Published:Updated:

பங்குகளை வாங்கிய அன்றே விற்றாலும் வரி செலுத்த வேண்டுமா? #SmartInvestorIn100Days நாள் - 67

அரசு வசூலிக்கும் வரிகள்
News
அரசு வசூலிக்கும் வரிகள்

ஜி.எஸ்.டி வரிகள் மட்டும் தரகர் கமிஷன் தொகையின் மீது... மற்றவை எல்லாம் பங்குகள் வாங்கிய அல்லது விற்ற தொகை மீதே!

வாங்கும் பங்குகளை 12 மாதங்களுக்குப் பின் விற்றால், அந்த லாபத்தின் மீது வரியில்லை. வாங்கியதை டெலிவரி எடுத்து, அதாவது, வாங்குபவரின் டிமேட் கணக்குக்கு அந்தப் பங்கு வந்தபின் விற்று, அதில் லாபம் கிடைத்தால் அந்தத் தொகைக்கு 15 சதவிகித `ஷார்ட் டர்ம் கேப்பிடல் கெயின்ஸ் டேக்ஸ்’ உண்டு. இதை நேற்றைய அத்தியாயத்தில் பார்த்தோம்.

பங்குகளை 12 மாதங்களுக்கும் மேல் வைத்திருந்து விற்றால் மூலதன ஆதாய வரி இல்லை என்பது 2016 முதல் மாற்றப்பட்டிருக்கிறது. ஓராண்டில் கிடைக்கும் மூலதன ஆதாய த்தில் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு மட்டும் தான் வ ரி இல்லை. அதற்கு மேல் போகும் தொகைகளுக்கு 10% வரி.

வாங்கிய அன்றே விற்றால், அதன் பெயர் என்ன? அதில் கிடைக்கும் லாபத்துக்கு என்ன வரி?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதன் பெயர் ’டே டிரேட்’ அல்லது ’இன்ட்ரா டே டிரேட்’ என்று பங்குச் சந்தையில் சொல்வார்கள். ஆனால், வருமான வரிச் சட்டம் அதை, ’ஸ்பெக்குலேட்டிவ் பிசினஸ் இன்கம்’ என்று வகைப்படுத்துகிறது. எனவே, அந்த லாபம் ’மூலதன ஆதாயம்’ ஆகக் கருதப்படாது. அதை வருமானமாகத்தான் சட்டம் பார்க்கும். அதனால், அந்தத் தொகையை ஏனைய வருமானங்களுடன் சேர்த்து, வரம்புக்கு தகுந்த வரியைக் கட்ட வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் ஆகியவற்றில் வரும் லாபமோ நட்டமோ, அச்சட்டம், `பிசினஸ் இன்கம்’ அல்லது ’பிசினஸ் லாஸ்’ ஆகப் பார்க்கிறது. அதனால், அதற்குரிய அலுவலக மற்றும் ஏனைய செலவுகளை லாபத்தில் குறைத்துக்கொண்டு, மீதத் தொகைக்கு வரி கட்டினால் போதும். இதுவும் ஒருவர், அவருடைய வரம்பின்படி கட்ட வேண்டிய வரி.

பிசினெஸ் லாஸ்
பிசினெஸ் லாஸ்

இப்படிப்பட்ட, `பிசினஸ் கணக்கில்’ ஏற்படும் நஷ்டத்தை ஒருவர் அடுத்த எட்டு ஆண்டுகள் வரை `கேரி பார்வேர்ட்’ செய்யலாம். அப்படியென்றால், அவர் அந்த நஷ்டத்தை, எட்டு ஆண்டுகள் வரை அவரின் வருமான வரிக் கணக்கில் தொடர்ந்து காட்டி வரலாம். பின்னால், அந்த எட்டு ஆண்டுகளுக்குள் ஏதும் லாபம் வந்தால், அந்தத் தொகையில் ஏற்கெனவே ஏற்பட்ட நஷ்டத்தைக் கழித்துவிட்டு மீத தொகைக்கு மட்டும் வரி கட்டினால் போதும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவரை பார்த்தவை எல்லாம் லாபம் செய்தால் கட்ட வேண்டியவை குறித்து. இனி லாபமோ, நட்டமோ எதுவாக இருந்தாலும், வர்த்தகம் செய்யும்போது பங்கு விலைகள் போக, ஏற்படக்கூடிய செலவுகள் மற்றும் கட்ட வேண்டிய வரிகள் குறித்துப் பார்க்கலாம்.

