டிவிடெண்ட் வருமானத்திற்கு வருமான வரி என்று கொண்டுவந்தார். அதற்குமுன், எவ்வளவு டிவிடெண்ட் தொகை பெற்றாலும் அதற்கு வரி ஏதும் இல்லாமல் இருந்தது.

இது, 2019-20 நிதியாண்டு வரையிலும் இருக்கும் நிலை. இந்தச் சலுகை நிதியமைச்சரால் மாற்றப்படலாம். 2020- 21 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், எதிர்வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கிறது. நிதியமைச்சர் இதை மாற்றலாம்; மாற்றாமலும் போகலாம்.

- முதல் போடலாம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism