Published:Updated:

பியூச்சர் மார்க்கெட்டில் MRF நிறுவனத்தின் லாட் சைஸ் என்ன தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-75

பங்கை, குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில்தான் வாங்க முடியும் என்பதற்கு `மார்க்கெட் லாட்’ என்று பெயர்.

பியூச்சர் மார்க்கெட்
பியூச்சர் மார்க்கெட்

முதலீட்டுக்கு என்றில்லாத ஒரு விஷயம் பங்குச் சந்தையில் இருக்கிறதென்றால் அது, பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் விஷயம்தான். டிரேடிங் செய்வதற்கு என்றே உருவாக்கப்பட்டது என்றும் இதைச் சொல்லலாம். இந்த இரு வார்த்தைகளையும் சுருக்கமாக, `எப் & ஓ’ என்று குறிப்பிடுவார்கள்.

பியூச்சர்ஸ் என்பதும் ஆப்ஷன்ஸ் என்பதும் எப்போதும் சேர்த்தே F&O என்று குறிப்பிடப்பட்டாலும், அவை வெவ்வேறானவை. பியூச்சர்ஸ் என்பது ஒரு `வர்த்தகப் பொருள்’. ஆப்ஷன் என்பது மற்றொரு `வர்த்தகப் பொருள்’. தனித்தனியே வர்த்தகம் செய்யப்படுபவை. சில ஒற்றுமைகள் இருப்பதைப்போலவே, சில வேற்றுமைகளும் உண்டு.

டிரேட் செய்ய பொருத்தமான பங்குகளின் இரண்டு லட்சணங்கள்! #SmartInvestorIn100Days நாள்-74

முந்தைய அத்தியாயத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் குறித்துப் பார்த்தோம். அதை ஒரே ஒரு பங்குகூட வாங்கலாம். ஒன்றே ஒன்றைக் கூட விற்கலாம். வாங்கியதை, வாங்கிய வர்த்தக தினத்திலேயே விற்றுவிட்டால், அது இண்ட்ராடே வர்த்தகம்.

அன்றைக்கே விற்காவிட்டால், வாங்கிய பங்கு நமக்கு டெலிவரி வரும். நாம் அதற்குப் பணம் கொடுக்க வேண்டும். அந்தப் பங்கு, நம் `டி மேட்’ கணக்குக்கு வந்தபின், நாம் விற்கலாம். விற்ற பங்கை டெலிவரி கொடுக்க வேண்டும். அதன்பின் நமக்கு அதற்கான காசு வரும்.

ஒரு பங்கு விலை 1,500 ரூபாய். புரோக்ரேஜ் மற்றும் வரிகள் தனி. வாங்கிய அளவுக்கு நாம் காசு கொடுக்க வேண்டும். விற்றால், விற்ற அளவுக்குப் பணம் கொடுப்பார்கள் என்றெல்லாம் சொல்கிறீர்களே! இதிலென்ன அதிசயம்? வாங்கிய விற்ற அளவுகளுக்குத்தானே காசு என்றும், காசு கொடுக்கத்தானே வேண்டும் என்றும் கேட்கலாம்.

பங்குச் சந்தை ஏற்றம் இறக்கம்
பங்குச் சந்தை ஏற்றம் இறக்கம்

ஆம். இது வித்தியாசமானதுதான். மேலே சொல்லப்பட்டிருப்பவை, இன்ட்ராடேவோ டெலிவரியோ, இரண்டுமே கேஷ் மார்க்கெட் தொடர்பானவை. இப்படிப்பட்ட கேஷ் மார்க்கெட் வர்த்தகம் என்பது பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் வர்த்தகத்திலிருந்து சில விதங்களில் வேறுபட்டது.

ஒருவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்கை கேஷ் மார்க்கெட்டில் வாங்காமல், பியூச்சர்ஸ் மார்க்கெட்டில் வாங்க விரும்பினால், அவரால் ஒரு பங்கை மட்டும் வாங்க முடியாது. குறைந்தபட்சம் 500 பங்குகள் மற்றும் மேலே வாங்குபவை எல்லாம் 500-ன் மடங்குகளாகத்தான் வாங்க முடியும். இந்தப் பங்கை, குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில்தான் வாங்க முடியும் என்பதற்கு `மார்க்கெட் லாட்’ என்று பெயர். விற்பதற்கும் அதே அளவுதான்.

ரிலையன்ஸ், டி.சி.எஸ் நிறுவனங்களில் `PE மல்டிப்பிள்' எப்படியிருக்கிறது? #SmartInvestorIn100Days நாள்-57

குறைந்தபட்சம் ஒரு லாட் வாங்கலாம். லாட் என்பது, இப்போதைக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கிற்கு 500. இந்த மார்க்கெட் லாட் அளவு பங்கிற்கு பங்கு மாறுபடும். அப்படியென்றால், ஒருவர் பியூச்சர்ஸ்சில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வாங்கினால் 500க்கும் குறைவாக வாங்க முடியாது அல்லவா?

ஆம். வாங்க முடியாது.

ஒரு பங்கு விலை ரூ.1,500. ஐநூறு பங்குகள் விலை, ஏழரை லட்ச ரூபாய். 500 ரூபாய்க்கும் மேல் வாங்க வேண்டும் என்று நினைத்தால் மற்றுமொரு 500 எனும் லாட்தான், மற்றொரு ஏழரை லட்ச ரூபாய்!

விற்றாலும் லாட் லாட் ஆகத்தான் விற்க முடியும்.

லாட் சைஸ்
லாட் சைஸ்
MRF நிறுவனத்தின் ஒரு பங்கு விலையே, 65,000 ரூபாய் ஆயிற்றே! பியூச்சர்ஸ் மார்க்கெட்டில் அதன் லாட் சைஸ் (எண்ணிக்கை) என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்குமே. நூறு இருநூறு எல்லாம் இல்லை. MRF நிறுவன பங்கின் மார்க்கெட் லாட் 10தான். அதற்கே ஆறரை லட்ச ரூபாய் வேண்டும்.

எஸ் பேங்க் பங்கு விலை தற்சமயம் 44 ரூபாய்தான். அதன் மார்க்கெட் லாட், 8,800. ஆம், வாங்குவதும் விற்பதும் 8,800-ன் மடங்குகளாக 3 லட்சத்து 87,000 ரூபாய்.

இருந்தாலும் மக்கள் ஏன் பியூச்சர்ஸ் பகுதியில் வாங்குகிறார்கள், விற்கிறார்கள்? அதில் ஏதேனும் அனுகூலங்கள் இருக்கின்றனவா?

Vikatan

பியூச்சர்ஸ் மார்கெட்டில் லாட் சைஸ் அதிகம் என்று பார்த்தோம். ஆனாலும் மக்கள் அந்த வர்த்த்கத்திலும் ஈடுபடக் காரணம் இருக்கிறது. முதல் காரணம், வாங்குவதற்கும் விற்பதற்கும் கேஷ் மார்க்கெட்டில் செய்வதைப் போல முழுப்பணம் தேவையில்லை.

இதன் தொடர்ச்சியை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.