இந்த வரிகளைத் தனிப்பட்ட நபர்கள் கட்ட வேண்டியதில்லை. பங்குகளை வாங்கினாலும் விற்றாலும் அங்கீகரிக்கப்பட்ட தரகர் மூலம்தான் செய்ய வேண்டும். அந்தத் தரகர், அந்த வரிப் பணத்தை, அரசு சார்பாக நம்மிடம் வாங்கி, அவர் கட்ட வேண்டும். அது அவர் பொறுப்பு.

பங்குகளை வாங்க, விற்க தரகர், அவருக்கு சர்வீஸ் சார்ஜ் எடுத்துக்கொள்வார். வீடு வாங்கும்போது கொடுக்கும் புரோக்கர் கமிஷன் போலதான் இதுவும். அது தரகருக்கு தரகர் வேறுபடும். சுமாராக அரை சதவிகிதம் இருக்கும். குறைவாக வசூலிக்கும் தரகர்களும் உண்டு. இது வரியில்லை. தரகு கமிஷன்.

அந்தத் தரகு கமிஷன் மீது, ஜி.எஸ்.டி வரி உண்டு. 18 சதவிகிதம். மேலும், செக்யூரிட்டி டிரான்சாக்ஸன் டேக்ஸ் எனப்படும் STT tax உண்டு. இந்த வரி பங்கை வாங்கும்போது கிடையாது. விற்கும்போது மட்டும் கட்ட வேண்டும். கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு 10 காசு என்பதுபோல 0.1 சதவிகிதமாக இருக்கும்.

பங்கு வர்த்தகத்தின் மீது அரசு வசூலிக்கும் வரிகள்.
பங்கு வர்த்தகத்தின் மீது அரசு வசூலிக்கும் வரிகள்.

மூன்றாவதாக, ஸ்டாம்ப் டியூட்டி என்று மொத்த கான்ட்ராக்ட் தொகையில் (வாங்கிய விற்ற தொகையில்) சுமார் 0.002 சதவிகிதம் போடுவார்கள். இந்த வரி, டெலிவரி டிரேட்களுக்கு கூடுதலாகவும், இன்ட்ரா டே டிரேட்களுக்கு குறைவாகவும் இருக்கும். தவிர, இந்த வரி மாநில அரசுகள் விதிக்கும் வரி என்பதால் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

நான்காவதாக, மொத்த தொகையின் மீது, `செபி டர்னோவர் டேக்ஸ்’ என்று, அது ஒரு 0.00015 சதவிகிதம் போடுவார்கள். (ஒரு கோடி ரூபாய்க்கு 15 ரூபாய்) இவை எல்லாமே ஒவ்வொரு வாங்குதலுக்கும் ஒவ்வொரு விற்றலுக்கும் உண்டு.

ஜி.எஸ்.டி வரி எதன் மீது?
ஜி.எஸ்.டி வரிகள் மட்டும் தரகர் கமிஷன் தொகையின் மீது. மற்றவை எல்லாம் பங்குகள் வாங்கிய அல்லது விற்ற தொகை மீது.

உதாரணத்துக்கு, 1,600 ரூபாய் வீதம் 100 ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் பங்குகளை 1,60,000 ரூபாய்க்கு வாங்கினால் 1,60,000 ரூபாய் மீது, ஜி.எஸ்.டி மற்றும் STT தவிர, மற்ற இரு வரிகளும் போடப்படும்.

இவற்றையும் சேர்த்ததுதான் வாங்கும் விலை. இவற்றைக் கழித்தால் வருவதுதான் விற்ற விலை.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.